ஆரோவில்லில் செய்த வைரம்

வைரங்களின் குறியீட்டியம் குறித்து ஸ்ரீ அரவிந்தர்:

அன்னையின் செறிவு ஒளி

 

 இந்தியாவிற்கும் வைரத்திற்கும் பல மில்லியன் ஆண்டு பழைமை கொண்ட அன்பான உறவு இருக்கிறது. வைரத்தின் வரலாறு இந்தியாவின் வரலாறு. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும்தான் வைரங்களைப் பற்றி அறியப்பட்டு மற்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வெளியெ கச்சா வைரம் பிரேசிலில் 1725 ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை அனைத்து வைரமும் இந்தியாவில் இருந்து வந்த வைரம் தான். பழங்கால இந்தியாவில் வைரம் பெருமதிப்புடைய பொருளாக மட்டும் இருந்திராமல், அது அதனின் பணமான ருபாகாவை நிர்ணயிப்பதிலும், நாட்டினுடய சமூக மற்றும் வணிக வாழ்வில் ஆட்சிசெய்வதிலும், மேலும் மருத்துவம் மற்றும் அறிவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் இந்தியாவுக்கும் வைர தொழிலுக்கும் திடமான இணைப்பு உள்ளது. டீ மற்றும் ஜவூளியை தொடர்ந்து இந்த தொழில்தான் இந்தியாவின் அதிக வெளிநாட்டு பணபறிமாற்ற வருவாய் ஈட்டுபவராக உள்ளது. உலகளவில் 10 ல் 9 வைரம் இந்தியாவில் பட்டைதீட்டப்படுகிறது. இந்தியாவில் சுமார் 900,000 வைரம் அறுக்கும் தொழிலாளர்கள் உள்ளனர், 5 மில்லியன் வைரங்கள் தினமும் பட்டைதீட்டப்படுகிறது. இன்று உலக வைர வர்த்தகம் இந்தியாவின் வியாபார சமூகத்தின் கையில் வலிமையோடு இருக்கிறது.

 

பலரும் நினைப்பதுபோல வைரங்கள் வெறும் விலைமதிப்புடைய கார்பனின் துண்டுகள் அல்ல, வைரமே உலகின் ஒரு முக்கியத்துவமான பொருள். வைரம் மற்ற பொருள்களைவிட பல உயர்ந்த அமைப்புகளை பெற்றுள்ளது. மூன்றை மட்டும் குறிப்பிடுகையில் வைரம் அதிகமான ஒளிவிலகும் எண் கொண்டுள்ளது, அதனால்தான் வைரம் மிகவும் செறிவாக பிரகாசிக்கிறது.

அறியப்பட்ட மிக கடினமான இயற்கைப் பொருள் வைரம்; மேலும் வைரம் சிறந்த வெப்பம் கடத்தும் பொருளாகவும் இருக்கிறது. வேறு எந்த பொருளும் வைரத்தை போல வெப்பத்தை கடத்தாது. வேறு பல மிக உயர்வானவை கூட குறைவான பிரகாசமுடையாக உள்ளது. பொருளமைப்பில் பல உயர்ந்த குணங்களை கொண்ட ஒரு பொருள் மறைவியலான பல சிறப்பான அம்சங்களை கொண்டிருக்கும். உண்மையில், எடுத்துக்காட்டாக, வைரம் சிறந்த வெப்பம் கடத்தி, அதாவது இது இயற்பியல் ஆற்றல் கடந்து செல்ல சிறந்த தடமாக இருக்கிறது, மேலும் இது மற்ற வகை ஆற்றலுக்கும் ஒரு தடமாக இருக்குமென கருதலாம்.இன்றைய அறியாமை சமூகம் துரதிருஷ்டவசமாக பெரும்பான்மையாக மறைவியல் அளவிலான இயற்பியலைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் வைரத்தை பொருத்தளவில் அப்படி இருக்கவில்லை. ஏனென்று தெரியாமலே, வைரத்தினுடைய உயர் நிலையையும் மற்றும் நம் சமூகத்தில் வைரம் கொண்டுள்ள மரியாதையையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.பூமியில் வைரம் பல, பல நூற்றாண்டுகளாக மிகவும் விலைமதிப்புடைய பொருளாக இருக்கிறது, அதிகம் விரும்பப்படுவதாகவும், மதிப்பில் நிரந்தரமாகவும் உள்ளது. வைரம் மூவாயிறம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இன்றும் முழுமை, அழகு, மதிப்பு, நிரந்தரம், வலிமை மற்றும் பொருட்களில் இணக்கம் ஆகியகளை கொண்டு விளங்குகிறது.

 

வைரங்களை உடமையாக கொள்வது அல்லது அணிந்துகொள்ளும் மகிழ்ச்சி, தெரிந்தோ தெரியாமலோ, வைரம் கொண்டிருக்கும்: தனித்த நிரந்தர தன்மை, உண்மையான மதிப்பு, அழகு, முழுமை மற்றும் ஒன்றினுடைய சாரம்சத்தின் பெரும் புகழ் ஆகியவற்றின் மீதான ஒரு நாட்டத்தின் வெளிப்பாடு.

 

மற்ற வேலைகள் செய்வதைப்போலவே வைரங்களுடன் பணிபுரிவதும், ஒரு நபரை முழுமையாக்கிறது. வைரங்களுடன் பணிபுரிவதால் வைரத்தின் சில அம்சங்கள் உங்களிடம் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கிறது. ஆரோவில் வைரங்களுடன் வேலை செய்ய ஆரம்பித்தவுடன், ஆரோவில்லில் இருந்து செல்லும் வைரம், சேருமிடத்திற்கு செல்லும் முன் ஆரோவில்லில் மறைவியலாகவும் பொருள் அளவிலும் எதையாவது விட்டுச்செல்லும். நாம் தீவிரமான தவறுகளை செய்யவில்லையென்றால், வைரம் விட்டுச்செல்லுவது – மதிப்பு, நிரந்தரம், அழகு, முழுமை, இணக்கம் மற்றும் பொருட்களில் சரிசமநிலை. மேலும், நம்பிக்கையுடன், ஸ்ரீ அரவிந்தர் கூட என்ன சொல்கிறாரென்றால், வைரம் என்றால், அதாவது ”அன்னையின் செறிவு ஒளி”.