காற்றாலை சக்தியையும் போட்டோவோல்டிக் சூரிய சக்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தல்

 

அ)     மின்சக்தி உற்பத்தியும் அதற்கான முதலீடும் ஒப்பிடல்:

காற்று: ஒரு லட்ச ரூபாய்க்கு ஒருநாளில் உற்பத்தியாகும் மின்சாரம் = 11கிவாஅ

 

போ.வோ.: ஒரு லட்ச ரூபாய்க்கு ஒருநாளில் உற்பத்தியாகும் மின்சாரம் = 4 கிவாஅ

 

ஆ)   கருவியின் சக்தி உற்பத்தித்திறன் நிகர ஆதாயம் காற்று: காற்றாலையை அமைக்க செலவு செய்யும் ஒருகிவாஅ மின்சக்திக்கு அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம்: 7கிவாஅ

 

போ.வோ.: போட்டோவோல்டிக் பேனல்கள் தயாரிக்க செலவு செய்யும் ஒரு கிவாஅ மின்சக்திக்கு அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம்: 3 கிவாஅ

 

இ)    முதலீட்டிற்கும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்குமான நிகரப்பயன்:

காற்று: ஒருலட்சரூபாய் முதலீட்டிற்கு கிடைக்கும் பசுமைமின்சக்தி 9.35கிவாஅ

 

போ.வோ.: ஒருலட்சரூபாய் முதலீட்டிற்கு கிடைக்கும் பசுமைமின்சக்தி 2.60கிவாஅ

 

முடிவு: காற்றாலை மூலம் பெறும் மின்சக்தி, போட்டோவோல்டிக் சூரிய சக்தியை விட மலிவானது. அடுத்தபடியாக, சோலார் பேனல்கள் தயாரிக்க அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. போட்டோவோல்டிக் மின்சக்தியை விட காற்றாலை மூலம் பெறும் மின்சக்தி சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கு 4 மடங்கு அதிகமாகவே உள்ளது.

 

அதனாலேயே வருணா காற்றுசக்தியை உபயோகப்படுத்துவதில் முதலில் கவனம் செலுத்தியது. கோயமுத்தூர் அருகே வருணா அமைத்துள்ள காற்றாலைகளிலிருந்து அது உற்பத்தி செய்யும் பசுமைச்சக்தியானது ஆரோவில் பயன்படுத்தும் மின்சக்தியை விட இருமடங்கு அதிகமாகும்

 

எனினும் நாம் சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொள்ளும்போது, அதிக அளவில் கிடைக்கும் சூரியசக்தியை பயன்படுத்துவதென்பது அவசியமானதொன்றாகும். காரணம் என்னவெனில், தமிழ்நாட்டில் காற்றாலை மின்சக்தியை மின்வினியோக இருப்புவரைச் சட்டத்தில் (grid) சேர்த்துவிடுவதானது முழுமையாக நிறைவேறி விட்டது. இனிமேலும் அதில் இடமில்லை என்ற அளவிற்கு முற்றுப்பெற்று விட்டது. தமிழ்நாட்டில் வினியோகிக்கும் மின்சாரத்தில் 20% காற்றாலை மின்சக்தியே. அதற்குமேல் அது சாத்தியப்படாது. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலுள்ள காற்றடிக்கும் காலத்தில்தான் இச்சக்தி பெறப்படுகிறது. அச்சமயத்தில்

காற்றாலை இயங்கும் பகுதிகளில் மின்வினியோக இருப்புவரைச் சட்டம் (grid) அதிகச் சுமை கொண்டதாகி விடுகிறது. ஏற்கனவே இப்போதே உற்பத்தியாகும் மின்சக்தியில் 30% வலுவற்ற மின்வினியோக இருப்புவரைச் சட்டம் (grid) இழுத்துக் கொள்ள முடியாமல் உள்ளது. வீணாகவும் போய்க் கொண்டிருக்கிறது. ஆகையால் இனிமேலும் காற்றாலைகளை அமைப்பது அர்த்தமில்லாதவொன்று.

 

காற்று அதிகமாக வீசும் கோயமுத்தூர் அருகில் சூரியஒளியைக் கொண்டு மின்சக்தி தயாரிப்பதொன்றே அடுத்ததாக நாம் செய்ய வேண்டிய சிறந்த செயலாகும்:

 

அ) காற்றுடன் கூடிய மழைகாலத்தில், மழை மேகம் மூடிய வான்நிலை காரணமாக சூரியக்கதிர் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி குறைந்த அளவிலேயே இருக்கும்

 

ஆ)அதே போல, காற்றின் சக்தி குறைவாக உள்ள வறண்ட காலங்களில், தெளிவான வான்நிலை காரணமாக சூரியக்கதிர்பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மினசக்தி அதிகஅளவில் இருக்கும்.

 

இ) காற்று மிக விரைவாக வீசுகின்ற மூன்று மாதங்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு பிரச்சனையை எதிர் கொள்கிறது. அதாவது காற்றாலை சக்தியை வாங்கிக் கொள்ளும் துணைமின்நிலையங்கள் அதிகச் சுமை கொண்டாவையாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம் வருடத்தின் மற்ற மாதங்களில் அவற்றிற்கு வேலையே இல்லாமலும் இருக்கின்றது. ஏனென்றால் காற்றலைகள் அந்த சமயங்களில் எந்த மின்சக்தியையும் உற்பத்தி செய்வதில்லை. ஆனால் துணைமின்நிலையங்களில் ஆட்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. அந்த நேரம் சூரியக்கதிர் பேனல்கள் மூலம் இந்த இடங்களில், தெளிவான வான்நிலை காரணமாக உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி அதிக அளவில் இருக்கும். அப்போது, சூரியக்கதிர் பேனல்கள் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு, காற்றாலைப் பகுதிகளில் செயல்படும் துணைமின்நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுமேயானால் அந்நிலையங்களுக்காக செலவிடப்படும் செலவானது மிகக் கணிசமாகக் குறையும். இவ்வாறாக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள துணைமின்நிலையங்கள் மூலமே இந்த இருவகை சக்திகளையும் பயன்படுத்த முடியும்.

 

ஈ) சூரியக்கதிர் மின்சக்தியானது, மின்சாரம் அதிகமாக உபயோகப்படுத்தும் நேரத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது பகல் நேரங்களில் குளிர்சாதனக் கருவிகளும் ஆலைகளும் மின்சக்தியை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. அதே சமயத்தில் தான் சூரியக்கதிர் மின்சக்தியானது உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மின்சக்தி அதிகம் செலவிடப்படாத இரவுநேரங்களிலும் காற்றாலை மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. அதே அளவு மின்சாரமானது நாள் முழுவதுமாக நிலக்கரியால் மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையங்களால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 75% பகுதி மின்சாரம் இவ்வாறுதான் பெறப்படுகிறது. இரவு நேரத்தை விட பகல் நேரத்தில் அதிகமாக மின்சக்தி தேவைப்படும நிலையில், இரவு நேரத்தில் அதிகமாகவும், பகலில் குறைவாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. இரவு நேரத்தில் காற்றாலை உற்பத்தியால் வரும் மின்சக்தி ஏற்கனவே கிடைக்கும் மின்சக்தியோடு மேலும் கூட்டப்படுகிறது. ஆகையால் இரவு நேரத்தில் காற்றாலை மின்சக்தி தேவைப்படவில்லை. பகலில் உற்பத்தியாகும் சக்தியே போதுமானதாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, சூரியக்கதிர் மின்சக்தியானது உற்பத்திக்கும், செலவீட்டிற்கும் சமநிலையில் உள்ளது.

 

உ)     சூரியக்கதிர் மின்சக்தியின் உற்பத்திச் செலவானது கணிசமாகக் குறையும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணம் போட்டோவோல்டிக் பேனல்கள் மிக அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருவதே. ஆகையால், தற்சமயம் பொதுவாக அதைக் கொண்டு மின்சார உற்பத்தியென்பது லாபகரமானதாக இல்லையென்றாலும் நாம் இப்போது போட்டோவோல்டிக் பேனல்களைத் தயாரிப்பதற்கு முதலீடு செய்வது, உலக உளவில் போட்டோவோல்டிக் மின்சக்தி உற்பத்தியின் செலவானது குறைந்து, சாதாரண மின்சக்தி தயாரிக்கும் செலவை ஒட்டி அமைவதற்கு உதவுவதாக அமையும். இந்த வாதமானது சற்று சந்தேகத்திற்குரியதுதான். போட்டோவோல்டிக் பேனல்கள் தயாரிப்பது மிக சுத்தமற்றுதும் மலிவான ஆற்றல் கொண்டதாகவும் உள்ளது. தூய்மையானதும், அதிக சக்தயுடனும் யார் இச்சக்தியைத் தயாரிக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போது அவற்றின் விலை அதிகமாகி விடும். போட்டோவோல்டிக் பேனல்களுக்கான சிலிக்கானை உற்பத்தி செய்யும் உலகத்தின் மிகப் பெரிய நிறுவனம் ஜெர்மனியில் உள்ள வேக்கர் கெம் ஆகும். வேக்கர் கெம் தன்னுடைய போட்டோவோல்டிக் பேனல்களுக்கான சிலிக்கான் உற்பத்திக்கு ம்யூனிச் நகரத்தின் மின்தேவையைப் போல இரு மடங்கு ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. ஜெர்மனியில் தற்சமயம் பசுமைசக்தி பயன்படுத்துதலை அதிகமதிகம் சிந்தித்து வருவதால் அங்கு (எரிபொருள்) சக்தியின் விலை உயர்ந்து வருகிறது. அதனால் வேக்கர் ஜெர்மனியில் லாபம் ஈட்டுவது இயலாதது என்று அறிவித்து விட்டது. இதுவரை ஜெர்மனியில் 12% தான் பசுமைசக்தி பயனீட்டில் உள்ளது. ஜெர்மனியின் மின்வினியோக இருப்புவரைச்சட்டத்தில் இந்த விகிதாசாரத்தின்படி பசுமைசக்தி இருக்கும்போது, போட்டோவோல்டிக் பேனல்களுக்கான சிலிக்கான உற்பத்தி முடியாதவொன்று. நமது மின்வினியோக இருப்புவரைச் சட்டத்தில் எப்போது நாம் 50% அல்லது அதற்கு அதிகமான அளவை அடைகிறோமோ அப்போது நமது மின்சக்தியின் விலையும் மிக அதிகமாகிவிடும். அதோடு போட்டோவோல்டிக் பேனல்களுக்கான விலையும் ஏறிவிடும். ஆகவே இப்போது கேள்வி என்னவெனில், மலிவான, சுத்தமற்ற ஆற்றலைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் “பசுமைசக்தியை உற்பத்தி செய்யும் சாதனங்களை“ தயாரிப்பதை நாம் ஆதரிப்பதா என்பதே?

 

 

ஊ)     தமிழ்நாடு மின்வினியோக இருப்புவரைச்சட்டம் (grid) தனது வினியோகத்தில் போட்டோவோல்டிக் மின்சக்தியை அதிகஅளவில் தக்க வைத்துக் கொள்ள ஒரு சிறிதளவாவது தனது சாதனத்தை மறுபடி நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறதோ, அப்போது தான் காற்றாலைசக்தி உற்பத்தியை சற்று கூடுதலாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அது இப்போதைக்கு சாத்தியமானதல்ல.

 

எப்படியிருப்பினும், வருணா குழுவினர் தீர்மானித்த முடிவு: தற்சமயம் காற்றாலை சக்திக்கென முதலீடு செய்வதை விட, போட்டோவோல்டிக் பேனல்களில் முதலீடு செய்தவன் மூலம் சூரியசக்தியைப் பெறுவதே நல்லது என்பதே.