மாத்ரிமந்திர் ஏரி மற்றும் தோட்டங்கள் குறித்து ஸ்ரீ அன்னை

 

(2) இம்மையப் பகுதியில் ஒரு பூங்கா இருக்கும். இதைத்தான் நான் சிறுமியாக இருந்தபோது பார்த்தேன் (சட இயற்கை சம்பந்தப்பட்டவரை உலகிலேயே மிக அழகான இடம் என்று சொல்லாலம்). அது ஒரு பூங்கா, எல்லாப் பூங்காக்களிலும் உள்ளது போல் நீர் இருக்கும், மரங்கள், மலர்கள் இருக்கும், ஆனால் மிகவும் அதிகமாகவன்று (கொடிப்பூக்கள்), பனை மரங்களும் பெரணிகளும் (எல்லா வகையான பனை மரங்கள்), நீர் (முடிந்தால் ஓடும் நீர்), முடிந்தால் ஒரு சிறு அருவி. நடைமுறை நோக்கில் இருந்து பார்த்தால், இது நன்றாக இருக்கும் ஒரு கோடியில், பூங்காவிற்கு வெளியே குடியிருப்போருக்கு வேண்டிய தண்ணீர் வழங்குவதற்கான நீர்த்தேக்கங்களை நாம் கட்டலாம்.

பூங்காவைச் சுற்றி வட்டமாக ஒரு சாலை. அது பூங்காவை நகரின் மற்றப் பகுதிகளிலிருந்து பிரிக்கும்.

எச்(H) மட்டும், அமைதியாக, மௌனமாக, உலகத்திலிருந்து தனித்து இருக்கவேண்டும் என்று விரும்புகிறாள், அவளுடைய பூங்காவில் அப்படி இருக்க கஷ்டம் ஒன்றும் இருக்காது. அதைச் சுற்றிலும் ஒரு சாலை உள்ளது, வேண்டாத பேர்கள் உள்ளே வராதபடி பார்த்துக்கொள்ள யாராவது இருப்பார்கள் – உண்மையில் எவரும் அமைதியாக இருக்கலாம் – ஆனால் நான் அங்கே இருந்தால் தீர்ந்தது!

பூங்காவும் அப்படித்தான், நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் – இவையெல்லாம் நான் அகக்காட்சியில் பலமுறை கண்டவை. அது கஷ்டமில்லை. தண்ணீர்தான் பெரிய கஷ்டம், ஏனென்றால் பக்கத்தில் பெரிய ஆறு ஒன்றும் இல்லை.

ஆனால் எப்படியாயினும், அப்படிப்பட்ட ஓர் ஆரவாரத் திட்டம் இல்லாவிட்டாலும், தண்ணீரைக் கொண்டுவர ஏதாவது செய்துதானாக வேண்டும். அதுதான் கஷ்டமான வேலை, அதுதான் அதிகநேரத்தை எடுத்துக்கொள்ளும். ஒளிவசதி, சக்தி முதலியவற்றுக்கெல்லாம் அங்கேயே தொழில் பகுதியில் ஏற்பாடு செய்துவிடலாம் – ஆனால் தண்ணீரை அப்படி உற்பத்தி செய்ய முடியாதே! அமெரிக்கர்கள் கடல்நீரைப் பயன்படுத்துவது பற்றி தீவிரமாக யோசித்து வருகிறார்கள், ஏனென்றால் பூமியில் மக்களுக்கு நீண்டகாலத்திற்கு போதுமான குடிநீர் இல்லை (அந்தத் தண்ணீரை அவர்கள் “நன்னீர்“ … என்று குறிப்பிடுகிறார்கள். இது வஞ்சப் புகழ்ச்சி). மக்கள் பயன்பாட்டிற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை, ஆகவே அவர்கள் பெரிய அளவில் கடல்நீரை நன்னீராக்கி பயன்படுத்துவதற்கான இரசாயன சோதனைகளைச் செய்து வருகின்றார்கள் – இயல்பாகவே தண்ணீர்ப் பிரச்சினைக்கு அதுதான் தீர்வு.

சத்பிரேம்: “அதுதான் ஏற்கனவே இருக்கிறதே.“

“அது இருக்கிறது, ஆனால் போதுமான அளவில் இல்லை.“

சத்பிரேம்: “இஸ்ரேலில் அது போதிய அளவில் நடக்கிறது.“

“இஸ்ரேலில் செய்கிறார்களா? அவர்கள் கடல்நீரைப் பயன்படுத்துகிறார்களா? இயல்பாகவே, அதுதான் சரியான தீர்வு – நமக்குப் பக்கத்திலேயே கடல் இருக்கிறது. அதுபற்றி ஆய்வு செய்யவேண்டும்.

பிறகு தண்ணீரை மேடான பகுதிக்கு அனுப்பவேண்டியிருக்கும்…“

***

(3) ஆ! இப்போது அன்னை மண்டபம். இது ஏரி, உயர்ந்த மரங்கள், பல்வேறு வகையான மலர்களுடைய தோட்டங்களுடன் சூழப்பட்டுள்ள ஒரு தனித் தீவாக இருக்கும். அன்னை மண்டபத்தின் வெளிமாடத்தின்மீது சிவப்பு செம்பருத்தி (ஆற்றல்) கொடிகளை நான் முக்கியமாக விரும்புகிறேன். வெள்ளை சலவைக்கல்லில் அவை உயிர்ப்புள்ள அணிகலன்கள் போல காட்சியளிக்கும். அங்கே ஜப்பானிய பாணியிலான பாறைத் தோட்டங்கள் இருக்கும், அவற்றில் பல்வகை சப்பாத்திச் செடிகள், சிறு அருவிகள், அல்லிகள், தாமரைகளுடன் கூடிய சிறு குளங்கள், சிறு பாலங்கள், பல்வேறு வகையான நீரூற்றுகள், சலவைக்கல் சிலைகள் – அவற்றில் ஆழ்ந்த மெய்மறந்த நிலையில் உள்ள சிவனும் அவற்றுள் ஒன்று. அவருடைய படர்ந்தமுடி நீரூற்றைப் போல நீரைப் பாயச்செய்கிறது…

அவர் தொடர்கிறார்:

அங்கே ஒரேயொரு நுழைவு மட்டுமே இருக்கும். விலையுயர்ந்த, பாதி விலையுயர்ந்த மற்றும் செயற்கைக் கற்களை நுழைவிலிருந்து அன்னையின் மண்டபம் வரையில் தரவரிசையில் பதிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவை யாவற்றுக்கும் முழு அர்த்தம் உண்டு.

ஒருமைப் பூங்கா பன்னிரெண்டு தோட்டங்களாகப் பிரிக்கப்பட வேண்டும், அவை எல்லாம்வல்ல அன்னையின் பன்னிரெண்டு பண்புகளை குறிக்கின்றன. இத்தோட்டங்களில் பல்வேறு வகையான மலர்கள் இருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் – குறிப்பாக பல்வேறு வகையான செம்பருத்தி மலர்கள் – தெய்வீக உணர்வு.

மற்றொரு பக்கத்தில், தோட்டங்களின் எல்லை நோக்கி, பனைகள் போன்ற பெரிய மரங்கள், பல்வேறு வகை பெரணிகள், வேம்பு, இந்திய மரமல்லி மரங்கள், தைல மரங்கள் மற்றும் பல அழகிய பெரிய மரங்கள் – அவை யாவும் ஒருமை மற்றும் ஆர்வத்தை குறிக்கின்றன. இப்பகுதி முழுவதும் ஒரு ஏரியால் சூழப்பட்டிருக்கும், ஆகவே அன்னையின் ஆலயம் ஒரு தீவில் இருக்கக்கூடும். ஏரி தோண்டப்படும் பொழுது, ஒரு மலை போல காட்சியளிக்க மண் எல்லாவற்றையும் ஒரு பக்கத்தில் சேகரித்து வைக்கவேண்டும், அங்கே தேவதாரு மரங்கள் இருக்கும். பாருங்கள், எதிர்காலத்தில் அங்கே பனி இருக்கும்…

குடியிருப்பு பகுதியில நிலத்தரையை சமன்செய்யக் கூடாது, குன்றுகள் போல இருப்பதை அவ்வாறே வைத்திருக்கவும், அங்கே மரங்கள், புற்கள், மலர்கள், சிறு குளங்கள், பாறைத் தோட்டங்கள் இருக்கும் – எல்லாமும் இயற்கை அழகு – எதுவும் செயற்கையாக இருக்காது.  

***

(5) [கியோட்டோவில் உள்ள பொற்கோயிலின் ஒரு படத்தை ஸ்ரீ அன்னையிடம ஹுட்டா காண்பித்தார்]. ஸ்ரீ அன்னை இவ்வாறு குறிப்பிட்டார்: “இக்கூரையின் வடிவத்தைத் தவிர சரியாக இதைத்தான் நாம் பெறுதல் வேண்டும – ஒரு மாடியும் ஒரு மாடமும் இருக்கவேண்டும், ஆனால், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதேபோலத்தான் இருக்கும் – ஏரி, மலர்கள், மரங்கள், பாறைத்தோட்டங்கள், சிறு அருவிகள் மற்றவை.

ஆ! உனக்குத் தெரியுமா, நான் ஜப்பானில் இருந்தபோது கியோட்டோவில் இந்த பொற்கோயிலை நான் பார்த்துள்ளேன். அது அழகானது. அன்னையின் ஆலயம் அதுபோல இருக்கும்.

தோட்டம் வளர்ப்பு ஒரு அற்புதமான விஷயம் – குறிப்பாக ஜப்பானில்.“

***

(6) மையப் பூங்கா ஒருமைப் பூங்காவாக இருக்கும், முன்பு தீர்மானித்தது போல அதில் மண்டபமும் அதன் “இணைப்பும்“

***

(7) செப்டம்பர், 1965 - [பின்னர் ரோஷே அளித்த ஓர் அறிக்கையில் ஸ்ரீ அன்னை இவ்வாறு எழுதினார்:]

“ஒருமைப் பூங்கா ஒருவகையான தனிமைப் பகுதியாக சூழப்பட்டிருத்தல் வேண்டும், ஆகவே அது தனித்தும் அமைதியாகவும் இருக்கும். அனுமதியுடன் மட்டுமே ஒருவர் அதனுள் செல்ல வேண்டும்.“

***

(12) அவற்றை நீ அங்கே பார்க்க முடியும், ஒரு செயற்கையான வட்ட ஏரியின் நடுவில் ஒருவகை தீவாக உண்மை மண்டபம் இருக்கும், ஒரு மகத்தான தாமரை மலர் சொர்க்கத்தை நோக்கித் திறந்துள்ளது போல காட்சியளிக்கும் என்பதால் நிச்சயம் நீ மகிழ்ச்சி அடைவாய்.

***

(15) 1966-இல் ஆரோவில் பற்றிய முதல் சிறுபுத்தகத்தை ஸ்ரீ அரபிந்தோ சொசையிட்டி வெளியிட்டது. இச்சிறுபுத்தகத்தை ஸ்ரீ அன்னை வாசித்து அதற்கு ஒப்புதல் அளித்தார், அவர் தாமே அறிமுகத்தை எழுதி அதில் ஸ்ரீ அரவிந்தரின் பணி தொடர்பாக அவருக்குள்ள பங்குபணியையும், ஆசிரமம் மற்றும் ஆரோவில்லின் செயல்பாடுகளையும் விவரித்தார்.

[பின்வருவன மாத்ரிமந்திர் சம்பந்தமாக அவர் தெரிவித்தவற்றில் இருந்து எடுக்கப்பட்டவை:]

“மையத்தை நோக்கிய உட்புகு அச்சுகள் ஒரு குவிவை ஏற்படுத்தும், கட்டிடங்களின் ஒரு அடர்த்தல், ஒரு இடம் வரை அதிகரித்து, ஒருமை தோட்டங்களின்மீது திடீரென்று திறக்கும்.

இத்தோட்டங்களின் மையம், ஓர் ஏரியால் சூழப்பட்டிருக்கும், “உண்மையின் சரணாலயம்“ மற்றும் மாத்ரிமந்திரைச் (அன்னையின் ஆலயம்) சுற்றி அமையும்….

….நகரின் மையத்தில், எரியில் கவிந்திருக்கும் கவிகை தோட்டங்களால் அமைக்கப்பட்ட ஒருமைப் பூங்கா, மாத்ரிமந்திருடன் உண்மையின் சரணாலயத்தைச் சூழ்ந்திருக்கும்.

உண்மையின் சரணாலயம், அதன் வடிவம் மற்றும் நிலையால் நகரின் மையத்தில் இருக்கும், ஆரோவில்லை ஆதிக்கம் செலுத்தும் புள்ளியாக இருந்து பேரொளிக்கு தன்னைத் திறக்கும்.“

***

(17) “உண்மை மண்டபமும் உன் சிறு வீடும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருக்கும் – உனது வீடு ஆலமரத்திற்கும் உண்மை மண்டபத்திற்கும் இடையில் நிற்கும். இவை எல்லாமும் ஒரு தீவில் இருக்கும் – நீர், மரங்கள், ஒருமைத் தோட்டங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கும். நம்மிடம் போதுமான பணமிருந்தால் அதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆம்… இல்லையெனில்…. ஆனால் நான் இந்நகரம் முழுவதையும் பத்து ஆண்டு காலத்திற்குள் கட்டிமுடித்திட விரும்புகிறேன்.“

***

(23) [ஆரம்பகாலத்தில் மையத்தில் (சென்டர்) குடியேறிய ஒருவர் அப்போதுதான் தனது வீட்டைக் கட்டிமுடித்து இருந்தார், அதற்கு ஒரு பெயரிட வேண்டுமா என்று தெரிந்துகொள்ள விரும்பி அவர் கேட்டதற்கான பதில்:]

“அப்பகுதி முழுவதும் “அமைதி“ என்று அழைக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அமைதி, உண்மையான அமைதி, அங்கே பரவியிருக்க வேண்டும், அங்கு வசிப்போருக்கு இடையில் மட்டுமின்றி, இப்போதைய மற்றும் வருங்கால ஆரோவில் முழுவதும் அமைதி பரவியிருக்க வேண்டும்.

 

***

(24) [ஸ்ரீ அன்னை மையப் பகுதிக்கு முன்னர் “அமைதி“ என்று பெயரிட்டார்:]

“அமைதி“. அமைதியே தலையாய விஷயமாக இருக்கவேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் அதை அமைதியான வழியிலேயே செய்யவேண்டும். இரண்டாவது அவசியமான விஷயம் இணக்கம். பொது இணக்கம் மட்டுமின்றி, அங்கே வசிக்கும் தனிநபர்களுக்கு இடையிலும் இணக்கம் இருக்கவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரிடமும் இணக்கத்தைப் பார்க்கத் தொடங்க வேண்டும். இணக்கமின்மையுடன் இருக்கக்கூடாது. இணக்கமின்மை எல்லா இடங்களிலும் இருக்கின்றது, ஆனால் அதை நீங்கள் நிராகரிக்கவேண்டும், இணக்கம் மட்டுமே நுழைய அனுமதிக்கவேண்டும்.

அங்கே ஒழுங்குணர்வு இருக்கவேண்டும்.

ஒவ்வொருவரும் சுயவொழுக்க உணர்வுடன் இருக்கவேண்டும், மேலும் உண்மையிலேயே அதை கடைப்பிடிக்க வேண்டும்.

அமைதி, இணக்கம், ஒழுங்கு, சுயவொழுக்கம்.“

***

(29) “அது மாபெரும் அழகான ஒன்றாக இருக்கவேண்டும் – மனிதர்கள் தோட்டங்களில் நுழையும்பொழுது அத்தகைய அழகைக் கண்டு, அவர்கள் இவ்வாறு சொல்வார்கள், ‘ஆ! இதுவல்லவோ அது!’, ஒவ்வொரு தோட்டத்தின் முக்கியத்துவத்தையும் உடல்ரீதியாக, உறுதியாக அனுபவத்தைப் பெறுவார்கள். இளமை தோட்டத்தில், அவர்கள் இளமையை அறிவார்கள்; ஆனந்தம் தோட்டத்தில் அவர்கள் ஆனந்தத்தை அறிவார்கள்; பூரணம் தோட்டத்தில் பூரணத்தை அவர்கள் அறிவார்கள். இவ்வாறு மற்றவற்றையும் அறிவார்கள்.

உணர்விலிருந்து உணர்வுக்கு எவ்வாறு செல்வது என்பதை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும்.“

 

(32) ஆர்(R)-இனுடைய யோசனை என்னவெனில், மையத்தில் ஒரு சிறுதீவுடன், அதைச்சுற்றி தண்ணீரும், ஓடும் நீரும் இருக்கும், அது நகரம் முழுவதற்கும் நீர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும், அது நகரின் வழியாக ஓடும்பொழுது, அது ஒரு நிலையத்திற்கு அனுப்பப்படும்; சுற்றியுள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் அங்கிருந்து நீர்ப்பாசனம் செய்யப்படும். ஆகவே, இந்த மையம் ஒரு சிறுதீவு போல இருக்கும், இம்மையத்தில், நாம் அழைக்கின்ற “மாத்ரிமந்திர்“ முதலில் அங்கே இருக்கும்.

 

மேலும் இச்சிறுதீவை கவனித்துக்கொள்ள, அங்கே ஒரு பாதுகாப்பாளராக….. மட்டுமே இருக்க விரும்பிய எச்-விற்கு அங்கே ஒரு சிறிய வீடு இருக்கும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. பிறகு மற்ற கரையை இணைக்க பாலங்களின் முழு அமைப்பை ஆர். ஏற்பாடு செய்தார். மற்ற கரையைச் சுற்றிலும் முழுவதுமாக தோட்டங்கள் அமைக்கப்படும். அத்தோட்டங்கள் ….. நாம் பன்னிரெண்டு தோட்டங்களைப் பற்றி சிந்தித்தோம் (தூரத்தை பன்னிரெண்டால் வகுத்தல்), அப்பன்னிரெண்டு தோட்டங்களிலும் ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தப்படும்: அது மலர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உணர்வு நிலை. மேலும் பன்னிரெண்டாவது தோட்டம் சிறுதீவினுள் இருக்கும், “மந்திரைச்“ சுற்றி (சுற்றியல்ல ஆனால் பக்கத்தில்) ஒரு மரம், அங்கேயுள்ள ஆலமரம். அதுதான் நகரத்தின் மையத்தில் உள்ளதாகும். மேலும் அங்கே, அதைச் சுற்றிலும் பன்னிரெண்டு தோட்டங்கள் திரும்பவும் அமைந்திருக்கும், அதேமுறையில் மலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்…. அங்கே இப்போது இரண்டு அமெரிக்கர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் கணவன், மனைவி ஆவர், அங்கே கணவர் ஓராண்டுக்கு மேலாக தோட்டக்கலையை ஆய்வு செய்தார், அந்த அறிவுடன் அவர் இங்கே வந்தார். ஆகவே உட்புறத் தோட்டத்திற்கான திட்டத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு நான் அவரைக் கேட்டேன்.

ஆனால் நிச்சயமாக, என்ன தேவையென்றால் …. அங்கே பருப்பொருள் சிக்கல்கள் உள்ளன: இச்சிறு தீவிற்கு, நமக்கு தண்ணீர் தேவை – இயற்கையாகவே, இல்லையெனில் அது ஒரு சிறுதீவு அல்ல! தண்ணீரைப் பெற, நாம் அதை உருமாற்றம் செய்யவேண்டும் – அங்கே போதிய நிலத்தடிநீர் இல்லை.“

- சத்பிரேம்: “போதிய தண்ணீர் இல்லையா?“

“அங்கே தண்ணீர் உள்ளது, ஆனால் அது ஒன்று அல்லது இரண்டு வீடுகளுக்கு போதுமானது, இருப்பினும் ஒரு நிரந்தர ஓட்டத்தை உண்டாக்க அது போதுமானது அல்ல. நாம் கடல்நீரை மாற்றம் செய்யவேண்டும். பொருளாதாரச் சிக்கனத்துடன் அதைச் செய்யும் ஒரு வழியை இஸ்ரேலில் அவர்கள் கண்டறிந்துள்ளனர் (இதுபற்றிய சிறுகையேடுகள் நம்மிடம்கூட உள்ளன), ஒரு நகரத்திற்கு பொருளாதாரச் சிக்கனமாக இருக்கும், ஆனால் ஒரு தனிநபருக்கு அல்ல என்பதை நீ புரிந்துகொள்ளவும்! ஆகவே பிறகு, இச்சிறுதீவை உருவாக்க நமக்கு தண்ணீர் தேவை, அதுதான் சிரமம்.“

- சத்பிரேம்: ஆனால் இச்சிறுதீவைக் கட்டும் முன்பு, நாம் “கோயில்“ கட்டடத்தை கட்டத் தொடங்கமுடியும் …. ஒரு கூழாங்கல்லை மேற்செலுத்தி தொடங்குதல்.“

“ஆம், நாம் அதைச் செய்ய முடியும்.“

 

***

 

(34) தோட்டங்கள் அனைத்தும் ஒன்று போல இருக்கும்: அனைத்து தோட்டங்களும் இப்போது தயார்செய்யப்பட்டு வருகின்றன, ஆனால் இருபது ஆண்டுகளில், அனைத்தும் மற்றொரு அளவில் இருக்கவேண்டும்; பின்னர் அது உண்மையில்….உண்மையிலேயே அழகான ஒன்றாக இருக்கவேண்டும்.

 

***

 

(35) ஆனால், அதைச்சுற்றி தண்ணீர் இருக்கவேண்டும், மக்கள் தண்ணீரைக் கடந்து கோயிலை அடைவதற்கு தீவு இருக்கவேண்டும் என்பது முதல் யோசனையாக இருந்தது. தீவைப் பெற்றிருப்பது சாத்தியம்தான்…..“

 

***

 

(39) [ஹுட்டாவின் கடிதம் ஒன்றுக்கான பதிலை ஸ்ரீ அன்னை சொல்ல ஆந்திரே எம். எழுதியது பின்வருமாறு:]

“மாத்ரிமந்திர் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இம்முடிவு நிரந்தமானதாக இருக்கும். ஆயினும், தண்ணீர் தற்போதைக்கு இல்லை, பின்னர்தான் கிடைக்கப்பெறும், எனவே, இப்போது மாத்ரிமந்திரைக் கட்ட முடிவு செய்யப்பட்டது, பின்னர்தான் தண்ணீர் அதைச் சூழ்ந்திருக்கும், அநேகமாக இன்னும் சில ஆண்டுகள் காலத்தில்.

மாத்ரிமந்திரைப் பொறுத்தவரை நான் நமது திட்டவரைபடத்தை தேர்ந்தெடுத்துள்ளேன், நான் எனக்குள் கண்ட அகக்காட்சிக்கு ஏற்றவாறு அது உள்ளதால் அதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன்.

ஆகவே கவலைப்படத் தேவையில்லை.

இப்போது மாத்ரிமந்திர் கட்டப்பட வேண்டும், பின்னர் அதைச் சுற்றிலும் தண்ணீர் கொண்டு வரப்படும்.“

 

***

 

(40) அது சக்தியைப் போன்றது, ஆரோவில்லின் மையச் சக்தி, ஆரோவில்லை ஒன்றுபடுத்தும் சக்தி.

அங்கே தோட்டங்கள் இருக்கும். அங்கே அனைத்தும் இருக்கும், அனைத்துச் சாத்தியக்கூறுகளும் இருக்கும் பொறியாளர்கள், கட்டடக்கலைஞர்கள், அனைத்து வகையான உடலுழைப்பு.

 

***

 

(49) [மாத்ரிமந்திர் நர்சரியில் வேலைசெய்யும் ஆரோவில்வாசிகள் பூச்செடிகளை வளர்க்கும் பணியை ஒத்திவைத்து அதற்குப் பதிலாக மாத்ரிமந்திர் அகழ்வு வேலையில் இணையலாமா என்று கேட்ட, அதேநாளில், ஸ்ரீ அன்னையிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஸ்ரீ அன்னை இவ்வாறு பதிலளித்தார்:]

“இல்லை. மாத்ரிமந்திரைப் போலவே தோட்டங்களும் முக்கியமாகும்“.

 

***

 

(91) 1972 - [அநேகமாக அந்த ஆண்டில், அநேகமாக நாரத்திடம், மாத்ரிமந்திரின் பன்னிரெண்டு தோட்டங்களுக்கான பெயர்களை ஸ்ரீ அன்னை கொடுத்தார்:]

“மாத்ரிமந்திர்: அன்பு.

பன்னிரெண்டு தோட்டங்கள்: சத், சித், ஆனந்தம், ஒளி, வாழ்வு, ஆற்றல், செல்வம், பயனுடைமை, முன்னேற்றம், இளமை, சுமுகம், பூரணம்.

ஆலமரம்: ஒருமை.“

 

***

(96) [அந்த ஆண்டில் ஒருசமயம், அது பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் தேதி குறிக்கப்படவில்லை, தனது “சாவித்ரி“ பற்றிய ஓவியங்களின் தனிப்படங்களை நன்றாகச் செய்வதில் தனக்கு நாரத் உதவமுடியுமா என்று கேட்டு ஸ்ரீ அன்னைக்கு ஹுட்டா எழுதினார், ஸ்ரீ அன்னை எழுதிய பதில்:]

“அது சரி, அவருக்குள்ள திறமையின்படி அவர் இவ்வேலையைச் செய்யமுடியும்.

ஆனால், மாத்ரிமந்திர் தோட்டங்கள் பாதிக்கப்படாதவாறு அவர் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

ஆசீர்வாதம்.“

 

***

 

(103) [அதே நாளன்று, ரோஷேவால் திட்டமிடப்பட்ட சிறிய அளவு தோட்டங்களைப் பற்றி புகார்களைத் தெரிவித்த நாரத்தின் கடிதத்தை ஸ்ரீ அன்னையிடம் ஷியாம்சுந்தர் படித்துக்காட்டினார்; இதற்கு ஸ்ரீ அன்னை வாய்மொழியாக ஷியாம்சுந்தரிடம் பதில் அளித்தார்:]

“அது மிகப் பெரியதாக இருக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் நாரத்திடம் சொல்லவிலை … ரோஷே மிகச்சிறந்த நீதிபதி.“

 

***

 

(127) டிசம்பர் 22, 1972 - [ஜப்பானியத் தோட்டம் பற்றி, மாத்ரிமந்திர் தோட்டங்கள் நர்சரியில் வேலைசெய்து கொண்டிருந்த, மேரி-ஹெலனிடம் இருந்து வந்த ஒரு கேள்விக்கு ஷியாம்சுந்தரிடம் அளித்த பதில்:]

“இயல்பாகவே அது ஜப்பானிய வழியில் இருக்கவேண்டும் [ (தோட்டங்கள்)]!“

 

 

***

 

(137) பிப்ரவரி 12, 1973 - [மாத்ரிமந்திரைச் சுற்றி மரக்கன்றுகள் நடுவது பற்றியும், தனது வெறுமை உணர்வு பற்றியும், புதிய வழியைக் கண்டறிவதற்கான ஒரு வழிமுறையைக் கோரியும் நாரத்திடம் இருந்து வந்த ஒரு கடிதத்திற்கு ஷியாம்சுந்தரிடம் கருத்து தெரிவிக்கையில், மாத்ரிமந்திர் தோட்டங்களின் நிறைவேற்றம் குறித்து ரோஷேவிடம் ஏற்கனவே தாம் விரிவாகக் கூறியுள்ளதாகவும், அதுதான் செய்யப்படவேண்டும் என்றார்.]

 

 

**********

குறிப்புதவிகள்:

2) மதர்ஸ் அஜண்டா தொகுதி, 6, பக்கம் 139-150
3) ஹுட்டாவின் புத்தகம் 2வது பதிப்பு 2002, பக்கம் 12;
5) ஹுட்டாவின் புத்தகம், பக்கம் 9;
6) ஹுட்டாவின் புத்தகம், பக்கம் 9-10 
7) ஆரோவில் ஆவணக்காப்பகம்
12) ஹுட்டாவின் புத்தகம், பக்கம் 15
15) ஆரோவில் ஆவணக்காப்பகம்
17) ஹுட்டாவின் புத்தகம், பக்கம் 23
23) ஆரோவில் ஆவணக்காப்பகம்
24) ஆரோவில் ஆவணக்காப்பகம்
29) ஹுட்டாவின் புத்தகம், பக்கம் 30
32) மதர்ஸ் அஜண்டா, தொகுதி, 10, பக்கம் 492-501
34) மதர்ஸ் அஜண்டா, தொகுதி, 11, பக்கம் 15-24
35) மதர்ஸ் அஜண்டா, தொகுதி, 11, பக்கம் 34-37
39) ஆரோவில் ஆவணக்காப்பகம்
40) ஆரோவில் ஆவணக்காப்பகம்
49) ஆரோவில் ஆவணக்காப்பகம்
91) ஆரோவில் ஆவணக்காப்பகம்
96) ஆரோவில் ஆவணக்காப்பகம்
103) ஷியாம் சுந்தரின் புத்தகம், பக்கம் 212
127) ஷியாம் சுந்தரின் புத்தகம், பக்கம் 255
137) ஷியாம் சுந்தரின் புத்தகம், பக்கம் 273