உலக வெப்பமயமாதல் பரப்பார்வை

 

                                        

உலகம் தழுவிய அளவில்

கடுமையான கார்பன் டை ஆக்சைட் உமிழ்வை குறைக்க நாம் தவறினால்

என்ன பின்விளைவுகள் நிகழும்?

 

 


a)  கடந்த 50 வருடங்களில் நமது வளிமண்டலத்தில் CO2 கூறுகள் இரட்டிப்பாகி உள்ளது.

         

b)  உலகளவில் ஆற்றல் தேவையை பூர்த்திச் செய்ய அனல்மின் நிலையங்கள் கட்டுவதை நாம் தொடர்ந்தால், மேலும் போக்குவரத்திற்கு பெட்ரோலை முதன்மை ஆற்றல் மூலப்பொருளாகப் பயன்படுத்துவதை நாம் தொடர்ந்தால், நாம் இன்னும் 40 வருடங்களில் நமது வளிமண்டலத்தில் CO2 கூறுகளை மீண்டும் ஒருமுறை இரட்டிப்பாக்கிவிடுவோம். தற்பொழுது சீனாவில், ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய அனல்மின் நிலையம் நிறுவப்படுகிறது.              

   

c)  வளிமண்டலத்தில் அதிக அளவு CO2 கூறுகள் இருப்பதனால் உலகளாவிய சராசரி வெப்பம் உயர்கிறது. கடந்த 50 வருடங்களில் இது சராசரியாக 1°C உயர்ந்துள்ளது .   ஆனால் இது அனைத்து பகுதிகளிலும் ஒரே விகிதத்தில் உயரவில்லை. துருவப்பகுதிகளில் இது 4°C ஆக உயர்ந்துள்ளது.         


d) இந்த தட்பவெட்ப நிலை மாறுபாட்டின் மிகப் பேரழிவான விளைவு யாதெனில் தென் மற்றும் வட துருவங்களில் உள்ள பனிப்படுக்கைகள் உருகுவதேயாகும்.

   

e) துருவங்களில் உள்ள பனிப்படுக்கைகள் உருகுவதால், பனி மற்றும் பனிக்கட்டிகள் பரவியுள்ள பகுதி சிறியதாகி திறந்த கடல் பகுதி பெரியதாகிறது.

 

 Icecaps picture 1980Icecaps picture 2012

      

இந்த இரண்டு படங்களும் நிலையான பனிக்கட்டிகள் 1980 லிருந்து 2012 வரை எவ்வாறு குறைந்தனவென்று விவரிக்கிறது. பிரகாசமான வெள்ளை மத்தியபகுதி நிலையான கடற் பனிக்கட்டிகளை காட்டுகிறது அதேசமயம் பெரிய வெளிர் நீல நிறப்பகுதி நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நிலவும் சராசரி வருட கடற் பனிக்கட்டிகளும் உள்ளிட்ட முழுமையான விரிவடைந்த குளிர்கால கடற் பனிக்கட்டிகளைக் காட்டுகிறது. இங்கே காணும் விவரம் NASA வின் நிம்பஸ்-7 செயற்கைகோள் மற்றும் U.S. பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு வானிலை ஆய்வு செயற்கைகோள் திட்டம் ஆகியவற்றின் மூலம் NASA முதுநிலை அறிவியல் ஆராய்ச்சியாளர் ஜோசெப்பினோ கோமிசொவால் தொகுக்கப்பட்டதாகும். புகழ்: NASA/Goddard அறிவியல் காட்சிப்படுத்தும் படவறை.

 

Light reflects off snow

f) துருவங்களிலுள்ள பனிப்படுக்கைகள் அதன் மீது விழும் பெரும்பான்மையான சூரிய ஒளியை திரும்பவும் வெளியிடத்திலேயே பிரதிபலிக்கின்றன. திறந்த கடல் பகுதியில் சூரிய ஒளி விழும் போது, அது அப்பொழுது திரும்ப வெளியிடத்தில் பிரதிபலிக்காது ஆனால் கடலால் கிரகிக்கப்படும். இதன் பயனாக  ஓளியின் புற ஊதாக்கதிர்களின் அலைநீளம் கொண்டிருக்கும் ஆற்றல் வெப்பமாக மாற்றப்பட்டு பெருங்கடல்களும் வெப்பமடைகிறது. ஆகவேதான் துருவப் படுக்கைகளில் சராசரி வெப்பநிலை புவி முழுமைக்குமான சாராசரி வெப்பநிலையை விட 4 மடங்கு உயர்ந்திருக்கிறது.

 

g) இதன் விளைவாக, நாம் சுய உந்து இயக்கமைவில் நுழைந்துள்ளோம், அதனால் துருவப்பகுதி பனிப்படுக்கைகள் ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாகி வருகிறது. சிறிய பனிப்படுக்கைகளால் அதிகப்படியான ஒளி கடலில் விழுகிறது. அதனால் கடல் நீர் முந்திய வருடத்தை விட அதிக வெப்பமடைகிறது. மேலும் அடுத்த வருடம் மற்றும் அடுத்து அடுத்து வருடத்திலும் இச்செயல்முறை தொடர்கிறது.        

                      

h) வளைகுடா நீரோட்டம், லாப்ரடோர் நீரோட்டம் மற்றும் அனைத்து உலகளவில் தொடர்புடைய பிற கடல் நீரோட்டங்களின் பொறி துருவங்களிலுள்ள பனிப்படுக்கைகள் ஆகும். இயக்கமைவு பின்வருமாறு: மேற்பரப்பு நீர் பனிக்கட்டியுடன் தொடர்புகொள்ளும்போது குளிர்வடைகிறது. நீர் ஒருமுறை குளிர்சியடைந்ததும் அது அதனின் கண அளவைக் குறைப்பதனால் அதனுடைய குறிப்பிட்ட எடை அதிகரிக்கிறது. அது ஒருமுறை கனமானவுடன் கடலின் அடிப்பகுதியில் மூழ்குகிறது. மேற்பரப்பில் அதிகளவு நீர் ஈடு செய்யப்படும்போது, கடலின் ஆழப்பகுதியில் மூழ்கியுள்ள கனமான நீர் பூமத்திய ரேகையை நோக்கித் தள்ளப்படுகிறது. பூமத்திய ரேகையை அடையும் நேரத்திற்குள் துருவப்பகுதியில் உள்ள வெப்பநிலை மூலம் சூடு அடைந்து அது இப்பொழுது மேற்பரப்பிற்கு உயர்கிறது. இந்நிலையில் அது தொடர்ந்த அதே திசையை நோக்கி நகர முடியாது ஏனெனில் அது மற்ற துருவத்திலிருந்து வரும் சமமான நீரோட்டத்தை எதிர்க்கும் நிலையை அடைந்துள்ளது. ஆகவே அது தனது ஆரம்ப துருவப்பகுதியில் முன்பு தொடங்கிய இடம் நோக்கி மேற்பரப்பில் திரும்பி பாய்கிறது. முடிவில்லாமல் வரிசையாக இதே சுழற்சி மீண்டும் மீண்டும் வழக்கமாக நடைபெறுகிறது.

 

 

Click to enlarge

 

i)    துருவப் படுக்கைகள் சிறியது சிறியதாக ஆவதின் காரணமாக முன்னர் நீரை ஆழத்திற்கு நகர்த்திய அதனின் குளிர்விக்கும் திறன் குறைகிறது, உடனேயாவது அல்லது பிறகாவது வளைகுடா நீரோட்டம் பாய்வதை நிறுத்திக்கொள்ளும் என்பது தெளிவு. உண்மையில் முன்னாலேயே இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நிலையில் வளைகுடா நீரோட்டம் இரண்டு வாரங்களுக்கு முழுவதும் நின்றுவிட்டது.  

 

j) வளைகுடா நீரோட்டம் மற்றும் தெற்கு புவியின் அரைக்கோளத்தில் உள்ள அதற்கு இணையானதும்தான் ஆழ்கடல் மட்டத்தில் உள்ள ஆக்ஜிஜனுக்கு முக்கிய ஆதாரங்கள் ஆகும். ஒருமுறை வளைகுடா நீரோட்டம் பாய்வதை நிறுத்தினால், ஆழ்கடல்கள் பகுதியில் உள்ள விலங்கு மற்றும் தாவரங்களின் வாழ்வு அழிந்து போகும்.

    

k)  ஆழ்கடல்களின் அனைத்து உயிர்வாழ்வினங்கள் ஒருமுறை அழிந்த பிறகு, ஆழ்கடல்கள் அதிக கந்தகம் உள்ள கெட்ட நீர் நிரப்பப்பட்ட இறப்பு மண்டலமாகிவிடும். இந்த கெட்ட நீர் மெதுவாக உயர்ந்து அதன்பின் பெருங்கடலின் நடுத்தர மட்டங்களில் உள்ள அணைத்து உயிர்களையும் கொன்றுவிடும்.

 

l)  பெருங்கடலின் நடுத்தர மட்டங்கள் ஒருமுறை கெட்ட கந்தக நீர் நிரப்பப்பட்டதாகினால், பெருங்கடலின் மேற்பரப்பில் உள்ள மீதமுள்ள உயிர் கூட அழிந்து போகும், மேலும் பெருங்கடல்களில் ஆக்ஜிஜன் குறைந்த கந்தக நீர் நிரப்பப்படும் அங்கே பாசி அல்லது மிதப்பவை கூட நீள்வழ்வை அடையமுடியாது.

 

 

m)  பெருங்கடல்களில் உள்ள பாசி மற்றும் மற்ற உயிரினங்கள் நமது கிரக வளிமண்டலத்தில் 75% ஆக்ஜிஜனை உற்பத்தி செய்கின்றன. பெருங்கடல்கள் அழிந்த பிறகு, நமது வளிமண்டலத்தின் ஆக்ஜிஜன் கூறுகள் அழிவடையும். அதன் விளைவு நமது கிரகத்தின் 95% நிலத்தில் வாழக்கூடிய விலங்குகளின் வாழ்க்கையும் கூட (மனிதர்களும் உள்ளடக்கம்) அழிந்து போகும்.

 

n)  நமது கிரகத்தின் வரலாற்றில் 250 மற்றும் 200 மில்லியன் இடைப்பட்ட வருடங்களுக்கு முன் அப்படிப்பட்ட நிகழ்வு முன்னமே 3 முறை நிகழ்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் சைபீரியாவின் மிகப்பெரிய எரிமலையின் செயல்கள் வளிமண்டலத்தில் மிக அதிக CO2 கூறுகள் இருக்க வழிவகுத்தது. அவ்விளைவால், உலக வெப்பநிலை மிகவும் உயர்ந்து துருவப் படுக்கைகள் முழுவதும் உருகிவிட்டன. அதன் விளைவாக ஆழ்கடலில் ஆக்ஜிஜன் ஊட்டம் தரும் உலக பெருங்கடல் நீரோட்டம் எதுவுமில்லாமலானதால் பெருங்கடல்களில் உள்ள வாழ்வு அழிவடைய வழிவகுத்தது. அந்த காலகட்டத்தில் ( 250-200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு) 95% கடல் மற்றும் நிலத்தின் அனைத்து விலங்குகள் மற்றும் தாவர வாழ்வினங்கள் இறந்து போனது.

 

 o)  இந்த கிரகத்தின் மேல் உள்ள வாழ்வு அழிவடைந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரி மற்றும் ஒரு குறிப்பிட்ட பாசி CO2 உடன் எண்ணெய் உருவில் பிணையத் தொடங்கியது, அதன்பின் பெருங்கடல்களின் அடியில் படிந்தது. இது பல மில்லியன் வருட கால அளவிற்கு மேல் படிப்படியாக வளிமண்டலத்தை மீட்க வழிவகுத்தது. அதே நேரத்தில் இது நாம் தற்பொழுது பயன்படுத்தும் படிம எரிப்பொருட்களை உருவாக்கியது.

 

p)   நிலத்தடி படிமங்களில் CO2 பிணைப்பு செயல்முறையை நாம் பழையநிலைக்கு செல்ல வைத்தால் மேலும் 200 மில்லியன் வருடங்களுக்கு முன் கார்பன் வந்திருந்தவிடத்தே வளிமண்டலத்தில் படிம எரிப்பொருட்களை திரும்ப ஊதினால், நாம் நமது வளிமண்டலத்தில் உள்ள CO2 வின் விகிதத்தை மட்டும் பழையநிலைக்கு மாற்றாமல், கூடவே இன்றைய 5% விலங்கு மற்றும் தாவர வாழ்வினங்கள் தொடர்ந்து உயிர்வாழும் நிலைமையை நாம் உலகிற்கு திரும்ப அளிப்போம். காற்றில் போதுமான ஆக்ஜிஜன் நமக்கு கிடைக்காது, கந்தக அமிலப் பெருங்கடல்கள் அடைவோம், மேலும் கந்தக கடல் நீர் ஆவியாவதின் விளைவாக கந்தக அமில மழை இருக்கும்.  200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பரவியிருந்த ஒரு குறிப்பிட்ட உயிர்வாழ்முறையில் ஒரு பகுதியாக இருந்த கந்தக அமிலமழைதான் பெரும்பான்மை தாவர வாழ்வை கொலைசெய்வதற்கு பொறுப்பேற்றது, அதேசமயம் குறைவான ஆக்ஜிஜன் விலங்குகளை கொன்று கொண்டிருந்தது.  

 

q)  அவ்வாறு வெளிப்படக்கூடிய காட்சி திரும்ப வராத நிலையை நாம் முன்னமே கடந்துவிட்டோம் என சில அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். துருவப் படுக்கைகளின் அதிகரிக்கும் உருகுதல் இனி பழையநிலையை அடையவே முடியாது ஏனென்றால் துருவங்களில் பெருங்கடல்கள் வெப்பமடைவது சுய நீட்சி உத்வேகத்தில் இறங்கியுள்ளது. எவ்வாறு இருப்பினும், CO2 வெளிப்படுதலை நாம் குறைத்தோமானால் அணிவகுக்கும் சுற்றுச்சுழல் அழிவை நிறுத்திவிட இன்னும் முடியும் என சில அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இருப்பினும், அனைத்து அறிவியல் அறிஞர்களும் கிட்டதட்ட ஏற்றுக்கொள்ளும் தெளிவான ஒன்று:

 

அனல்மின் நிலையங்களை இருக்கின்றவைகளோடு நாம் தொடர்ந்து கூடுதலாக்கி கொண்டிருந்தால், பெரிய காலநிலைமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க முடியாது.

 

r)  25 ஜூலை 2012 அன்று ஒரு செய்தி வெளியீடு உண்மையில் நிலைமை எப்படி மாறியிருக்கிறது என்பதை காட்டுகிறது:

 

கிரின்லேண்ட் பனிக்கட்டிப்படலம் வேறுசமயங்களில் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைவிட இந்த மாதத்தில் வேகமான விகிதத்தில் உருகியதுடன்,   முழுப்பனிக்கட்டிப்படலமும் உருகிய அறிகுறிகளை மெய்மையாகக் காண்பித்து கொண்டிருக்கிறது.

 

 

நான்கே நாட்களில் முடிந்த விரைவான உருகுதல் மூண்று செயற்கைகோள்களால் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இது அறிவியல் அறிஞர்களை வியப்பிற்குள்ளாக்கியும், எச்சரித்தும் மேலும் துரித மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிர்கால விளைவுகள் குறித்து அச்சத்தை ஆழப்படுத்தியிருக்கிறது.

 

 

செவ்வாய் கிழமை அன்று NASAவின் வலைத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட அறிக்கையில், அறிவியல் அறிஞர்கள் செயற்கைகோளின் தகவல் மிகவும் கருத்தை கவர்ந்திருந்ததாகவும் முதலில் அவர்கள் அங்கே தவறு நிகழ்ந்திருக்கக் கூடும் என நினைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


 

செவ்வாய் கிழமை அன்று NASAவால் வெளியிடப்பட்ட படத்தொகுப்பு ஜுலை 8 மற்றும் ஜுலை 12 ற்கும் இடையிலான வேகமான உருகுதலை காண்பிக்கிறது. அந்த நான்கு நாட்களுக்குள், மூண்று செயற்கைகோளிலிருந்து பெற்ற அளவீடுகள், உருகும் பனிக்கட்டிகளின் பரப்பு துரிதமாக விரிவடைவதை, அதாவது பனிக்கட்டிப் படலங்களின் மேற்பரப்பு சுமார் 40%லிருந்து 97% ஆக ஆவதை காட்டுகிறது.

 

 

s)   நவீன சமுதாயத்தின் பல அம்சங்களில் ஒளிரும் எடுத்துக்காட்டென இருக்க விரும்பும் ஆரோவில், வழக்கமான போக்குவரத்து மற்றும் வழக்கமான ஆற்றல் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது அத்தியாவசியம்.