வைரத்தின் கரிம அடித்தடம்

வைரத் தொழிலில் வேலை செய்யும்பொழுது, அதேநேரத்தில் நாம் என்ன செய்கிறோம், நாம் எவ்வாறு வசிக்கிறோம் என்கின்ற சுற்றுச்சூழல் தாக்கத்தைப் பற்றிய உணர்வுடன், வைரங்களின் கரிம அடித்தடம் என்றால் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வுடன் நாம் இருக்கவேண்டும். இக்கேள்வி மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது:

) மற்ற ஆடம்பரப் பொருட்களை உற்பத்திசெய்யும்போது ஒப்பிடும்கையில், ஒரு வைரம் உண்டாக்கும் கரிம அடித்தடம் என்ன?

) மற்ற ஆடம்பரப் பொருட்களின் ஒப்பிடும்போது, ஒரு வைரத்தை விற்ற பிறகு, அது உண்டாக்கும் கரிம அடித்தடம் என்ன?

) உலக சுற்றுச்சூழல் சூழ்நிலையில் வைரத் தொழிலால் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவு என்ன?

 

கரிம அடித்தடம்என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை புரிந்துகொள்ள அச்சொல்பற்றிய விளக்கம் இங்கே வருமாறு:

ஒரு நிறுவனம், நிகழ்வு, உற்பத்தி பொருள் அல்லது நபரால் ஏற்படும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் மொத்த தொகுப்புகரிம அடித்தடம் என்று வரலாற்றுரீதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், பெரிய அளவில் தரவு தேவைப்படும் என்பதால் மொத்த கரிம அடித்தடத்தை கணக்கிடுவது என்பது முடியாதது, ரைட், கெம்ப் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் கரிம மேலாண்மை (Carbon Management) என்னும் இதழில் மிகவும் நடைமுறைக்கேற்ற வரையறை ஒன்றை யோசனை தெரிவித்து எழுதியுள்ளனர்:

ஒரு வரையறுக்கப்பட்ட மக்கள்தொகை, அமைப்பு அல்லது செயல்பாட்டுக்கு தொடர்புடைய அனைத்து ஆதாரங்கள், அந்த மக்கள்தொகை, அமைப்பு அல்லது செயல்பாட்டின் ஈடுபாடு இடம்சார்ந்த, தற்காலிக எல்லைக்குள் அமைந்துள்ள நீர்த்தொட்டிகள் மற்றும் சேமிப்பகம் இவற்றிலிருந்து உமிழப்படும் கரியமில வாயு (CO2) மற்றும் மீத்தேன் (CH4) வாயு ஆகியவற்றைக் கணக்கில்கொள்ளப்படும் மொத்த அளவின் ஓர் அளவீடு ஆகும். 100 ஆண்டு உலக வெப்பமயமாதல் திறனுக்கு (GWP100) தொடர்புள்ள கரியமில வாயு சமதிறன் (CO2e) கணக்கிடப்படுகிறது.“

கரிம அடித்தடங்களுக்கு இடையே தொடர்புள்ள வேறுபாடுகளைப் பற்றிய ஓர் உணர்வு பெற, இங்கே சில உதாரணங்களும் விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன.

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சராசரி வீட்டில் பெரும்பாலான கரிம அடித்தட உமிழ்வுகள்மறைமுகஆதாரங்களில் இருந்து வருகின்றன. அதாவது, கடைசி வாடிக்கையாளரிடம் இருந்து தொலைதூரத்தில் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக எரிக்கப்படும் எரிசக்தி. நுகர்வோரின் கரிம அடித்தடத்தின்நேரடிஆதாரங்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படும் ஒருவரின் கார் அல்லது சமையல் அடுப்பில் இருந்து நேரடியாக எரிக்கப்படும் எரிசக்தியின் உமிழ்வுகளில் இருந்து இவை வேறுபட்டவை.

 

ஓர் ஆண்டுக்கு ஒருவரின் சராசரி கரியமில வாயு (CO2) உமிழ்வு மெட்ரிக் டன்னில்.

அண்மையத் தரவு காண்பிக்கப்பட்டுள்ளது.

 

தரவரிசை நாடுகள் அளவு
1    ஐக்கிய அமெரிக்கா (யு.எஸ்): 19.1  
2    ஆஸ்திரேலியா: 18.8  
3    கனடா: 17.4  
4    செக் குடியரசு: 11.8  
5    இரஷ்யா: 11.2  
6    நெதர்லாந்து: 11.1  
7    தென்கொரியா: 10.1  
8    பெல்ஜியம்: 10  
= 9    ஜெர்மனி: 9.7  
= 9    ஜப்பான்: 9.7  
11    போலந்து: 8  
12    ஸ்பெயின்: 7.7  
13    இத்தாலி: 7.4  
14    தென்னாப்பிரிக்கா: 7.3  
15    பிரான்சு: 5.8  
16    சீனா: 4.6  
17    மெக்சிகோ: 4.1  
18    துருக்கி: 3.6  
19    பிரேசில்: 1.8  
20    இந்தியா: 1.2  
எடையிட்ட சராசரி 9.0  

 

தற்போதைய உலக மக்கள்தொகை அளவில் ஒவ்வொரு நபரும் தனது கரிம அடித்தட உமிழ்வு அளவை ஆண்டுக்கு 2.5 டன் கரியமில வாயு என்ற அளவில் வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வானிலை சீர்குலைவைத் தவிர்க்க முடியாது என்றும் சில அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஓர் ஆண்டுக்கு ஒரு நாட்டின் சராசரி கரியமில வாயு (CO2) உமிழ்வு 1000 மெட்ரிக் டன்னில்.

 

அண்மையத் தரவு காண்பிக்கப்பட்டுள்ளது.

 

தரவரிசை நாடுகள் அளவு
1    ஐக்கிய அமெரிக்கா (யு.எஸ்): 5,762,050 
2    சீனா: 3,473,600 
3    இரஷ்யா: 1,540,360 
4    ஜப்பான்: 1,224,740 
5    இந்தியா: 1,007,980 
6    ஜெர்மனி: 837,425 
7    ஐக்கிய இராச்சியம் (யு.கே): 558,225 
8    கனடா: 521,404 
9    இத்தாலி: 446,596 
10    மெக்சிகோ: 385,075 
11    பிரான்சு: 363,484 
12    உக்ரைன்: 348,357 
13    தென்னாப்பிரிக்கா: 344,590 
14    ஆஸ்திரேலியா: 332,377 
15    பிரேசில்: 327,858 
16    ஸ்பெயின்: 304,882 
17    போலந்து: 303,778 
18    இந்தோனிஷியா: 286,027 
19    சவுதி அரேபியா: 266,083 
20    துருக்கி: 223,862 
21    நெதர்லாந்து: 174,809 
22    தாய்லாந்து: 171,696 
23    வடகொரியா: 168,320 
24    அர்ஜென்டினா: 138,983 
25    வெனிசுலா: 136,686 
26    எகிப்து: 127,130 
27    பெல்ஜியம்: 125,023 
28    செக் குடியரசு: 124,069 
29    கஜகஸ்தான்: 123,686 
30    மலேசியா: 123,603 
31    உஸ்பெகிஸ்தான்: 121,045 

 

ஒரு நாட்டின் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்திக்கு தொடர்பான கரியமில வாயு உமிழ்வு (CO2).  சம்பந்தப்பட்ட நாடு ஈட்டிய ஒரு டாலருக்கு தொடர்பான கரிம உமிழ்வை இது குறிக்கிறது.

 

(மொத்த கரிம உமிழ்வு மற்றும் அதன் தனிநபர் கரிம நுகர்வு தொடர்பாக மாசுபடுத்துதலில் யுஎஸ்ஏ 1வது இடத்தை வகிக்கிறது, அந்நாட்டில் ஈட்டப்படும் பணத்திற்கு தொடர்பான கரிம உமிழ்வில் அது 39வது இடத்தை மட்டுமே வகிக்கிறது என்பதை தயவுசெய்து கவனிக்கவும். முக்கியமாக இது ஏனெனில், சீனா அல்லது ஜெர்மனியுடன் ஒப்பிடும்போது யுஎஸ் பொருளாதாரத்தில் உற்பத்தி அதிகம் இல்லை. முக்கியமாக சேவைகள், நிதி நடவடிக்கைகள் போன்றவற்றை யுஎஸ் பொருளாதாரம் சார்ந்துள்ளது).

 

தரவரிசை நாடுகள் உலகின் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) சதவீதம் உலகின் மொத்த கரியமில வாயு (CO2) உமிழ்வில் (சதவீதம் உலக உற்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி சதவீத விகிதத்திற்கு உலக கரியமில வாயு (CO2) உமிழ்வுகள் சதவீதம்
1 சுவிட்சர்லாந்து 0.870 0.169 5.142
2 ஸ்வீடன் 0.868 0.215 4.039
3 ஐஸ்லாந்து 0.034 0.009 3.794
4 பிரான்சு 5.017 1.567 3.200
5 டென்மார்க் 0.602 0.197 3.050
6 பெல்ஜியம் 0.878 0.292 3.001
7 நார்வே 0.646 0.229 2.812
8 ஆஸ்திரியா 0.720 0.264 2.729
9 சீனா மக்கள் குடியரசின் ஹாங்காங் எஸ்..ஆர் 0.391 0.146 2.665
10 அயர்லாந்து குடியரசு 0.467 0.179 2.611
11 கேமரூன் 0.035 0.014 2.482
12 இத்தாலி 4.157 1.794 2.316
13 ஐக்கிய இராச்சியம் (யு.கே) 5.196 2.253 2.306
14 ஜப்பான் 10.865 4.988 2.178
15 நெதர்லாந்து 1.424 0.674 2.112
ஐரோப்பிய யூனியன் 31.531 15.264 2.065
16 லக்சம்பர்க் 0.080 0.039 2.060
17 ஸ்பெயின் 2.536 1.262 2.009
18 ஜெர்மனி 6.580 3.335 1.973
19 டான்சானியா 0.027 0.014 1.848
20 கோஸ்டரிகா 0.044 0.024 1.831
21 பின்லாந்து 0.462 0.259 1.781
22 உருகுவே 0.029 0.016 1.755
23 நியூஜிலாந்து 0.243 0.140 1.730
24 அங்கோலா 0.054 0.031 1.692
25 போர்ச்சுகல் 0.419 0.258 1.623
26 சூடான் 0.057 0.036 1.582
27 பெரு 0.165 0.105 1.561
28 எல் சால்வடோர் 0.037 0.025 1.455
29 குவாத்தமாலா 0.061 0.042 1.430
30 சைப்ரஸ் 0.038 0.027 1.403
31 கிரீஸ் 0.522 0.390 1.338
32 லத்வியா 0.034 0.026 1.332
33 கென்யா 0.038 0.029 1.280
34 பிரேசில் 1.657 1.300 1.274
35 பனாமா 0.032 0.025 1.253
36 சுலோவேனியா 0.079 0.063 1.252
37 இலங்கை 0.050 0.042 1.178
38 கனடா 2.486 2.143 1.160
39 ஐக்கிய அமெரிக்கா (யு.எஸ்) 28.162 24.339 1.157
40 சிங்கப்பூர் 0.263 0.238 1.105
41 ஆஸ்திரேலியா 1.567 1.476 1.061
42 கொலம்பியா 0.246 0.237 1.035
43 ஹங்கேரி 0.242 0.234 1.033
44 லிதுவேனியா 0.053 0.052 1.030
45 மெக்சிகோ 1.617 1.590 1.017
46 இஸ்ரேல் 0.278 0.274 1.013
உலகம் 100 100 1
47 பங்களாதேஷ் 0.140 0.143 0.979
48 சிலி 0.229 0.237 0.967
49 நைஜீரியா 0.207 0.215 0.961
50 குரோஷியா 0.079 0.087 0.907
51 துருக்கி 0.770 0.862 0.893
52 தென்கொரியா 1.631 1.849 0.882
53 டுனிசியா 0.072 0.091 0.791
54 கானா 0.023 0.031 0.751
55 அர்ஜென்டினா 0.389 0.552 0.705
56 ஈக்குவடார் 0.072 0.102 0.702
57 லெபனான் 0.046 0.067 0.689
58 சுலோவேகியா 0.113 0.166 0.686
59 பிலிப்பைன்ஸ் 0.209 0.305 0.685
60 மொராக்கோ 0.123 0.181 0.679
61 ஏமன் 0.034 0.053 0.639
62 வெனிசுலா 0.276 0.448 0.617
63 செக் குடியரசு 0.284 0.474 0.599
64 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 0.233 0.390 0.597
65 அல்ஜீரியா 0.220 0.381 0.578
66 போலந்து 0.706 1.228 0.575
67 குவைத் 0.139 0.248 0.560
68 டொமினிக்கன் குடியரசு 0.048 0.089 0.544
69 ஜிம்பாப்வே 0.027 0.051 0.537
70 இந்தோனேஷியா 0.643 1.270 0.506
71 ருமேனியா 0.180 0.359 0.502
72 கடார் 0.071 0.151 0.472
73 மலேசியா 0.289 0.624 0.463
74 சவுதி அரேபியா 0.645 1.411 0.456
75 ஓமன் 0.056 0.124 0.454
76 பாகிஸ்தான் 0.204 0.450 0.453
77 எஸ்டோனியா 0.027 0.066 0.421
78 தாய்லாந்து 0.395 0.961 0.411
79 ஜோர்டான் 0.027 0.069 0.388
80 வியட்நாம் 0.106 0.274 0.388
81 தென்னாப்பிரிக்கா 0.512 1.431 0.358
82 லிபியா 0.074 0.208 0.357
83 எகிப்து 0.207 0.595 0.348
84 பல்கேரியா 0.058 0.173 0.338
85 இந்தியா 1.696 5.060 0.335
86 செர்பியா மற்றும் மாண்டிநேக்ரோ 0.059 0.192 0.308
87 பஹ்ரைன் 0.026 0.088 0.301
88 ஈரான் 0.441 1.493 0.296
89 இரஷ்யா 1.710 5.937 0.288
90 சீன மக்கள் குடியரசு (பெருநிலப்பகுதி மட்டும்) 4.172 14.561 0.286
91 சிரியா 0.058 0.203 0.285
92 பெலாரஸ் 0.061 0.248 0.246
93 துருக்மெனிஸ்தான் 0.031 0.143 0.218
94 அஜர்பைஜான் 0.024 0.116 0.209
95 கஜகஸ்தான் 0.117 0.613 0.191
96 டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.030 0.170 0.179
97 உக்ரைன் 0.187 1.271 0.147
98 உஸ்பெகிஸ்தான் 0.024 0.507 0.049

 

) மற்ற ஆடம்பரமான பொருட்களின் உற்பத்தி செய்யும்போது ஒப்பிடுகையில், ஒரு வைரம் உண்டாக்கும் கரிம அடித்தடம் என்ன?

மற்ற ஆடம்பரப் பொருட்கள் அல்லது நுகர்வோர் பொருட்களுடன் வைரங்களின் கரிம அடித்தடங்களை ஒப்பிடுவதற்கு முதலில் உற்பத்தி செயல்முறையின் கரிம அடித்தடங்களை நாம் கவனிக்கவேண்டும். வைரங்களை உருவாக்க எவ்வளவு கரியமிலவாயு (CO2)  உமிழப்பட்டது?

 

ஒரு புதிய காரின் கரிம அடித்தடம்:

 

 

6 டன் CO2e: சிட்ரோயன் C1 அடிப்படை தரவரைவு

17 டன் CO2e: ஃபோர்டு மோன்டியோ, நடுத்தர தரவரைவு

35 டன் CO2e: லேண்ட் ரோவர் டிஸ்கவரி, அளவிற்கு மேல்

 

ஒரு வீடு கட்டுவதற்கான கரிம அடித்தடம் என்ன?

80 டன் CO2e: புதிதாக கட்டப்பட்ட இரண்டு படுக்கை குடில்

ஒரு வீடு கட்டுவதற்கான கரிம அடித்தடம் அதன் அனைத்து வகைப் பொருட்களையும் சார்ந்துள்ளதுநிச்சயமாக, வீட்டின் அளவு, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் வகை உட்பட.

மேலே கொடுக்கப்பட்டுள்ள 80 டன் மதிப்பீடு, இரண்டு படுக்கைகள் கொண்ட மேல்மாடி, இரண்டு வரவேற்பு அறைகள், கீழ்தளத்தில் ஒரு சமையலறை கொண்ட ஒரு புத்தம் புதிய குடிலைக் கட்டுவதற்கு ஆனது.

 

ஒரு வைரத்தின் கரிம அடித்தடம் என்ன?

 

ஒரு நடுத்தர வர்க்க கார் (40,000 யூரோ) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரடுமுரடான வைரங்களை சுரங்கத்திலிருந்து எடுத்து மெருகூட்டுவதற்கு ஆகும் சுமார் 1 டன் CO2e எடுத்துக் கொள்கிறது.

 

ஒரு வைரம் பட்டைதீட்டிய பிறகு, அது மேற்கொண்டு கரிம உமிழ்வு எதையும் செய்வதில்லை. ஆயினும், அதைப் பதப்படுத்தும்போது, குறிப்பாக அதை பூமியில் இருந்து தோண்டியெடுக்கும் செயல்முறையின்போது, அதுவும் கரியமில வாயு (CO2) உமிழ்வை ஏற்படுத்துகிறது. பல சந்தர்ப்பங்களில் (எல்லாவற்றிலும் அல்ல), ஓர் ஆழமாக குழிதோண்டி (650 மீட்டர் ஆழம் வரை) வைரத்தை எடுக்கவேண்டி உள்ளது, பெரிய டிரக்குகள் மூலம் மேற்புறத்திற்கு கொண்டுவர வேண்டியுள்ளது. தாய்ப்பாறையில் காணப்படுகின்ற வைரங்கள், வழக்கமாக 1 டன் கிம்பர்லைட்டில், 0.5 ct இலிருந்து 1 ct வரை வைரம் காணப்படுகிறது. ஆகவே, ஒரு வைரக் குழியின் சுழல் சாலைகளின் வழியில் செல்லும் 20 டன் டிரக்குகளில் ஒரு டிரக்கு சுமையில், அதாவது 10 இலிருந்து 20 ct வைர மூலப்பொருளை நீங்கள் காணலாம், அதிலிருந்து கடைசியாக 3 முதல் 8 ct பட்டைதீட்டிய வைரங்கள் உங்களுக்கு கிடைக்கும். தாய்ப் பாறையை தொழிற்சாலைக்கு ஏற்றிவந்த பிறகு, அதை உடைத்து, வைரங்கள் கழுவப்பட்டு, கிம்பர்லைட்டில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட வேண்டும். வைரங்களின் சில்லறை மதிப்பு 40,000 யூரோ, மொத்தமாக சுமார் 1 டன் கரியமில வாயு (CO2) உமிழ்வு ஏற்படுகிறது என்று நாம் மதிப்பிடுகிறோம்.  

 

அதன் உருவாக்கத்தில்:

கார்களை ஒப்பிடும்போது வைரங்களின் கரிம அடித்தடம் 1: 17

வீடுகளை ஒப்பிடும்போது வைரங்களின் கரிம அடித்தடம் 1: 8

 

) மற்ற ஆடம்பரப் பொருட்களை ஒப்பிடும்போது, ஒரு வைரத்தை விற்ற பிறகு, அது உண்டாக்கும் கரிம அடித்தடம் என்ன?

 

ஒருமுறை ஒரு வைரம் தோண்டப்பட்டு, வெட்டப்பட்டு, பட்டைதீட்டப்பட்டதும், அது மேற்கொண்டு கரிம உமிழ்வு எதையும் ஏற்படுத்தாது. நாம் வாங்கும் பெருமதிப்புமிக்க ஆடம்பரப் பொருட்கள் பல, அவை உற்பத்தி செய்யும்போது கரிம அடித்தடத்தைப் பெற்றுள்ளது மட்டுமின்றி, அவற்றின் வாழ்நாள் முழுதும் அதைப் பெற்றிருக்கும். ஒரு கார் தயாரிப்பின்போது உமிழும் கரியமில வாயு (CO2) அளவிற்கு (அல்லது அதற்கு மேல்) அதன் வாழ்நாள் முழுவதும் உற்பத்தி செய்கிறது. அதேபோல குடியிருப்பு சொத்துக்களுக்கு: மிகப் பெரிய, மிக ஆடம்பரமான ஒரு வீட்டை பராமரித்தல், வெப்பப்படுத்துதல், விளக்குகள் அல்லது குளிர்சாதனம் ஆகியவற்றுக்கு அதிக எரிசக்தி தேவை. ஆகவே, பல பாரம்பரிய ஆடம்பர பொருட்களான கார்கள், தனி விமானங்கள், படகுகள், சொத்துக்கள் ஆகிய அவற்றை உற்பத்தி செய்யும்பொழுது மட்டுமின்றி, அவற்றின் வாழ்நாள் முழுவதும் உயர்ந்த அளவு கரிம உமிழ்வை உண்டாக்குகிறது.

 

பல ஆடம்பரப் பொருட்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் அதிக அளவு கரியமில வாயு (CO2) உமிழ்கின்றன, ஆனால் வைரங்கள் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு அதற்கான கரிம அடித்தடம் பூஜ்யம் ஆகும்.

 

) உலக சுற்றுச்சூழல் சூழ்நிலையில் வைரத் தொழிலால் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவு என்ன?

 

சுற்றுச்சூழலை நாம் நோக்கும்போது இன்றைய உலகளாவிய கரிம அடித்தடம் மற்றும் சுற்றுச்சூழலில் வைரங்களுக்கு உள்ள பங்கின் இரண்டு அம்சங்களை நாம் எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது:

) ஒரு சமூகத்தில் தனது அந்தஸ்தை வரையறை செய்ய பெருமதிப்புமிக்க பொருட்கள் தேவை என மனிதன் பார்க்கிறான். கற்காலத்தில் அது உடல் வலிமையாக இருந்தது, இன்று அது செல்வமாக உள்ளது, அதை வைத்து சமூகத்தில் தான் எந்த இடத்தில் இருக்கிறான் என்பதை மனிதன் வரையறை செய்துகொள்கிறான். தன் நிலையை மற்றவர்கள் காணச்செய்வதற்கு, அவன் ஆடம்பரமான பொருட்களை அல்லது பெருமதிப்புமிக்க பொருட்களை நாடுகிறான். கார்கள், சொத்துகள், தனி விமானங்கள், படகுகள் மற்றும் நகைகள், குறிப்பாக வைரங்கள் ஆகியவை இதுபோன்ற வழக்கமான பொருட்களாக இருக்கின்றன. ஏறத்தாழ எல்லா ஆடம்பரப் பொருட்களுமே வைரங்களைவிட (ஓவியம் ஒன்றைத் தவிர) மிக அதிக அளவு கரிம அடித்தடத்தை உடையன, அவற்றின் தயாரிப்பு செயல்முறையிலும், அவற்றைப் பயன்படுத்தும்போது இன்னும் அதிகமாகவும் கொண்டுள்ளன. ஆகவே, ஆடம்பர சந்தையில் வைரம் பெருமளவு பங்கைப் பிடித்து வெற்றிகொண்டால், அது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது.

) 100 ஆண்டுகளுக்கு முன்பு மனிதஇனத்தின் மக்கள்தொகை 1.5 பில்லியன் ஆகும். இன்றைக்கு 7 பில்லியன் மக்கள் ஆகும். இன்னும் 100 ஆண்டுகளில் தற்போதைய விகிதப்படி வளர்ச்சி இருந்தால் கோட்பாட்டளவில் நாம் 50 பில்லியன் ஆவோம்! அத்தகைய நிலை வருமானால் நமது கோள் எவ்வாறு காட்சியளிக்கும்? 100 ஆண்டுகளுக்கு முன் மனிதஇனத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரச் செயல்பாடு இன்றைக்கு உள்ள அளவில் 2% -க்கு குறைவாகவே இருந்திருக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகள் காலத்தில் நமது உலகளாவிய பொருளாதார செயல்பாடு இன்றைக்கு உள்ளதைவிட 50 மடங்கு இருந்தால் நமது கோள் எவ்வாறு காட்சியளிக்கும்? அதுபற்றி அரிதாகவே எண்ணப்படுகிறது!

ஆகவே, நமது மிகப்பெரும் பிரச்சினைகளில் ஒன்று, கடைசியாக நமது நாகரீகத்தை கொல்லக்கூடியதான பொருளாதார வளர்ச்சி ஆகும். மேலும் பொருளாதார வளர்ச்சி நமது பணத்தால் இயக்கப்படும் பொருளாதாரத்தின் ஒரு முறைப்படுத்தப்பட்ட அம்சமாகத் தெரிகிறது.

நமது பொருளாதாரத்தின் அடிப்படை விதி என்னவெனில் வர்த்தகச் செயல்பாடு பணத்தை உருவாக்குகின்றது, பணம் வர்த்தகச் செயல்பாட்டை உருவாக்குகின்றது. இன்றைக்கு உங்கள் பணத்தை நீங்கள் எங்கு வைத்தாலும், பங்குகள், வங்கிகளின் வைப்புநிதிகள், அல்லது வெறுமனே நுகர்வோர் பொருட்கள் ஆகிய எங்கு வைத்தாலும், உங்கள் பணம் புதிய வர்த்தக நடவடிக்கைகளை கொணரும். மேலும் புதிய வர்த்தக நடவடிக்கைகள் புதிய பணத்தை உருவாக்கும். நமது நாகரீகம் உற்பத்தியாக இருப்பதால், ஒவ்வொரு சுழற்சியும் ஒரு சுழற்சியை உருவாக்குகிறது, அது முன்பிருந்த ஒன்றைவிட சற்று பெரிதாக ஆகிறது, இவ்வாறு நமது உலகப் பொருளாதாரம் தொடர்ந்து வளருகிறது. ஆகவே, நாம் தீய வட்டத்தில் பூட்டப்பட்டு உள்ளோம். இங்கே பணம் பொருளாதார நடவடிக்கையை உருவாக்குகிறது, பொருளாதார நடவடிக்கை பணத்தை உருவாக்குகிறது. பணம் பொருளாதாரத்தின் பொறியாக உள்ளது, பணத்தின் தொட்டிலாக பொருளாதாரம் இருக்கிறது.

ஆயினும், வழக்கமான வழியில் செயல்படாத ஒருசில விதிவிலக்குகளும் உள்ளன: வைரங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம், உதாரணமாக, இவ்வட்டத்தில் இருந்து வெளியே எடுக்கப்படுகிறது. ஏனென்றால் பணத்தை ஒரு வைரத்தினுள் முதலீடு செய்யப்பட்டதும் அது அங்கே இருக்கிறது. அது சுழலுவது நிற்கிறது. ஒரு முதலீட்டு நிதியை வைரங்களில் முதலீடு செய்யப்பட்டால், பங்குகளில் முதலீடு செய்யும் நிதியை ஒப்பிடுகையில் வேறுபட்டதாகும், அதை மீண்டும் கம்பெனிகளின் வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்படுகிறது, அது மீண்டும் கரியமில வாயு (CO2) உமிழ்வுகளை ஏற்படுத்துகிறது.

ஒருவர் தனது பணத்தை ஒரு வங்கியில் ஒரு நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்தால், அல்லது ஓர் ஆயுள் காப்பீடு அல்லது ஓர் ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்தால், இவை எல்லாவற்றிலுமே அப்பணம் கடைசியில் சில வகை வர்த்தக நடவடிக்கையைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது. ஒருவர் தனது பணத்தை வைரத்தில் முதலீடு செய்யும்பொழுது, அதை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்த பிறகு, அவருடைய பணம் தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கி வேலை செய்து சூடேற்றாது. அது அங்கே வைரங்களாக உட்கார்ந்து கொண்டு, அதன் மதிப்பை பிடித்துக் கொண்டிருக்கும் அல்லது அதிகரிக்கும்.

 

ஆகவே, ஆடம்பரப் பொருட்களின் கண்ணோட்டத்தில் மட்டுமின்றி, ஆனால் குறிப்பாக முதலீட்டு விருப்ப கண்ணோட்டத்தில், உலகப் பொருளாதாரத்தை அதிகச் சூடேற்றாமல், அதன் வேகத்தை வைரங்கள் குறைக்கும். இவ்வாறு வைரங்கள், முதலீட்டு சந்தையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவை பிடிக்குமானால், சுற்றுச்சூழலில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும், எதிர்மறை விளைவை அல்ல.

 

உற்பத்தி செயல்முறையின்போது, மற்ற ஆடம்பரப் பொருட்களை ஒப்பிடுகையில் வைரங்களின் கரிம அடித்தடம் ஒரு சிறுபகுதி மட்டுமே.

வைரங்கள், ஒருமுறை பட்டைத்தீட்டிய பிறகு, அதன் கரிம உமிழ்வு பூஜ்யம் ஆகும்.

மற்றவகை முதலீட்டைப் போல அல்லாமல், வைரங்களில் முதலீடு செய்வது முதலீடு செய்த பணத்திற்கு ஒரு முட்டுச் சந்து ஆகும். ஒரு இழுவை பொறியாக இருந்து புதிய வர்த்தக நடவடிக்கையை செய்யாமல் நிறுத்திவிடுகிறது