நீங்கள் இருப்பது:முகப்பு\வருணா என்றால் என்ன?

வருணா என்றால் என்ன?

சட்டப்பூர்வமான அமைப்பு

 

ஆரோவில் பவுண்டேஷனின் ஒரு நிறுவனமான, வருணா நிறுவனத்தில் வருணா எனர்ஜி அண்ட் வாட்டர் பிரைவேட் லிமிடெட் மற்றும் வருணா ஆரோவில் ஆகியவை உள்ளன. இவற்றின் குறிக்கோள்களும் மேலாண்மையும் ஒன்றே ஆகும்.

 

பொது குறிக்கோள்கள்

 

வருணாவின் பொதுக் குறிக்கோள்கள் வருமாறு:

 

) புதுப்பிக்கவல்ல மின்சக்தி, நீடித்த நீர் மேலாண்மை ஆகியவற்றில் ஆரோவில்லை ஒரு முன்னோடியாக ஆக்குவதற்கு பங்களித்தல்.

 

) மின்சக்தி, தண்ணீர் தேவைகளில் ஆரோவில்லை ஒரு சுய உதவி பெற்றதாக ஆக்குதல்.

 

) ஆரோவில்லில் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை இலவசப் பொருட்களாக மாற்றுவதன் மூலம் ஆரோவில்லை ஒரு பணமில்லா சமூகமாக நிறைவேற்றுதவற்கு உதவுதல்.

 

) பண வடிவத்திலோ அல்லது இலவச அடிப்படை வளங்கள் வடிவத்திலோ ஆரோவில்லிற்கு ஒரு பொருள் மதிப்பை உண்டாக்குதல், ஆகவே ஆரோவில் அதன் அக, புற முன்னேற்றத்தில் பருநிலை அடித்தளத்தை நிறுவ முடியும்.

 

) தடையில்லா மின்சாரம் வழங்கல், அத்துடன் ஆரோவில்லின் எதிர்கால தண்ணீர் தேவைகளைப் பெறுவதற்கு ஆரோவில்லின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

 

) ஸ்ரீ அன்னையின் அகக்காட்சியின்படி தோட்டங்கள், பூங்காக்கள், மாத்ரிமந்திரில் ஒரு ஏரி, ஒரு குன்று, மற்றவை ஆகியவற்றுடன் ஒரு அழகிய நகராக ஆரோவில்லை உருவாக்குவதில் பங்களித்தல்.

 

) ஆரோவில்லில் வலுவான ஒரு தொழிற்துறையை அமைக்க பங்களித்தல், அது ஆரோவில்லின் பொருள் அடிப்படையின் பகுதியாக இருக்கும், மேலும் அது மற்ற நகரங்களைப் போல அல்லாமல், நகரின் அண்ட வடிவமைப்பு அகக்காட்சியை அழகான வழியில் ஒருங்கிணைப்பதன் மூலமாக ஆரோவில்லின் கட்டடக்கலை அழகை மேம்படுத்தும்.

 

குறிப்பிட்ட குறிக்கோள்கள்

    1. முதலாவது, ஆரோவில்லிற்கு ஒரு பசுமை மின்சாரப் பூங்காவை (பிரதானமாக காற்று, அதன் பின்னர் சூரியசக்தி) உருவாக்குது வருணாவின் நோக்கமாகும். இப்போதும், வருங்காலத்திலும் ஆரோவில்லின் மின்நுகர்வுத் தேவையை அது முழுவதும் பூர்த்திசெய்ய முடியும்.

    2. இரண்டாவது, மின்சாரத்தை இலவசமாக அளிப்பதன் மூலமாக ஆரோவில்லில் ஒரு பணமில்லா சமூகத்திற்கு உதவிசெய்வது நோக்கமாகும், முதலில் எல்லாச் சேவை நிறுவனங்கள், பிறகு அடுத்த கட்டத்தில் தனிநபர்கள், மற்ற நிறுவனங்களுக்கு வழங்குதல்.

    3. மூன்றாவது, ஆரோவில்லிற்கு, எதிர்காலத்தில் மாத்ரிமந்திர் ஏரி மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யக்கூடிய ஒரு சிறிய உப்புநீக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து இயக்குவது நோக்கமாகும்.

 

முன்னேற்றம்

 

        1. 15.08.2012 அன்றையபடி, தமிழ்நாட்டில் வருணா நான்கு காற்று மின்னியக்கிகளை அமைத்து இயக்கி வருகிறது, அது ஒவ்வொன்றும் 0.8 மெகாவாட் திறன் கொண்டது. 

 

பசுமை மின்சாரம்

 

வருணாவின் இந்நான்கு காற்று மின்னியக்கிகளும் 70 இலட்சம் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன, இது ஆரோவில்லின் தற்போதைய மின்சாரத் தேவையைவிட இரண்டு மடங்காகும், தேவையான மின்சாரம் ஆண்டுக்கு 35 இலட்சம் கிலோவாட் ஆகும்.

ஆரோவில் இப்போது வளிமண்டலத்தில் கரியமில வாயுவை வெளியாதலைத் தடுப்பதில் பங்காற்றி வருகின்றது.

 

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பல்வேறு முறைகளில் கரியமில வாயு (CO2) வெளியாதலின்வாழ்க்கை சுழற்சி பகுப்பாய்வுஒரு கிலோவாட் மணிக்கான (kWh) கிராம்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் மின்உற்பத்தி சாதனங்கள் தயாரித்தல், எரிசக்தி செயல்முறை ஆகியவை அடங்கும். இப்புள்ளிவிவரங்கள் பல்வேறு சாத்தியமான செயல்திறன்களின் சராசரியாகும், இவை இம்மின்உற்பத்தி நிலையங்களில் இருக்க முடியும்.

 

பழுப்பு நிலக்கரி – 1150 - 1200 கிராம்/கிலோவாட் மணி.

நிலக்கரி – 925 கிராம்/கிலோவாட் மணி

இயற்கை வாயு – 430 கிராம்/கிலோவாட் மணி

சூரியஒளி மின்சாரம் – 105 கிராம்/கிலோவாட் மணி

காற்று மின்சாரம் – 12 கிராம்/கிலோவாட் மணி

அணுஉலை மின்சாரம் – 6 கிராம்/கிலோவாட் மணி

புனல் மின்சாரம் – 4 கிராம்/கிலோவாட் மணி

 

வருணாவின் நான்கு காற்று மின்னியக்கிகளின் CO2 கால்தடம் சுமார் 70,00,000 x 12 கிராம் CO2 = 84 டன்கள் CO2.

 

ஆரோவில்லில் நுகரப்படும் மின்சாரம் பெரும்பாலும் பழுப்பு நிலக்கரியில் இருந்து உற்பத்தி ஆகிறது. பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி அதே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 8,400 டன்கள் CO2 உற்பத்தியாகிறது. ஆகவே, வளிமண்டலத்தினுள் வெளியிடப்படும் 8,316 டன்கள் CO2 நான்கு ஆரோவில் மின்னியக்கிகள் தடுக்கின்றன.

 

திட்டங்கள்

 

ஆரோவில்லினுள் பயன்பாட்டு மாற்றுகை

 

தமிழ்நாட்டில் உள்ள காற்று மின்னியக்கிகளின் உரிமையாளர்கள் அக்காற்றாலை தயாரிக்கும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு விற்பதற்கு சட்டப்படி கடமைப்பட்டவர்கள் ஆவர். சராசரி விற்பனை விலை ஒரு கிலோவாட் மணிக்கு ரூ.3.39. ஆனால், ஆரோவில் சேவைகள் வாங்கும் விலை ஒரு கிலோவாட் மணிக்கு ரூ.7 அல்லது அதற்கு மேல். ஆரோவில் நிறுவனம்பயன்பாட்டு மாற்றுகைக்குவிண்ணப்பித்துள்ளது, அதன் பொருள் என்னவெனில் மின்கட்டமைப்பிற்கு காற்று மின்னியக்கிகள் மூலம் உற்பத்திசெய்து அளிக்கப்படும் மின்சாரத்திற்கு நிர்வாகக் கட்டணம் போக, சமமான மின்சாரத்தை ஆரோவில் இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பதாகும். ஆயினும், இதைச் செய்வதற்கு, நிலத்தடி கேபிள்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றை வாங்கி அமைத்தல் போன்று ஆரோவில்லில் மின்சார உள்கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இது அனுமதிக்கப்பட்டால், உற்பத்திசெய்யும் மின்சாரத்தை வருணா மேற்கொண்டு விற்கத் தேவையில்லை, ஆரோவில்லிற்கு மின்சார பில்களுக்கு அது நன்கொடை அளிக்கும்.

  

 

உற்பத்திசெய்யும் மின்சாரத்தின் கட்டுப்பட்ட விற்பனை

 

குறைவான விலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பணம் செலுத்தவதில் தாமதம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மற்ற கூட்டாளிக்கு அதிக விலையில் மின்சாரத்தை விற்பதற்கு அனுமதிக்கும், ஒரு கூட்டுக்கான வழியை வருணா முயற்சி செய்து வருகின்றது.

 

புதுப்பிக்கவல்ல எரிசக்தி சான்றிதழ்கள்

 

மின்சார உற்பத்திக்கு புதுப்பிக்கவல்ல எரிசக்தி சான்றிதழ்களைப் பெற வருணா முயற்சி செய்து வருகின்றது.

 

ஆரோவில்லிற்கான ஒரு உப்புநீக்கும் சுத்திகரிப்பு நிலையம்

 

ஆரோவில்லும் கடற்கரை கிராமங்களும் பயன்பெறுவதற்காக கடற்கரையில் ஒரு உப்புநீக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது, அதன் அடிப்படையில் பல்வேறு அனுமதிகள் பெற விண்ணப்பிக்கப்படும். இதற்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம்.

கடற்கரையில் இருந்து ஆரோவில்லின் மையப் பகுதிக்கு எவ்வாறு குழாய்களை அமைக்கலாம் என்பதற்கான பல்வேறு வழிகளை வருணா கண்டறிந்து வருகின்றது.

நிலத்தடிநீர், மழைநீர், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ஆகியவற்றுடன் மேலும் ஒரு சாத்தியமான நீர் ஆதாரத்தை அளித்து ஆரோவில்லின் நீர் மேலாண்மைக்கு இத்திட்டம் பங்களிக்கும்.

வெகுவிரைவில் நிலத்தடி நீர்கொள்படுகைகளில் உப்புநீராக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், கடலோர கிராமங்களில் குடிநீர் விநியோகத்திற்கும் இத்திட்டம் முக்கியமாகும்.

இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இந்நிலையம் இயங்கத் தொடங்கும் நிலையில் இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.

 

சூரிய மின்சக்தி நிலையம்

 

ஆரோவில்லில் தொழிற்கூட மண்டலத்தில் 1.2 மெகாவாட் திறன்கொண்ட ஒரு சூரிய மின்சக்தி நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேநேரம், இடத்திற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையம் மின்கட்டமைப்பினுள் மின்சாரத்தை செலுத்தும் நிலையமாகப் பார்க்கப்படுகிறது. இப்பரிமாணத்தில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் சூரியச்சக்தி மின்சாரத்தை மின்கட்டமைப்பினுள் செலுத்துவதற்கான ஒரு மின்சாரம்-கொள்முதல் ஒப்பந்தம் பற்றி விவாதங்கள் தொடங்கியுள்ளன.

 

ஆரோவில்லிற்குச் சொந்தமான ஒரு சிறு மின்கட்டமைப்பிற்கு பங்களிப்பு

 

ஆரோவில்லில் உள்ள மின்சார கட்டமைப்பை, த.நா.மி.வா-க்குச் சொந்தமான பொது மின்கட்டமைப்பில் இருந்து ஆரோவில்லிற்குச் சொந்தமான தனிப்பட்ட “சிறு-மின்கட்டமைப்பு“ ஆக மாற்றப்பட வேண்டும். இது செய்யப்பட்டதும், தடையில்லா மின்சார விநியோகத்தைப் பெற, ஆரோவில் ஒரு கூட்டு மின்சார காப்பமைப்பை உருவாக்க முடியும். ஆரோவில் மின்சார அமைப்பில் இந்த மாற்றத்திற்கான திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுதலில் பங்குபெற வருணா எண்ணியுள்ளது.