சூரியஒளி ஆற்றலில் வருணாவின் வழி

 

காற்றுசக்தியையும் சூரியசக்தியையும் நாம் ஒப்பிட்டு பார்த்தால், தமிழ்நாட்டில் இனிமேலும் காற்றாலைகள் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்வது என்பது ஒரு சிறிதும் அர்த்தமில்லாதது என்பது புரிகிறது. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழல் இதற்கு மேலும் பயன்பட முடியாதபடி உள்ளது. ஏனென்றால், தமிழ்நாடு மின்சாரவாரியம் அந்த சக்தியை மின்வினியோக இருப்புவரைச்சட்டத்தில் (grid) பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

 

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு நமக்கு மூன்று தேர்வுகள் உள்ளன.

அ) தமிழ்நாட்டிற்கு வெளியில் காற்றாலைகளை அமைத்தல்

ஆ) நமது கவனத்தை போல்டோவோல்டிக் சக்தியில் செலுத்துதல்

இ) சுற்றுச்சூழலோடு இயைந்து செல்கின்ற சாதனங்களில் முதலீடு செய்தல் – உதாரணமாக விரைவியக்கமுடன் கூடிய சேமிப்பு அல்லது மின்வினியோக இருப்புவரைச் சட்டத்தை மேம்படுத்தல் (grid-enhancement)

 

சுற்றுச்சூழலை மனதில் கொண்டு பார்க்கும் போது, நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம். அது என்னவென்றால், தமிழ்நாடு அடுத்ததாக செல்ல வேண்டியது பெருமளவில் சூரியசக்தியை உபயோகப்படுத்துவதை நோக்கியே. ஆகவே தான் நாங்கள் ஆரோவில்லில் சூரியசக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை நிறுவ நினைத்துள்ளோம்.

 

ஆயினும் நாங்கள் கீழ்க்காணும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம்:

அ) இதுவரை தமிழ்நாட்டில் நாங்கள் அமைக்க நினைத்துள்ள அளவில் (1மெகாவாட் அளவு) மின்வினியோக இருப்புவரை சட்டத்தோடு இணைந்துள்ள தொழிற்சாலை (grid-connected plant) அமைக்கப்படவில்லை.

ஆ) சூரியசக்தியால் தயாரிக்கப்படும் மின்சக்தியை மின்வினியோக இருப்புவரைச் சட்டத்தின் மூலம் வழங்குவதற்கான வரைமுறைகள் ஏதும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தால் கொண்டுவரப்படவில்லை. இதுவரை சூரியமின்சக்தியைப் பெற்றுக் கொள்ளவென ஒரு ஒப்பந்தமும் தமிழ்நாடு மின்வாரியத்தால் கையெழுத்திடப்படவில்லை. ஆகவே, நாங்கள் தமிழ்நாடு மின்வாரியத்தின் சட்டதிட்டங்கள் என்னவென்று அறிய முடியாத நிலையில் திக்குதிசை புரியாமல் இருக்கின்றோம்.

இ) எங்களது உற்பத்தி செலவு 1கிலோவாட்டுக்கு பத்து ரூபாயாக இருக்கும் பொழுது, தமிழ்நாடு மின்வாரியம் 1 கிலோவாட்டுக்கு கொடுக்க போவது ரூபாய் 2.80 ஆக இருக்கும் என நினைக்கிறோம்.

உ) புதுப்பிக்கப்படக்கூடிய மாற்றுசக்தி சான்றிதழ் மூலம் நல்லதொரு கூடுதல் வருமானம் பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆயினும் இந்தியாவில் இந்தத் திட்டம் எந்த அளவிற்கு செயல்படப் போகிறதென்று தெரியவில்லை. வழக்காற்றுமுறையில் மின்சக்தி உற்பத்தி செய்வோர் (உதாரணமாக, தனியார் நிலக்கரிமின்சக்தி தொழிற்சாலைகள், அல்லது தமிழ்நாடுமின்வாரியத்திற்குச் சொந்தமான நிலக்கரி மின்சக்தி தொழிற்சாலைகள்) குறைந்த பட்சமாகவேணும் (தற்சமயம் 7% முதல் 9%) பசுமைசக்தியை உபயோகிக்க வேண்டுமென மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. அப்படி செய்ய முடியாத பட்சத்தில் அவர்கள் இது போன்று உற்பத்தி செய்வோரிடமிருந்து புதுப்பிக்கப்படக் கூடிய மாற்றுசக்தி சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, அந்தக் குறைவை சரி செய்து கொள்ளலாம். இதில் பிரச்சினை என்னவென்றால், இதுவரை தமிழ்நாடு மின்வாரியமோ அல்லது தனியார் நிறுவனங்களோ இந்த சான்றிதழ்களை வாங்கி சமர்ப்பிப்பதற்கு முன்வரவில்லை. இது அவர்கள் செய்யவேண்டிய ஒன்றாகும். இதுவே ஒரு நடைமுறையாக வந்து விட்டாலும்கூட அவர்கள் அப்படிப்பட்ட விதியையும் அலட்சியம் செய்து விடுவார்கள். அதனால் அவர்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை. ஆனால் புதுப்பிக்கப்படக் கூடிய மாற்றுசக்தி சான்றிதழ் பயன்பாடு தோல்வியுற்று விடும்.

ஊ) வருணாவின் பொருளாதார சுதந்திரத்தினால், நாங்கள் ஒருவேளை இது போன்ற ஒரு பெரிய சூரியசக்தி மின்தயாரிப்பு நிலையத்தை, நஷ்டத்தை எதிர்க்கொண்டாகிலும் அமைத்து விட முடியும். (முதலீடு 12 கோடி ரூபாய் ஆகலாம்.) தமிழ்நாடு மின்வாரியத்தோடு இணைந்து இதற்கென ஒரு விலையை நிர்ணயித்தும், இந்த சூரியமின்சக்தியை புதுப்பிக்கப்படக்க கூடிய மாற்றுசக்தி சான்றிதழ்கள் மூலம் வாங்குவதற்கான விதிமுறைகளை உண்டாக்குவதன் மூலம், இனிமேல் வரவிருக்கும் மற்ற சூரியமின்சக்தி உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு ஒரு வாயிலைத் திறந்து விட முடியும். இப்போது நாங்கள் அப்படிப்பட்டதோர் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி விட்டோமென்றால், நாங்கள்தான் தமிழ்நாட்டின் சூரியசக்தியைப் பயன்படுத்துவோரின் முன்னோடியாகத் திகழ்வோம். ஆனால், அதேசமயம் வியாபார ரீதியாக லாபம் தாரத முதலீடாக அமைந்து விடுமேயானால், நாங்களே ஒரு மோசமான முன்னோடியாக ஆகிவிடுவோம். தமிழ்நாடு மின்வாரியம், ஏற்கனவே ஒரு நிறுவனம் இதுபோல உற்பத்தி செய்து தங்களுக்கு மின்சாரத்தைக் கிவா ஒன்றுக்கு ரூ.2.80 என விற்று வருகிறது என்று சொல்லி, ஒருவேளை சூரியமின் சக்திக்கான, ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையைக் கொடுப்பதற்குத் தயங்கும். ஆகவே, முடிவில் ஒரு லாபம் கொடுக்காத இந்த முதலீட்டில் பணத்தை செலவழிப்பதனால், எங்களது வணிக முதலீட்டை மேற்கொண்டு முடக்குவதாக ஆகிவிடும்.

 

ஆரோவில்லில் சூரியமின்சக்திதயாரிப்பு நிலையத்தை அமைப்பதனால் கிடைக்கக் கூடிய பலன்கள்:

 அ)விரைவியக்கமுடன் கூடிய சேமிப்பு நிலையம் (pumped storage) ஒன்றை ஆரோவில்லில் ஒரு குன்றின் மேல் அமைக்க முடியுமென்றால், நாளடைவில், ஆரோவில் தனக்கென முழுசுதந்திரமான மின்வரைவுசட்டம் (grid) ஒன்றை அடைவதை நாம் இலக்காகக் கொள்ள முடியும்.

சூரியமின்சக்தியை நேரடியாக ஆரோவில்லில் வீடுகளுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அளிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு உபரிமின்சக்தியை உபயோகப்படுத்தி ஓர் உயர்ந்த இடத்தில் உள்ள ஏரியில் நீரை விசைக்குழாய் மூலம் நிரப்பிவிட வேண்டும். இரவு நேரங்களில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியாது. அப்போது உயரே உள்ள ஏரியிலிருந்து நீரை கீழ்மட்டத்திலுள்ள அடுத்த ஏரிக்கு பாய்ச்சுவதன் மூலம் மின்உருளைகளை இயங்கச் செய்து மின்சக்தியை உற்பத்தி செய்ய இயலும்.

 ஆ)சூரியமின்சக்தி உற்பத்தி நிலையத்தை நிறுவுகின்ற அதேசமயம் நாம் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் டான்ஜ்ட்கோ போன்றவர்களுடன் மின்வரைசட்டத்தோடு இணைக்கப்பட்ட சூரியமின்சக்தி நிலையங்களுக்கான சட்டதிட்டங்களை கலந்தாலோசிக்க வேண்டும். இதனை நாங்கள் அடையமுடியுமென்றால், அப்போதுதான் எங்களது நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்குமே ஒத்த ஒரு பெரிய சாதனையைச் செய்தவர்களாவோம்.

 இ)நாங்கள் முதன்முதலாக தமிழ்நாட்டில் மின்வரைசட்டத்தோடு இணைக்கப்பட்ட சூரியமின்சக்தி நிலையத்தை அமைத்தோமானால், எங்களால் சட்ட வரைமுறைகளை நிர்ணயிக்கும் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் டான்ஜ்ட்கோ போன்றவர்களுடன் ஒரு நல்ல உறவை உண்டாக்கிக் கொள்ள முடியும். அதன் மூலம் வரப் போகின்ற நாட்களில் இந்தியாவில் சூரியமின்சக்தி பயன்பாட்டை இடம் பெறச் செய்வதில் நாங்கள் ஓர் ஆக்கபூர்வமான ஆதிக்கம் செலுத்த இயலும்.

 ஈ) இந்த உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் பொழுது நாட்கள் செல்லச் செல்ல, எங்களால் அடிப்படை கட்டமைப்புகளையும், சேவைகளையும் வளர்த்துக் கொள்ளவும், இந்தத் துறையில் துடிப்பாக செயல்படவும் முடியும். உதாரணமாக, சீனாவில் உள்ள ”வேபர்ஸ்” அல்லது ஜெர்மனியின் தரமிக்க சக்தியை மாற்றும் உபகரணங்கள் போன்று பொருள்களை விற்கும் வணிகர்களிடம் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அடுத்தப்படியாக, பெரிய நிறுவனங்களுக்கு இது போன்ற கட்டமைப்புகளை அமைப்பதற்கு எங்களால் உதவ முடியும். அல்லது நாங்களே மேலும் மேலும் பல தயாரிப்பு நிறுவனங்களை அமைக்க முடியும், அது எப்போதென்றால், சரியான விதிமுறைகளை அமைப்பதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்று நம்பிக்கை வரும்போது தான்.

 

அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

 

தற்சமயம் சூரியமின்சக்தியைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் டான்ஜ்ட்கோ ஒரு பெரும் குழப்பத்தில் இருக்கின்றன. ஆகவே தமிழ்நாடு மின்வாரியம் நிச்சயமாகவே இத்திட்டத்தை ஆதரிக்கப் போகிறதா இல்லையா என்பதை நாங்கள் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் 3000 மெகாவாட் திறனளவு கொண்ட சூரியமின்சக்தி நிலையங்கள் தமிழ்நாட்டில் அமையப் போவதாக அறிவித்துள்ளார்கள். எப்படியிருப்பினும் இதுவரை தமிழ்நாடு மின்வாரியம் இதில் ஒரு சிறிதளவே முயற்சி காட்டியுள்ளது. சீக்கிரமே விதிமுறைகளில் ஒரு தெளிவு ஏற்படுமென்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். ஆகையால் முதலாவதாக 6 முதல் 8 வாரங்கள் வரை பொறுத்திருக்க வேண்டும். இரண்டாவதாக, தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் டான்ஜ்ட்கோவுடைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு எந்த விதிமுறைகளின் அடிப்படையில் எங்களது நிலையத்தை அமைக்க முடியுமென அறிவது. தற்போதைய விதிமுறைகள் உற்பத்திக்கு ஆதரவாக இல்லையென்றால், நாம் செய்ய வேண்டியது, விதிகளை மாற்றியமைக்க ஆலோசனைகள் கொடுப்பது அல்லது இதற்கு சாதகமாக புதிய விதிகளை அமைப்பது. இது ஒரு மிகப் பெரிய வேலையாகும். ஆனால் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்த வருணாவினுடைய முயற்சிகளைச் செய்வது சூரியமின்சக்தி நிலையங்களை, காற்றாலைகளை அமைப்பதை விட மிக முக்கியமான வேலையே. மூன்றாவதாக, சரியான விதிகள் அமைக்கப்பட்டவுடனேயே, தயாரிப்பு நிலையம் அமைப்பதற்கும், வினியோகத் திட்டத்தோடு (grid) இணைப்பதற்குமான செயல்முறைத் திட்டங்களுக்கான வழிகளை முடிவு செய்ய வேண்டும். அதற்கென பல வழிகள் இருக்க வேண்டும்: முற்றிலுமாக விநியோகத் திட்டத்தோடு இணைக்கப்பட்ட சேமிப்பிலிந்து உபயோகிக்க முடிந்ததாக; வினியோகத்திட்டத்திற்கு அளிக்க முடிவது, சேமிப்பிலிருந்து உபயோகிக்க முடிவது என இரண்டும் கலந்ததாக, புதுப்பிக்கப்படக்கூடிய மாற்றுசக்தி சான்றிதழ்களைப் பெற முடிந்ததாக, அல்லது மாற்றுச் சக்தி மானியம் பெறக் கூடிய திட்டங்களை உடையதாக, மற்றும் பல …

அதுமேலும், தடைபடாத மின்சக்தி கொண்டுள்ள டிரான்ஸ்பார்மருக்குள் நாங்கள் அனுப்பிய மின்சக்தியை திரும்ப விலைக்கு வாங்கிக் கொள்ள வசதி கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதில் கேள்வி என்னவென்றால், அப்படிப்பட்ட 24/7 டிரான்ஸ்பார் நாங்கள் வைத்திருக்கும்பொழுது, நாங்கள் ஆரோவில்லின் பயனீட்டாளர் மின்சக்தியை இந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து இணைத்துக் கொள்ள முடியுமா என்பதே. இந்த திட்டத்தின் மூலம், மின்தடை ஏற்பட்டபோது டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் வேலை செய்கின்ற ஆரோவில் நிறுவனங்களின் செலவினைக் குறைக்க எங்களால் முடியும். அடுத்த அடி, சீனா, ஜெர்மனி மற்றும் பல இடங்களுக்குப் போவது, பல புதிய சோலார்செல்கள், இன்வெர்டர்கள்,

சோலார்பேனல்கள் அமைக்க உதவும் சிலிக்கான் இவற்றை விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடித்து, அவற்றை இறக்குமதி செய்வது முதலியன.

அடுத்தது, திறமை மிக்க சூரியமின்சக்தி நிலையங்களை அமைப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.

அடுத்தது, கண்ணாடியில்-தங்கம், இதில் ஒரு தொழிற்பட்டறையை அமைத்து அதில் பேனல்களை தயாரிப்பதும், போட்டோவோல்டிக்கிற்கான சாதனங்களைப் பொருத்துவது.

அடுத்தது சாதனங்கள் இறக்குமதி செய்வது.

அடுத்தது, உற்பத்தி ஆலையை பகுதி பகுதியாக அமைப்பது.