வருணா காற்றாலைப் பூங்காவின் முற்றுமான தற்சார்பு

காற்றாலைப் பூங்கா பற்றிய செய்திக்குறிப்புகள்

 

வருணாவின் குறிக்கோள்களில் ஒன்று, ஒரு பசுமைப்பூங்காவை அமைத்தல், அப்பூங்கா:

அ)  தன்னைத்தானே நிலைநாட்டிக் கொள்ளுதல் – அதாவது முற்றிலுமாக தற்சார்பு கொண்டதாய் இருத்தல்
ஆ) ஆரோவில்லின் வளர்ச்சியோடு தானும் வளர்தல்.


இ) ஆரோவில்லிற்குத் தேவையான சக்தி முழுவதையும் அளித்தல்

 

இம்மூன்றையும் சாதிக்க வல்லதாய் அமைய வேண்டும்.

 

இவற்றை விரிவாகக் காண்போம்:

 


அ) தற்சார்பு உடையதாய் இருத்தல்: அதாவது 20 வருடங்களுக்குப் பிறகு, இதுவரை (20 வருடகால அளவில்) வேலை செய்த (அல்லது வேலைத்திறன் குறைந்த) முதல் காற்றாலையை எடுத்து விட்டு, புதிதான ஒன்றை நிறுவுவதற்குத் தேவையான முதலீட்டை வருணா ஒதுக்கி வைத்தல் வேண்டும். அல்லது மறு முதலீடு செய்ய வேண்டும். 20 வருடங்கள் மட்டுமே அந்த ஜெனரேட்டர் வேலை செய்யும் திறன் கொண்டதாக இருப்பதால், வருடாவருடம் 5% அளவிலான தொகையை புதிய ஒன்றுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும். தற்சமய விலையை வைத்துப் பார்த்தால், 0.8 மெகாவாட் ஜெனரேட்டருக்கு 4.5 கோடி ரூபாய் தேவைப்படுகிறது, ஒரு வருடத்திற்கு என்று பார்த்தல் அது 22.5 இலட்ச ரூபாய் ஆகிறது.


ஆ) ஆரோவில்லின் வளர்ச்சியோடு தானும் வளர்தல் : ஆரோவில் வருடத்திற்கு 5% வீதம் வளர்கிறது அல்லது ஆரோவில்லின் மின்சக்தி தேவை 5% அதிகமாக தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது பசுமைப்பூங்காவிலுள்ள காற்றாலையின் மின்உற்பத்தியும் 5% அதிகரிக்க வேண்டுமல்லவா? அப்படிப் பார்க்கும் போது, நாம் ஒவ்வொரு காற்றுவிசைப்பொறி உருளையின் (wind turbine) தற்போதைய விலை 4.5 கோடியுடன் 5% சேர்த்துக் கொண்டு, 22.5 லட்சத்திற்கும் அதிகமாக மறுமுதலீடு செய்ய வேண்டும்.


இ) ஆரோவில்லிற்குத் தேவையான சக்தி முழுவதையும் அளித்தல்: மேற்கூறிய இரண்டையும் விட முக்கியமானது. இதுதான். அதாவது, ஏற்கனவே, கூறியபடி புதிய ஜெனரேட்டருக்கான முதலீடாக 22.5 லட்சமும், மேற்கொண்டு ஆரோவில்லின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு இன்னொரு 22.5 இலட்சத்தையும் பசுமைப்பூங்காவிற்கென தனியாக ஒதுக்கி வைத்துக் கொண்டு வரவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நாம் நமது காற்றாலை ஜெனரேட்டரிலிருந்து உற்பத்தியாகும் மின்சக்தியை நேரடியாக ஆரோவில்லிற்கு அளிக்க முடியாமல் இருக்கிறோம். சரியாக சொல்லப் போனால், நாம் உற்பத்தி செய்யும் மின்சக்தியை விற்று. அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு ஆரோவில்லின் மின்கட்டணச் செலவை சரி செய்கிறோம். தற்சமயம் வருடத்திற்கு கிட்டத்தட்ட 32 லட்ச கிவாஅ அளவு மின்சக்தியை ஆரோவில் உபயோகப்படுத்தி வருகிறது. இதற்கான மொத்த மின்கட்டணமாக செலுத்தப்படுவது சுமாராக 1.5 கோடி ரூபாயாகும்.

ஏற்கனவே நாங்கள் நிறுவியுள்ள காற்றாலைகள், இனிமேலும் அமைக்க இருப்பவைக்கான பட்டியல் பின்வருமாறு: மேலே சொன்ன எல்லா குறிக்கோள்களையும் நிறைவேற்ற நாங்கள் குறைநத பட்சமாக 7 காற்றாலைகளை அமைக்க வேண்டியிருக்கும். ஆரோவில் நிறுவனஅமைப்பிற்கு வெளியில், காற்றுமின்சக்தியை ஒரு குழு அமைப்பாக நாங்கள் விற்பனை செய்வதற்கு முடிந்தாலும், ஆரோவில் நிறுவனஅமைபிற்குள் உள்ள காற்றுமின்சக்தியை அவ்வாறு செய்ய இயலாது. ஆரோவில் நிறுவன அமைப்பிற்குள் உள்ள ஒன்று அல்லது இரண்டு காற்றாலையின் மின்சக்தியை எங்களால் சுழல்முறையில் உபயோகப்படுத்த முடிந்தால், நமது உற்பத்தியும் பயன் பெறுதலும் பெருமளவில் சமநிலையில் அமைந்து பிரகாசமான எதிர்காலம் அமையும். ஏனென்றால் இப்போது நாங்கள் 1கிவாஅ மின்சக்தியை ஆரோவில்லிற்குப் பெற, 2கிவாஅ அளவு உற்பத்தி செய்து விற்க வேண்டியுள்ளது. அதேசமயம், நாங்கள் விற்கும் மின்சக்தியின் விலை 1கிவாஅ அளவிற்கு ரூபாய் 3.39, ஆனால் ஆரோவில்லிற்கென உபயோகப்படுத்தப்படும் மின்சக்தியின் ஒவ்வொரு கிவாஅ அளவிற்கும் கொடுக்கும் விலையோ ரூபாய் 7.

 

நமது காற்றாலைப் பூங்காவின் திறனை மிகச் சிறப்பாக, முழுமையான முறையில் செயல்படுத்திக் கொள்வதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்பது தெளிவாக உள்ளது. அதோடு கூட நமது இலக்குகளை எட்ட நாம் அதனை சற்று விரிவுபடுத்திக் கொள்வதும் அவசியமாகிறது.