நீரேற்றுத் தேக்கம்

விக்கிப்பீடியாவில் நீரேற்றுத் தேக்கத்தின் கீழ் காணக் கிடைப்பதாவது:

 Diagram of the TVA pumped storage facility at Raccoon Mountain Pumped-Storage Plant.

நீரேற்றுத் தேக்க நீர்மின்சாரம் என்பது சில மின்சார உற்பத்தி நிலையங்களில் சுமையை சமன் செய்வதற்கு பயன்படும் ஒருவகையான நீர்மின் மின்சார உற்பத்தியாகும். கீழ் நிலை நீர்த்தேக்கத்திலிருந்து மேல் நிலை நீர்த்தேக்கத்திற்கு நீரேற்றும் முறையில் ஆற்றல் நீர்வடிவில் தேக்கப்படுகிறது. இறைப்பான்களை இயக்க குறைந்த விலையுடைய உச்சநிலையற்ற காலத்தின் மின்னாற்றல் பயன்படுகிறது. அதிக மின்சார தேவையேற்படும் சமயங்களில் மின்சாரம் உற்பத்தி செய்ய தேக்கிவைக்கப்பட்ட நீர் சுழலிகள் வழியாக விடுவிக்கப்படுகிறது. இழப்புகள் இருப்பினும் நீரேற்றும் செயல்முறை மொத்தத்தில் நிலையத்தை ஒரு நிகர ஆற்றல் நுகர்வராக்குகிறது மேலும் உச்சகட்ட தேவையேற்படும் சமயங்களில் அதிக மின்சாரம் விற்பனை செய்வதால் இந்த அமைப்பு மின்சார விலை உயர்ந்திருக்கும் போது வருவாயை அதிகரிக்கிறது.

கிடைக்கக்கூடிய மிகப்பெரிய மின்தொகுப்பு ஆற்றல் சேமிப்பு முறை நீரேற்றுத் தேக்கம் ஆகும். மேலும் மார்ச் 2012 வரை, சுமார் 127000 மெவா[1] சார்பிலுள்ள உலகளவில் 99% மேலான பேரளவு சேமிப்பு கொள்திறனுக்கு நீரேற்றுத் தேக்க நீர்மின்சாரம் (PSH) காரணமாவதாக மின்னாற்றல் ஆய்வு கல்வி நிறுவனம் (EPRI) அறிவிக்கிறது. PSH அறிக்கையின்படி நடைமுறையில் ஆற்றல் செயல்திறன் 70 % மற்றும் 80%[1][2][3][4] ற்கு இடைப்பட்ட நிலையில் வேறுபட்டும், சில 87%[5] வரை உயர்கிறது.

இன்றைய மிக அவசரமான பிரச்சனை நிலக்கரி, எண்ணெய், பழுப்பு நிலக்கரி மற்றும் வாயு போன்ற எரி ஆற்றல் வெளியிடும் CO2 உமிழ்வாகும். CO2 உமிழ்வை நிறுத்த முடியாவிட்டால் நாம் கற்பனை கூட செய்யமுடியாத அளவு உலக பேரழிவிற்கு வழிவகுப்போம். அப்படிப்பட்ட பேரழிவை தவிர்க்க கூடிய ஒரே வழி புதுப்பிக்கவல்ல ஆற்றலான காற்றாலை மற்றும் சூரிய சக்திக்கு மாறுவதாகும். ஆயினும், இவ்வாற்றல்கள், ஒரு பெரிய குறைபாடுடையன: அவைகள் அவைகளின் உற்பத்தி அமைவையும் ஆற்றல் நுகர்வோரின் நுகர்வு அமைவையும் பின்தொடர்வதில்லை. சூரிய வெளிச்சம் இருக்கும் போது மட்டுமே சூரிய ஒளி மின்சாரம் பாய்கிறது, காற்று வீசும்போது மட்டுமே காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். நுகர்வு அமைவை மாற்றாவிடில் ( இதை இன்றளவில் யாரும் உண்மையில் முயற்சிக்கவில்லை ), மின்சார கட்டமைப்பு புதுப்பிக்கவல்ல ஆற்றலை ஈர்த்துக்கொள்வதற்கு குறித்த வரயறையோடு இருக்கும். சுமார் 20% புதுப்பிக்கவல்ல ஆற்றலிருக்கும் மின்கட்டமைப்பில் நாம் முடிந்தளவு அதிகளவை எட்டுகிறோம் என மதிப்பீடுகள் சொல்கிறது. அதற்கும் மேலே, மின்கட்டமைப்பு நிலையற்றதாகிவிடும். எவ்வாறாயினும், 20% புதுப்பிக்கவல்ல ஆற்றல் மற்றும் 80% மரபுசார்ந்த ஆற்றலுடன் நாம் CO2 பிரச்சனையை தீர்க்க முடியாது.

 

100 வருடங்களுக்கு முன், முழு மனிதக்குலமும் சுமார் 1.5 பில்லியன் மக்களை உள்ளடக்கியிருந்தது. இன்று நாம் 7 பில்லியனை தாண்டியுள்ளோம். மேலும் ஒவ்வொரு நாளும் நாம் அதிகமாகி வருகிறோம். கூடுதலாக, நமது வாழ்க்கை தரம் சீராக உயர்கிறது, கூடவே ஆற்றல் தேவையும் உயர்கிறது. மின்வினியோக கட்டமைப்பிற்குள்ளே புதுப்பிக்கவல்ல ஆற்றலின் விகிதத்தை உயர்த்துவதற்கு ஒரே வழி ஆற்றலை தேக்குவதாகும். எவ்வாறு என்பதே கேள்வி?

 

மின்னாற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தின்(Electric Power research Institute) மார்ச் 2012 அறிக்கையிலிருந்து 99% மின்தொகுப்பு மின்சாரம் உலகளவில் நீராற்றல் வடிவில் நீரேற்றுத் தேக்கத்தில் சேமித்திருப்பதை காணலாம். இவ்வறிக்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் செயல்திறன் விகிதம் சுமார் 70% என்பதே. அதாவது, உயர் ஏற்றநிலைக்கு தண்ணீரை நீரேற்றம் செய்து, அதன்பின் சுழலி வழியாக திரும்ப பாயசெய்தால், நாம் நீரை மேலேற்றுவதற்கு செய்த முதலீட்டில் 70% ஆற்றலை நாம் திரும்ப அடைவோம்.

மின்வினியோகம் நிலையற்றதாவதும் மேலும் புதுப்பிக்கவல்ல ஆற்றலை மேலும் அபிவிருத்தி செய்யமுடியாது என்பதும் எதிர்காலத்தில் பிரச்சனையாக இருக்காது. நாம் தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரத்தை மேலும் அபிவிருத்தி செய்ய முடியாத நிலையை மிக உறுதியாக அடைந்திருக்கிறோம், ஏனென்றால் இது மின் வினியோகத்தை நிலையற்றதாக்குகிறது, உச்ச பருவத்திலும் இது காற்றாலைப் பகுதியிலிருந்து நுகர்வோருக்கு எடுத்துவர முடியவில்லை மேலும் குறைந்த பருவத்திலும் இது மின்வினியோகத்தினுடைய மின்சார சமநிலையில் விடுபட்டுவிடுகிறது. ஆகவே காற்றலை மின்சாரத்தை தமிழ்நாட்டில் மேலும் அபிவிருத்தி செய்ய நாம் விரும்பினால், காற்றாலை மின்சாரத்தின் சீரற்ற தன்மையை ஈடு செய்யக்கூடிய மற்ற வகையான மின்சாரம் மூலம் நிரப்பவேண்டும் அல்லது உச்சகட்ட உற்பத்தி மின்சாரத்தை சேமிக்கும் வசதிகளை உருவாக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்பத்தின்படி இதை நீரேற்றுத் தேக்கத்தின் மூலம் மட்டுமே அடையமுடியும்.

 

கோயம்புத்தூர் அருகே ஒரு பெரிய நீரேற்றுத் தேக்க அமைப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது. முழு தமிழ்நாட்டிற்கும் இது ஒன்றுதான் இருக்கிறது, மேலும் நிச்சயமாக மின்சார தேவைநிலைமையின் மீது தீர்மாணிக்கும் விளைவை ஏற்படுத்த ஒரு தனித்த நீரேற்றுத் தேக்கம் போதாது.

 

நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரிய ( TNEB ) மின்சார மின்வினியோகத்தில் புதுப்பிக்கவல்ல ஆற்றல்களின் விகிதத்தை அதிகரிக்க நாம் விரும்பினால் நமக்கு அதிக நீரேற்றுத் தேக்கங்கள் அவசரமாக தேவைப்படுகிறது. மேலும் மிக அவசரமாக, தமிழ்நாடு மின்சார கலவையில் சூரிய ஒளி மின்சாரம் பெரிய உறுப்பாக இருக்கும்போதே நாம் தேவைப்படும் நீரேற்றுத் தேக்கங்களை தொடங்குவோம். தமிழ்நாட்டில் முன் மாலைப்பொழுது சுமார் 19.00 மணிதான் உச்சகட்ட நுகர்வு நேரம் ஆகும். அந்த நேரத்தில் சூரிய ஒளித்தகடுகள் மின்சாரம் தரவே தராது. நீரேற்றுத் தேக்கங்களை நிறுவாவிட்டால் தமிழ்நாடு வெகுவிரைவில் சூரியஒளி மின்சாரத்திலும் நிறைநிலை அடைந்துவிடும்.

 

உலகத்தில் ஒரே ஒரு நாடு மட்டுமே காலநிலை மாற்றத்தின் மிரட்டலை தீவிரமாக கருதி CO2 உமிழ்வை கடுமையாக குறைக்க முடிவெடுத்திருக்கிறது, அது ஜெர்மனி ஆகும். ஜெர்மனியில் இது பாராளுமன்றத்தால் முடிவு செய்து பிறகு சட்டத்தால் நிறைவேற்றப்பட்டு, 2023 க்குள் அனைத்து அனுமின் நிலையங்களை நிறுத்திவிட்டு, ஜெர்மனி அதனின் CO2 உமிழ்வை 2020 இல் 1990 வருடத்தின் ஒப்பீட்டில் 40% 2050 இல் 80% குறைக்கும்.

 

இதை அடைவதற்கு ஜெர்மனியில் அடுத்த 7 வருடத்தில் நீரேற்றுத் தேக்கத்தின் கொள்ளவை கூடுதலாக 80% உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள வாசகர்கள் Prospects for Pumped Hydro Storage in Germany ஆய்வுக்கு செல்ல நாம் பரிந்துரைக்கிறோம்.

 

தமிழ்நாட்டில் புதுப்பிக்கவல்ல ஆற்றலில் முன்செல்லக்கூடியவராக ஆரோவில் இருக்க விரும்பினால், தற்பொழுது இருக்கக்கூடிய காற்றாலைப் பூங்கா மற்றும் சூரியஒளி மின்சார திட்டத்தில் அதனின் திட்டமிடப்பட்ட பங்களிப்பிற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு நீரேற்றுத் தேக்கம் சீரியமுறையில் பூர்த்தியளிக்கும் ஒன்றாக இருக்கும்.

 

நாம் ஆரோவில்லிற்கு உதவக்கூடியது விக்கிப்பீடியாவில் எடுத்துக்காட்டாகொடுக்கப்பட்டுள்ள ராக்கூன் (Racoon) மலையிலுள்ள நீரேற்றுத் தேக்கம் போன்றதல்ல. ஆரோவில்லுக்கு நாம் பரிந்துரைப்பது லுடிங்டன் நீரேற்றுத் தேக்கம் (Ludington Pumped Storage) போன்றதொரு அமைப்பாகும்.

 

லுடிங்டன் நீரேற்றுத் தேக்கம் (Ludington Pumped Storage)

 

Picture of the Ludington Pumped StoragePicture of the Ludington Pumped Storage

 

திரு மைக்கெல் போங்கே (Mr. Michael Bonke) அவர்களின் சொந்த ஊரான டெக்கென்டார்ப் (Deggendorf) அதனைச் சுற்றியுள்ள மலைகளில் லுடிங்டன் நீரேற்றுத்தேக்கம் அமைப்பை விட மிகச் சிறிய அதே மாதிரியான மூன்று நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. அந்த நீரேற்றுத்தேக்கங்கள் ரூசல்கிரப்ட்வெர்க்கிற்கு (Ruselkraftwerke) சொந்தமானது மற்றும் ஜெர்மனியின் மின்சார மின்வினியோக கட்டமைப்பின் மின்சார உற்பத்திக்கும் மின்சாரதேவைக்கும் உள்ள வேறுபாடுகளை சமநிலைப்படுத்த தனித்தன்மையாக வேலைசெய்கின்றன.

 

ரூசல்கிரப்ட்வெர்க்கை நிர்வகிக்கும் திரு எடர் (Mr. Eder) அவர்கள் டெக்கென்டார்ப் நீரேற்றுத்தேக்கங்களில் மூன்றில் ஒன்றை அவரே கட்டியுள்ளார். அடுத்த வருடம் ஒய்வுபெறப்போகும் அவர் ஆரோவில்லில் நமக்கு ஒரு நீரேற்றுத்தேக்கம் கட்டுவதற்கு உதவுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

 

டெக்கென்டார்ப்பில் உள்ள ஒரு நீரேற்றுத் தேக்கத்தின் சில படங்கள் இங்கே உள்ளன. விரிவுபடுத்தவும் மற்றும் கருத்துக்களை அறிய சொடுக்கவும்.

 

Upper lake of the Parstweiher pumped storageLower lake of the Parstweiher pumped storage. At this moment the upper lake is full and the lower lake is empty. Therefore one can see nicely the 1.5m wide pressure-pipe, which carries the water from the upper lake to the turbine houseSouthern slope of dam containing the lake on the hill. The Parsteweiher (the upper lake) is a man-made lake on top of a hill. The hill itself is a man-made hill which is built on the slope of a mountain

Southern slope of the dam containing the lake on the hillThe turbine house of the pumped storageInside the turbine house. The picture shows the Franklin Turbine used for this pumped storage

A big shovel-turbine wheel of a Franklin turbine which is at this moment under serviceThe inlet of the water coming from the upper lake shooting into the turbineWater inlet into the turbine

Control room of the three pumped storagesMr. Eder, manager of the Ruselkraftwerke, in the control-roomTransformers of the Ruselkraftwerke for the Parstweiher pumped storage

 

ஆரோவில்லில் நீரேற்றுத் தேக்கம் எவ்வாறு கட்டமுடியும்?

 ஆரோவில்லில் நீரேற்றுத் தேக்கம் கட்டுவதற்கு கொள்கையளவில் மூன்று வழிகள் உள்ளன:

 a)  வரவிருக்கும் மாத்திரிமந்திர் ஏரியில் தேண்டப்படும் மண்ணைக்கொண்டு ஒரு குன்றை உருவாக்கி அதன் மேல்பகுதியில் ஒரு சிறிய ஏரியை அமைப்பது. இந்த அமைப்பில் மேல் மற்றும் கீழ்நிலை ஏரியின் உயர வித்தியாசம் தோரயமாக 30 மீட்டர் இருக்கும். மேல் நிலை ஏரியின் கன அளவு தோரயமாக 160000 கன மீட்டர்கள்.

 

b) நீரேற்றுத் தேக்க அமைப்பில் மாத்திரிமந்திர் ஏரியை ஒருவேளை நாம் உட்படுத்த விரும்பவில்லையென்றல், கடற்கரைக்கும் மிக உயர்ந்த ஆரோவில் பகுதிக்கும் உள்ள வேறுபாட்டை நாம் பயன்படுத்த முடியும். மிக உயர்ந்த பகுதி மாத்திரிமந்திர் பகுதியாகும் ஆகவே மேல்நிலை ஏரி மாத்திரிமந்திரை விட்டு வெகுதொலைவில் இருக்கக்கூடாது.

 

c) இரண்டு முறைகளும் இணைந்தும் இருக்கலாம். மாத்திர்மந்திர் ஏரிக்கு தோண்டப்படும் மண்ணின் மூலம் கட்டுவதாக நாம் கருதும் முன்மொழிந்த குன்றை எடுத்துக்கொண்டு, அதன்பின் அக்குன்று அருகே இரண்டாவது ஏரியின் படுக்கையை நாம் தோண்டலாம். இரண்டாவது ஏரியில் தோண்டும் மண் மூலம் குன்றின் உயரத்தை அதிகப்படுத்தலாம். குன்றுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது ஏரியை நாம் கடற்கரைக்கு அருகில் தோண்டும் ஏரியுடன் இணைக்க முடியும். இதில் தோண்டப்படும் மண் மறுபடியும் குன்றின் உயரத்தை அதிகரிக்கப் பயன்படும்.

 

வழிவகை a)வை நிலைப்படுத்தினால் மாத்திரிமந்திர் ஏரியில் தோண்டப்படும் மண் மூலம் கட்டப்படும் குன்று மீதுள்ள நீரேற்றுத் தேக்கம், ஆரோவில் முழுமைக்கும் முழுவதும் 48 மணி நேர மின்சார துண்டிப்பை  சமன் செய்யும் மின்சார சேமிப்பு கொள்திறனை நாம் அடையலாம். மக்கள் தொகை 40000 மக்களாக அளவுகொண்டால், அப்படியும் இந்த அமைப்பு 2 மணி நேர மின் துண்டிப்பை சமன்செய்யும்.

 

   பின்வரும் துவான் (Toine) அவர்களால் செய்யப்பட்ட எக்ஸெல் தாள் பல்வகை வழிவகைகளை தரும்.

   நீங்கள்  குறிப்பிட்ட சில அலகுகளை அதாவது மக்கள்தொகை போன்றவற்றை மாற்றினால் மின்சார

   துண்டிப்பை சமன்செய்யும் ஒத்திசையும் காலநேரம் கிடைக்கும்.

 

Pumped Storage Project
Energy Storage Capacity Matrix
Assumptions
g = 9,81
Storage Eff. = 80%
Population = 10 000
Generator Eff. = 80%
Cos Ф = 0,85
E (kWh) = g x h x v x 2.77 x 10-7
Energy Storage in kWh
Vol -> 100 125 150 160 175 200 225 250
x 106 l x 106 l x 106 l x 106 l x 106 l x 106 l x 106 l x 106 l
Avg. Height of Upper Reservoir
20 m 4 348 5 435 6 522 6 956 7 609 8 696 9 783 10 869
25 m 5 435 6 793 8 152 8 696 9 511 10 869 12 228 13 587
30 m 6 522 8 152 9 783 10 435 11 413 13 043 14 674 16 304
35 m 7 609 9 511 11 413 12 174 13 315 15 217 17 119 19 022
40 m 8 696 10 869 13 043 13 913 15 217 17 391 19 565 21 739
45 m 9 783 12 228 14 674 15 652 17 119 19 565 22 011 24 456
50 m 10 869 13 587 16 304 17 391 19 022 21 739 24 456 27 174
Energy Storage in Hours
Pop -> 10 000 10 000 10 000 10 000 10 000 10 000 10 000 10 000
kWh / Annum / Capita
500 kWh 7,62 9,52 11,43 12,19 13,33 15,23 17,14 19,04
1 000 kWh 4,76 5,95 7,14 7,62 8,33 9,52 10,71 11,90
1 500 kWh 3,81 4,76 5,71 6,09 6,67 7,62 8,57 9,52
2 000 kWh 3,33 4,17 5,00 5,33 5,83 6,67 7,50 8,33
2 500 kWh 3,05 3,81 4,57 4,88 5,33 6,09 6,86 7,62
3 000 kWh 2,86 3,57 4,28 4,57 5,00 5,71 6,43 7,14
3 500 kWh 2,72 3,40 4,08 4,35 4,76 5,44 6,12 6,80
Generator Capacity in MVA
Pop -> 10 000 10 000 10 000 10 000 10 000 10 000 10 000 10 000
kWh / Annum / Capita
500 kWh 0,54 0,54 0,54 0,54 0,54 0,54 0,54 0,54
1 000 kWh 1,07 1,07 1,07 1,07 1,07 1,07 1,07 1,07
1 500 kWh 1,61 1,61 1,61 1,61 1,61 1,61 1,61 1,61
2 000 kWh 2,15 2,15 2,15 2,15 2,15 2,15 2,15 2,15
2 500 kWh 2,69 2,69 2,69 2,69 2,69 2,69 2,69 2,69
3 000 kWh 3,22 3,22 3,22 3,22 3,22 3,22 3,22 3,22
3 500 kWh 3,76 3,76 3,76 3,76 3,76 3,76 3,76 3,76

 

ஆரோவில் எவ்வாறு இவ்வகை நீரேற்றுத் தேக்கத்திலிருந்து உறுதியாக பயன் அடையமுடியும்?

a) நீரேற்றுத் தேக்கத்தினுடனான கூட்டு மின்சார பின்பாதுகாப்பு தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தனி UPS அமைப்புளை விட மிக மலிவாக இருக்கும். ஒரே அளவு ஆற்றல் சேமிப்பில் அனைத்து UPS அமைப்பின் முழு விலையுடன் ஒப்பிடும்போது மின்சார பின்பாதுகாப்பாக இருக்கும் நீரேற்றுத் தேக்கம் அதன் அமைப்பு செலவில் ( குன்று உருவாக்குவது உள்ளிட்டு ) பாதியளவே விலைக்கே வருகிறது.

 

b) நீரேற்றுத் தேக்கம் மின்கலங்களால் இயக்கப்படும் UPS களை விட மிக அதிக செயல்திறன் மிக்க ஆற்றல் சேமிப்பாகும். UPS செயல்திறன் 50% கீழாகவும் அதேநேரம் நீரேற்றுத் தேக்கத்தின் செயல்திறன் வழக்கமாக 70% மேலாக இருக்கும்.

 

c) நீரேற்றுத்தேக்கம் மூலம் நாம் ஆரோவில்லில் 24/7 தடையற்ற மின்சாரம் பெறுவோம். நீரேற்றுத் தேக்கத்தை பெரிய டீசல் மின்னியற்றி போன்று மின்னியற்றியாகவோ அல்லது மிக நுண்ணறிவு அமைப்பாகவோ நாம் பயன்படுத்தலாம்: மின்கட்டமைப்பு சார்ந்த நீரேற்றுத் தேக்கம் மின்கட்டமைப்புக்கு மின்சாரம் கொடுக்கிறது மேலும் அது மின்சாரம் நகர்த்தும் மின்சார உற்பத்திக் கலனாகவும் கருதலாம் ( மின்சாரம் நகர்த்தல் என்பது மின்வினியோகத்திற்கு அதன் உற்பத்தியிடத்திலே ஆற்றல் அளிப்பதும் மற்றும் AV மின்மாற்றியில் செலவிடப்படும் ஆற்றலை மின்கட்டமைப்பிலிருந்து எடுப்பதற்குமான தொழில்நுட்ப சொல்). ஆரோவில் காற்றுப்பூங்காவிலிருந்து காற்று மின்னியற்றி மூலம் மின்சாரம் நகர்த்துவதினால் நாம் முன்னமே தடையற்ற மின்சாரம் பெற்றுள்ளோம். ஆரேவில்லிற்கென்று தனியாக ஒரு மின்மாற்றி வாங்கினால் அதனூடே நாம் காற்று மின்னியற்றிலிருந்து மின்சாரம் நகர்த்தலாம், பின்பு இந்த மின்மாற்றி சிறப்பு ஏற்பாட்டின் கீழ் இயங்கினால் அது எப்பொழுதுமே நின்றுபோகாது. இருப்பினும், இந்த அமைப்புக்கு ஒரு குறை உள்ளது: நகர்த்துதல் மூலம் உள்ளே வரும் மின்சாரம் மற்றும் செலவிடுதலால் வெளியேறும் மின்சாரமும் காலவாரியாக ஒத்திருக்க வேண்டும்.உற்பத்தி மற்றும் செலவிடுதல் நேரமண்டலத்தை சார்ந்து கணக்கிடப்படும்     ( உச்ச நுகர்வு நேரம்- குறைவான நுகர்வு நேரம், பிற) மேலும் ஒவ்வொரு நேரமண்டலத்திற்கும் வேறுவகையான கட்டணம் பொருந்தும். உச்ச நுகர்வு நேரமான சுமார் மாலை 7 மணி அளவில், தற்பொழுதுள்ள விலை கி.வா.மணிக்கு Rs. 15 மற்றும் Rs. 18 க்கும் இடைப்பட்டுள்ளது அதேசமயம் குறைவான நுகர்வு நேரத்தில் விலை Rs. 2.8 ஆக இருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு 24/7 மின்மாற்றியில் நாம் ஆற்றலை நகர்த்தினால், அதன்பின் சிறப்பு மின்சார மானி கோயம்புத்துர் அருகே உள்ள நம்முடைய காற்றாலைப் பூங்காவினால் உற்பத்தியான மின்சாரத்தை ஆரோவில்லில் நுகரப்படும் மின்சாரத்துடன் காலவாரியாக ஒப்பிடும். குறிப்பிட்ட நேரமண்டலத்தில் நாம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்தால், நமக்கு குறைந்த விலைக்கே (Rs. 2.8) கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரமண்டலத்தில் நாம் நுகர்வதைவிட குறைவான மின்சாரம் உற்பத்தி செய்தால், நாம் முழுக்கட்டணத்தை செலுத்தவேண்டும்( எடுத்துக்காட்டாக உச்ச நுகர்வு நேரங்களில் Rs.18/கி.வா.மணி )

ஆகவேதான் மின் துண்டிப்பற்ற மின்மாற்றியுடன் கூடிய மின்நகர்த்தல் மிக விலையுயர்ந்தது. ஆனால் நீரேற்றுத் தேக்கம் நமக்கு இருந்தால், நீரேற்றுத் தேக்கத்தை மின்சார உற்பத்தியாளராக வைத்து நம் காற்றாலை மின்னியற்றி குறைவான உற்பத்தி செய்யும்போதும் மற்றும் விலை அதிகமாக இருக்கும் சரியான அச்சமயத்தில் மின்கட்டமைப்பில் மின்சாரம் அளிக்கலாம் (அதன்மூலம் அதை நகர்த்தலாம்). இவ்வழியில் நிலையற்ற காற்றாலை மின்சாரம் அல்லது சூரிய ஒளி மின்சாரத்தை நம்முடைய நீரேற்றுத் தேக்கம் மூலம் தாங்கிப்பிடிக்கலாம்.

மீண்டும் சுருக்கமாக: நம்முடைய மின்சாரத்தை காற்றாலைப் பூங்காவிலிருந்து AV மின்மாற்றிக்கு நகர்த்தலாம். மின்சாரக்கட்டணம் குறைவாக இருக்கும் சமயங்களில் அல்லது நமது காற்றாலை மின்னியற்றி ஆரோவில் நுகர்வதைவிட அதிகமாக உற்பத்தி செய்கிறபோது, மாத்திரிமந்திர் ஏரியிலிருந்து மலையுச்சி ஏரிக்கு நீர் ஏற்றலாம். இரவில் மின்சார கட்டணம் அதிகமாக இருக்கும்போது, நாம் நீரை திரும்ப பாய அனுமதித்து, சுழலி மூலம் மின்சாரம் உருவாக்கி மின்தொகுப்பிற்கு அளிக்கலாம். அதன்மூலம் மின்சாரம் அதிக விலையிருக்கும் போது மின்சாரத்தை உள்ளீடிட்டு நம்முடைய மின்நகர்த்தல் முறையை இவ்வாறு இடைத்தாங்கலாம்.

d) ஜெர்மன் நீரேற்றுத் தேக்கம் செய்வது போன்று ஆரோவில் தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் (TNEB) ஒரு சிறப்பு கட்டணத்தை பெற்றிடலாம் மேலும் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை உச்ச நேரங்களில் அதிக விலைக்கு வழங்கலாம்.

 

ஆரோவில்லின் நீரேற்றுத் தேக்கம் மூலம் சுற்றுப்புறம் எவ்வாறு பயனடையும்?

        a)தற்பொழுது பயன்பாட்டிலுள்ள UPS அமைப்புகளை விட அதிக செயல்திறனுள்ள சேமிப்பினால் நீரேற்றுத் தேக்கம் மின்சார

    நுகர்வை குறைக்கும்.

b)மாற்று மின்னாற்றல் கலன்களான காற்றாலை மின்னியற்றி அல்லது சூரியஒளி ஆற்றல் வரைவுகளில் உற்பத்தியாகும் நிலையற்ற மின்சாரத்தை சமன்செய்ய ஒரு நீரேற்றுத் தேக்கம் உதவிசெய்ய முடியும். அதனால் மின்தொகுப்பை நிலையற்றதாக்காமல் அதிக புதுப்பிக்கவல்ல ஆற்றலை உற்பத்தி செய்யமுடியும்.

c)தமிழ்நாட்டை பொறுத்தளவில் நீரேற்றுத் தேக்கம் என்பது மிகச் சிறப்பான மற்றும் சிக்கலான ஏதோ ஒன்றாக தற்பொழுது கருதப்படுகிறது. தென்னிந்தியாவில் இது பொதுவான தொழில்நுட்பமாக இல்லை. ஆரோவில் சுயமான நீரேற்றுத் தேக்கம் அமைத்தால், சிறிய நிறுவனங்கள் கூட அப்படிப்பட்ட கலனை அமைப்பதற்கு அது செயல்முறை விளக்கம் அளிக்கும். இது TNEB மற்றும் தனி முதலீட்டாளர்களுக்கு மற்ற அவ்வாறான கலன்களை அமைக்க ஊக்கமளிக்கும், அது மின்தொகுப்பில் புதுப்பிக்கவல்ல ஆற்றலின் விகிதத்தை உயர்த்த உதவும்.

d)நீரேற்றுத்தேக்கம் மூலம் உச்ச நேர மின்சார உள்ளீடுக்கு சிறப்புக் கட்டணத்தை ஆரோவில் TNEB உடன் ஒப்பந்தம் செய்துகொண்டால், அக் கட்டணம் வர்த்தக ரீதியாகவும் ஒத்துவரக்கூடியதாக நிருபனமானால், பிறகு இது ஆரோவில் சேமிப்பு அமைப்பை பிரதி எடுக்கும் தனி முதலிட்டாளார்களுக்கு தடைநீங்கிய வழியாக அமையும்.

 

நீரேற்றுத் தேக்கங்களின் ஒரு சில விவரங்கள்

ஒரு நீரேற்றுத் தேக்கத்திற்கு இரண்டு குழாய்வழிகளோ அல்லது தனி இறைப்பி மற்றும் தனி சுழலியோ தேவைப்படாது. சுழலி மின்சாரம் தயாரிக்கும்போதே இறைப்பி நீர் ஏற்றும். ஒரு திசையில் இயங்கும்போது அது இறைக்கும் மற்றும் ஆற்றலை நுகரும், மறு திசையில் இயங்கும்போது மின்சாரம் தயாரிக்கும்.

உயர்நிலை மற்றும் கீழ்நிலை ஏரியின் படுக்கைமட்ட தூரம் அமைப்பின் செயல்திறனை பாதிக்காது. பார்ஸ்ட்வெயர் (Parstweiher) நீரேற்றுத்தேக்கத்தின் படுக்கைமட்ட தூரம் பல கிலோமீட்டர்கள் ஆகும். இருப்பினும் திரு எடர் ( Mr. Eder ) அவர்கள் குழய்களின் தடுப்புதன்மையால் ஏற்படும் அழுத்த இழப்பு 1% ற்கும் குறைவானது என்று மதிப்பிடுகிறார்.