மாத்திரிமந்திர் ஏரிக்கான நீர் ஆதாரம்

ஆவியாதல் மற்றும் கசிந்தொழுகும் இழப்புகளுக்கு எதிராக நீர் மட்டத்தை தாங்குவதற்கு மாத்திரிமந்திர் ஏரிக்கு உப்பகற்றப்பட்ட நீர் தேவைப்படுமா அல்லது அறுவடை செய்யப்பட்ட மழைநீருடன் ஏரியை பராமரிக்க முடியுமா?

 

உப்பகற்றப்பட்ட நீர் மிகத் தூய்மையான குடிநீர் என ஒருவர் கருதலாம். இது சுத்திகரிக்கப்பட்ட நீர் போன்று நுண்ணுயிரிகள், தாதுக்கள், மாசற்ற சுத்தமான குடிநீர் ஆகும். மழைநீர் பூமியை அடைந்த உடனேயே மிகவும் மாசடைகிறது, குறைந்தபட்சம் நமது ஆரோவில் பகுதியில் மாசடைகிறது. இது பூமியின் மேற்பரப்பில் தொடர்புகொள்ளும் போது, கூடுதலாக நிறைய பாஸ்பேட் மற்றும் மற்ற கரிம கனிம பொருள்களை உறிஞ்சுகிறது. அறுவடை செய்யப்பட்ட மழைநீரை குடிநீராக மாற்றுவது கடினமான விலையுயர்ந்த ஆற்றல் நுகரும் செயல்முறையாக இருக்கும்.


ஆகவே உப்பகற்றப்பட்ட நீர் குடிநீர் பயன்பாட்டிற்காக சேமிக்கவும் அறுவடை செய்த மழைநீரை வருங்கால மாத்திரிமந்திர் ஏரியின் நீர்மட்டத்தை பராமரிக்க உபயோகப்படுத்தவும் முயற்சிப்பது இயற்கையானதாகும்.


பருவமழைக் காலத்தில் மாத்திரிமந்திர் நீள்கோளம் மற்றும் மாத்திரிமந்திரின் மிக அருகாமை பகுதிகளில் வருங்கால ஏரியின் வருட நீர் இழப்பை ஈடுசெய்ய போதுமான மேற்பரப்பு நீரை நாம் உண்மையில் சேகரிக்கலாம். ஏரி எவ்வளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கக்கூடும் என்பது பெரிய விஷயமல்ல. ஒரே பிரச்சனை, நீர்மட்டத்தை பேரளவில் மாறுபடுத்தினாலன்றி இதை நாம் மாத்திரிமந்திர் ஏரியிலேயே சேமிக்க முடியாது.


தற்பொழுது கிடைக்கும் புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்வதாவது நமது பகுதியில் வருட மழைபொழிவிற்கும் வருட ஆவியாதலுக்கும் உள்ள வேறுபாடு நீர்க்கம்பத்தில் 40 செ.மீ   மட்டுமே. நிச்சயமாக இது முதலில் நமது சோதனைக் குளத்தில் உறுதிச்செய்யப்பட வேண்டும், ஆனாலும் இது உண்மையாக இருந்தால் “மாறுபக்க ஆவியாதல் இழப்பு” 160000 சதுர மீட்டர்கள் பரப்பிற்கு 64000 கன அளவு நீராக வருட அளவில் இருக்கும். ஒவ்வொரு வருடமும் சுமார் 40000 கன மீட்டர்கள் சேகரிக்கக்கூடிய நீரை மாத்திரிமந்திர் நீள்கோளமே வழங்கும். ஏரியை விடவே பெரிதாக கருதப்படும் ஏரியின் கிழக்கு மற்றும் தெற்கு கரைகளிலிருந்து அறுவடை செய்யப்பட்ட மழைநீரும் சேர்ந்து, ஏரியிலிருந்து ஆவியாகும் நீரை ஈடுசெய்யும் போதுமான நீர் உறுதியாக நம்மிடம் இருக்கும். கசிவு இழப்பு குறித்த புள்ளிவிவரங்கள் இன்னும் நம்மிடம் இல்லை. இவைகள் கூட நம்முடைய சோதனைக் குளம் பரிசோதனையில் கணக்கிடப்படவேண்டும். ஆனாலும் இது ஆவியாதல் இழப்பை விட குறைவாக இருக்கும் என நாம் கருதுகிறோம். மொத்தத்தில், பருவமழை காலம் முதல் கோடைக்காலம் வரை சேகரித்த மேற்பரப்பு நீரை நாம் சேமித்தோமானால், சுயமாய் நீடிக்கும் நீர் நிலை அளிக்கக்கூடியதாக ஏரிப்பகுதி இருக்கும் என நமக்கு நம்பிக்கையுள்ளது.


மாத்திரிமந்திர் ஏரியை கிரின் பெல்ட்டிலுள்ள குன்று மீதிருக்கும் இரண்டாவது ஏரியுடன் இணைக்கும் நம்முடைய தற்போதைய திட்டத்தில், மாத்திரிமந்திர் ஏரிக்கு அத்தகைய நீர்த்தேக்கம் ஏற்படுத்துவது குறித்து நாம் சிந்திக்கிறோம். முன்மொழிந்த குன்றுக்கு பின்னால் ஏராளமான நிலம் விலைக்கு உள்ளது. நாம் அங்கே கூடுதலாக சில நிலங்களை வாங்கி, அவ்விடத்தில் திறந்த வெளி நீர்நிலை உருவாக்கினால், அது வருங்கால மாத்திரிமந்திர் ஏரிக்காக சேமிக்கும் கொள்திறனை வழங்கும்.


ஏரி மற்றும் குன்றுக்கிடையில் குழாய்வழிகளுடன் கூடிய இணைப்பு எவ்வாறாயினும் இருக்கும், ஆகவே மாத்திரிமந்திர் ஏரியிலிருந்து நீர்நிலை சேமிப்பகத்திற்கும், திரும்ப மாத்திரிமந்திர் ஏரிக்கும் நீரை எடுத்துச்செல்லும் வசதியளிக்க மிகையாக எதுவும் கட்டவேண்டியதில்லை. முன்மொழிந்த மலைக்குப் பின்னால் நீர்நிலை இருப்பதனால் மாத்திரிமந்திர் ஏரியைப்போன்று அழகான கூறுகளுடன் அமைய வேன்டியதில்லை, அதனுடைய நீர் மட்டம் வரம்பின்றி வேறுபடலாம்.


மாத்திரிமந்திர் ஏரிக்கான மாறுபக்க ஆவியாதல் மற்றும் கசிவு இழப்புகள் சுமார் வருடத்திற்கு 100000 கன மீட்டர் அளவாக கருதினால், 15000 சதுர மீட்டர் மற்றும் 10 மீட்டர் ஆழமுள்ள திறந்தவெளி நீர்நிலை மாத்திரிமந்திர் ஏரியாவில் சேகரிக்கப்பட்ட மழைநீரை உட்கொள்ள போதுமான சேமிப்பு கொள்ளளவை அளிக்கும், அதன்மூலம் மாத்திரிமந்திர் ஏரி நீண்ட நாட்களுக்கு அறுவடைசெய்யப்பட்ட மழைநீரில் மட்டுமே செயல்பட அனுமதிக்கும்.

 

முன்மொழிந்த குன்றுக்கு மட்டும் அல்லாமல் அத்தகைய ( மூன்றாவது எனச் சொல்லலாம்) ஏரிக்கும் சேர்த்து நிலம் வாங்கும் தேர்வை செயல்படுத்தும் முறையில் நாம் தற்பொழுது உள்ளோம். நம்முடைய ஒருங்கிணைந்த அமைப்பு மாத்திரிமந்திர் ஏரி, குன்று உச்சி ஏரி மற்றும் சிறிய மழைநீர் சேமிப்பு ஏரியுன் இருக்கும் எனப் பொருள் கொள்ளலாம். மாத்திரிமந்திர் ஏரியை நிரப்பும் ஆரம்ப காலத்திற்கு மட்டுமே உப்பகற்றிய நீர் தேவைப்படும், தொடர்ச்சியான பராமரிப்பிற்கு தேவைப்படாது.