ஆரோவில்லில் பணமற்ற சமூகம்

ஆரோவில்லில் பணபறிமாற்றம் எதுவும் இருக்காது. வெளியுலகில் மட்டுமே ஆரோவில் பணத்தொடர்பு வைத்துக்கொள்ளும். பணம் ஏகாதிபத்திய எஜமானாக இருக்கப் போவதில்லை; பொருட்செல்வம் மற்றும் சமுகநிலை இவைகளை விட தனிமனித மதிப்பு உயரிய முக்கியத்துவத்தை பெறும்." (ஸ்ரீ அன்னை)

 

சேதாரம் குறித்த பயம்

 

 பணமற்ற சமூகத்திற்கு எதிரான பெரும்பான்மை பொதுவான விவாதமானது சேதாரத்தை தடுக்கும் பயனளிக்கும் சீரான விசை பணமாக உள்ளது என்பதே. பணம் இயக்கும் சமூகத்தில் இதுதான் நிலை, அங்கே அனைத்துமே அதனின் விலைச்சீட்டு மூலம் மதிப்பிடப்படுகிறது, அதில் செயல்படும் முறையாக நாம் வணிகத்தில் பொருட்களை நிர்ணயிப்பது பெரிய அளவில் அதனின் பணமதிப்பினாலேயே. உயர்ந்த விலை, பெரிய மதிப்பு, அதற்கு மேலுமானதை ஒருவர் கவனிப்பில் கொள்கிறார். குறைவான விலை, குறைவான மதிப்புடையது, கவனமின்மை மற்றும் கவனிப்பற்றதாகிறது; பணத்தை அடிப்படையாக கொண்ட சமூகத்தின் செயல்படும் அமைப்பு இதுதான். ஆனால், பணமற்ற சமூகத்தில் பணம் இயக்கும் சமூகத்தின் சட்டதிட்டங்கள் இனிமேல் செயல்படாது. பணமற்ற சமூகத்தின் நடத்தை அமைவை நீங்கள் பணமியக்கும் சமூகத்தின் விதிகளினால் கணிக்கமுடியாது. வழக்கமான பணத்தை அடிப்படையாக கொண்ட சமூகத்தில் தனிநபர் தனது நிதிஆதாரங்கள் மூலம் என்னவெல்லாம் அவர் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்கு உரிமை உள்ளது. அவர் எல்லாவற்றையும் அதனின் விலைமதிப்பை உணரும் கோணத்தில் காண்கிறார். மேலும் அவர் போதுமான பணம் வைத்திருந்தால், வாழ்க்கையை மேலும் வசதியான அல்லது சிறந்ததாக மாற்றும் ஒன்றிற்கு ஏன் செலவிடக்கூடாது? மற்றும் ஒன்று குறைந்த விலையிலோ அல்லது இலவசமாக கிடைத்தாலோ, ஏன் அதைப்பற்றி கவலைப்படவேண்டும்? இந்த மனநிலையில் சாதாரன தனிநபர் முழுவதும் பணம் உள்ள வாழ்வை சரியென கருதுவார்.

 

 

ஆனால் நாம் ஒரு பணமற்ற சமூகத்தை ஆரோவில்லில் நிறுவ முயற்சித்தால், அப்போது இந்த மனநிலை மாற்றமடையும், மாறும். மின்சாரம், நீர் அல்லது உணவு ஒரு பொதுவான பொருள் மற்றும், அது சமுகத்திற்கு விலையாக இருப்பினும் அது அனைவருக்கும் இலவசம் என ஒருமுறை தெளிவானல் அப்போது பராமரிப்பில்லா மனநிலை குறித்து கருதுவது நீங்கிவிடும். யாரோ அவருடைய மின்சாரக்கட்டணம் செலுத்துவது அவருக்கு அவர் விரும்பும்போது பயன்படுத்த உரிமையளிக்கிறது என்பது இன்றைய உண்மை. யாரும் ஒன்றும் சொல்ல முடியாது, மேலும் அதை சாதரணமாக அல்லது கவனமாக பயன்படுத்துவதை சரியென கருதுவதாக முழுவதும் உணர்கிறார். பணம் சார்ந்த சமூகம் நம்மிடம் இருப்பதால், பணம் சார்ந்த மனநிலை இன்னும் ஆரோவில்லில் இருக்கிறது. ஆனால் ஒரு முறை நம்மிடம் இது இல்லாவிட்டால், இந்த மனநிலை மாறும். பணக்காரர்களிலே பணக்காரர்களான ஆரோவில்வாசிகள் கூட இனிமேல் பொதுவான பொருட்களை கவனமின்றி பயன்படுத்தமாட்டர்கள், ஏனெனில் அவர் பயன்படுத்கூடியது அவருடைய மின்சாரம், அவருடைய நீர், அவருடைய உணவு, அவருடைய பிறவனவாக இருக்காது. அவர் கூட்டு மதிப்பை பயன்படுத்தி மகிழ்வடைய தள்ளப்படுவார். ஆரோவில்வாசிகள் அவர்களுடைய மின்சாரம் அல்லது நீர் அல்லது உணவு இலவசமாக வருவதை விரும்பாமல் போகலாம், ஏனெனில் அவர்கள் விரும்பும்படியாக அதை பயன்படுத்தும் சமநோக்கில் அது விலகியிருக்கலாம். கூட்டுமைவின் பொறுப்பு கூட்டமைவு பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாததாகும்.

 

 அவ்வாறு செய்வதனால் ஏதும் சுய நிதி இழப்பு இருக்கப்போவதில்லை என கருதி தனிநபர் ஆரோவில்வாசி பொதுப்பொருட்களை வீணடிக்க தொடங்குவார் என நாம் நினைக்க வேண்டியது இல்லை. சில மக்கள் மின்சாரம் இலவசம் என்றால் ஆரோவில்வாசி வீட்டிலிருந்து போகும்போது விளக்கை எரியவிட்டும், குளிர்சாதனம் ஓடிக்கொண்டிருக்கும் போது அவர்களுடை ஜன்னல்கள் திறந்து இருக்கும் எனக் கேட்பார்கள். அப்படிப்பட்ட கேள்வி கற்பனை அடிப்படையில் கவனமின்மை, சுயநினைவில்லாது எதின்மீதும் விருப்பம் இல்லாத ஆனால் சுயலாபத்தில் விருப்பம் கொள்ளும் சராசரி ஆரோவில்வாசியால் எழுவது. நாம் இதுதான் ஆரோவில் மற்றும் ஆரோவில்வாசிகளின் நிலையென நினைக்கக்கூடாது. மேலும், இரண்டு வருட பணமற்ற மின்சார அனுபவத்தில் பெரும்பான்மையான ஆரோவில் சேவைநிறுவனங்கள் இந்த நோக்கை உறுதிசெய்யவில்லை. வருணாவிடமிருந்து இலவச மின்சாரம் பெற்ற இரண்டு வருடத்தில் உண்மையில் எந்த ஒரு சேவை நிறுவனமும் தனது மின்நுகர்வை அதிகப்படுத்தியதாக பார்க்கமுடியவில்லை.

 

ஆரோவில்வாசிகளின் வறுமை காரணமாக, தற்போதைய ஆரோவில் சூழலில் மின்சாரத் தேவைக்கு தடை உள்ளது என்பது தெளிவாகும். ஒவ்வொரு கோடைக்காலத்திலும் பல ஆரோவில்வாசிகள் வெப்பத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள், ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் தொடங்கியதும் அவர்களுக்கு வேர்க்குரு வருகின்றது, எதிர்மறையான தட்வெப்பநிலையை எதிர்த்துப் போராடுவது அவர்களின் முக்கிய வேலைகளில் ஒன்றாக இருக்கிறது. பணக்கார ஆரோவில்வாசிகளால் குளிர்சாதனத்தை வாங்க முடிகிறது, ஆனால் மற்றவர்களால் இன்னமும் அதை வாங்க முடியவில்லை. இந்த ஆரோவில்வாசிகள் குளிர்சாதனத்தை அமைப்பதற்கு, அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மகிழ்ச்சியுடன் உதவவும் அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை மகிழ்ச்சியுடன் வழங்கவும் வருணா விரும்புகிறது.

 

100% வருணா மின்சாரம் காற்றுச் சக்தியின் மூலமாக பசுமை மின்சாரமாக உற்பத்திச் செய்யப்படுவதால், ஆரோவில் முழுவதும் நுகருகின்ற மின்சாரத்தில் இரண்டு மடங்குக்கு மேற்பட்ட மின்சாரத்தை வருணா ஏற்கனவே உற்பத்திசெய்து வருகின்றது. ஆகவே, நுகரப்படும் ஒவ்வொரு கிலோவாட் மணியின் மின்சாரமும் சுற்றுச்சூழலுக்கு ஒரு சுமையாக இருக்கும் என்று எவரும் வாதிட முடியாது. உண்மையில், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றுக்கும், நீங்கள் நுகரும் அல்லது வாங்கும் ஒவ்வொன்றுக்கும் கரிம அடித்தடம் உண்டு. நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயுடன், ஒரு குறிப்பிட்ட அளவு கரியமில வாயு உமிழ்தலுக்கான பொறுப்பு உங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் தவிர்க்க இயலாது. இந்த தவிர்க்கமுடியாத பொறியைத் தடுப்பதற்கான ஒரேவழி, கரிமத்தை உமிழாத முறையில் பொருட்களை உற்பத்தி செய்வதாகும், அதை ஆரோவில் மின்சாரத்தில் வருணா செய்கிறது.

 

ஆரோவில்லில் மின்உற்பத்தியையும் நுகர்வையும் பசுமையான, பயனுள்ள வழியில் வருணா அமைத்தால், வாழ்க்கை வாழ்வதற்கான மிக அடிப்படை நிலைமைகளை நாம் அளிப்பதை உருவாக்க முடியுமானல், பிறகு நாம் ஒரு கெட்ட உணர்வைக் கொண்டிருக்க மாட்டோம், நாம் செழிப்பாக இருக்கமுடியும், நாம் ஆரோவில்லில் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் கவனம் செலுத்த முடியும்.

 

ஆரோவில்லில் குளிர்சாதனங்கள் வருவதை எந்தவழியில் ஒருவர் தடுப்பதற்கு விரும்பக்கூடும்? நீண்டகாலம் முடிந்த வரையில் ஆரோவில் மக்கள் மத்தியில் ஒப்புமையில் வறுமை நிலையில் பராமரிப்பது எப்படி? சராசரி ஆரோவில்வாசியிடம் பணம் கிடைத்ததும், அவரே ஒரு குளிர்சாதனத்தை வாங்குவார். பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள ஆரோவில்லில் அவர் அதைச் செய்ததும், அது அவருடையபணமாகும், அதை அவ்வாறு செய்வதற்கு அவருக்கு எல்லாவகையிலும் அது நியாயமாகவே இருக்கும். எளிமை, பராமரிப்பு நடவடிக்கை, நமது சுற்றுச்சூழலுக்காக மிகவும் வளர்ச்சியுற்ற உணர்வு, மற்றவை போன்ற உயர்ந்த கொள்கைகளுக்கு ஆதரவாக ஆரோவில்லில் வறுமையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது மோசமானது ஆகும். இவ்விஷயங்கள் உள்ளிருந்து வரவேண்டும், வறுமையில் இருந்தோ அல்லது அதிகாரத்துவமான விதிகளைப் செயல்படுத்தவோ கூடாது.

 

நாம் பணமில்லாத சமூகத்தை உண்டாக்க முயற்சி செய்தால் அது தனிநபர் விரயத்தை வியத்தகு அளவில் கொண்டுபோகும் என்று பல பேர் தங்களின் விரலை உயர்த்தி எச்சரிக்கின்றனர், அதேவேளையில் பெரிய அளவில் ஆகின்ற பெரும் விரயம் பற்றி பல ஆரோவில்வாசிகள் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள தனது காற்று மின்னியக்கிகள் மூலமாக இப்போது ஒரு கிலோவாட் மணி காற்று மின்சாரத்தை சுமார் ரூ.2-க்கு வருணா உற்பத்தி செய்கிறது. வருணா தனது மின்சாரத்தை ஆரோவில்லிற்கு நகர்த்த முடிந்தால், பிறகு அது உற்பத்திசெய்யும் கிலோவாட் மணி மின்சாரத்திற்கு ஆரோவில் நுகரும் கிலோவாட் மணி மின்சாரத்தை அது சமன்செய்ய முடியும். ஆனால், உயர் அழுத்த நுகர்வோர் இணைப்புகளுக்கு மட்டுமே அதை நகர்த்த முடியும். அதனால், ஆரோவில்லில் மாத்ரிமந்திர் தவிர, மற்ற இடங்களில் உயர் அழுத்த நுகர்வோர் கிடையாது, வருணா தனது ஒரு கிலோவாட் மணி மின்சாரத்தை ரூ.2.5 முதல் ரூ.3.5-க்கு விற்கும் கட்டாயம் உள்ளது, ஆரோவில் நுகர்வோர்களின் மின்சார பில்களைச் செலுத்தி வருகிறது. ஆரோவில்லில் உள்ள பெரும்பாலான சேவை இணைப்புகளுக்கும் வணிக இணைப்புகளுக்கும் ஒரு கிலோவாட் மணி மின்சாரத்திற்கான கட்டணம் ரூ.7. ஆகவே, வருணா ஆரோவில் தனது ஒரு கிலோவாட் மணி மின்சாரத்தை சராசரியாக ரூ.3-க்கு விற்கிறது, அது ஆரோவில்லில் நுகரப்படும் ஒரு கிலோவாட் மணி மின்சாரத்திற்கு இரண்டு மடங்கு செலுத்துகின்றது. இது சேதாரமாகும், இதனால் ஆரோவில்லிற்கு ஆண்டுக்கு பற்பல இலட்சம் செலவாகிறது, அதைப்பற்றி எவரும் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை.

 

ஆரோவில்லில் ஒரு தனிப்பயன் மின்னூட்டி இல்லை என்பதால், உண்மையில் மிகப்பெரிய சேதாரம் ஆகிறது. ஆரோவில்லிற்கு ஒரு தனிப்பயன் மின்னூட்டி இருந்தால், நாம் ஆரோவில்லிற்கு தடையில்லா மின்சாரத்தைப் பெறவியலும், ஏனென்றால், ஆரோவில் தனக்குத் தேவையான மின்சாரத்தை காற்று மின்னியக்கிகள் மூலமாக அது உற்பத்தி செய்கிறது. தடையில்லா மின்சாரத்தால் நாம் நமது யுபிஎஸ்-அடிப்படையிலான மின்சாரத்தை பெரிதும் குறைக்க முடியும். மிகச் சிறந்த யுபிஎஸ் அமைப்புகள் கூட 50% செயல்திறனை மட்டுமே கொண்டுள்ளன, தனிப்பட்ட யுபிஎஸ் அமைப்புகளினால் ஆரோவில்லில் ஆண்டுதோறும் பல இலட்சம் கிலோவாட் மணி மின்சாரம் வீணாகின்றன.

 

ஆரோவில்லில் செயல்திறன் மிக்க, மின்சார சேதாரமில்லாத அமைப்பை நிறுவ முயற்சி செய்யும்பொழுது, பெரிய அளவில் மின்சாரம் சேதாரம் ஆவதைத் தடுப்பது வருணாவின் முதல் அக்கறையாக இருக்கும். தனிநபர் மட்டத்தில் நுகர்வு முறையை மேம்படுத்தும் முயற்சியும் முக்கியமாகும். ஆனால், உற்பத்தி மற்றும் விநியோகப் பக்கத்தில் பெரிய அளவில் சேமிக்க முடிவது போல சேமிக்க முடியாது.

 
 

கண்டிப்பாக வருணா ஒரு கண்காணிப்பு முறைமையை அமைக்கும். ஆரோவில்வாசி ஒவ்வொருவரும் அவருடைய மின்சார நுகர்வில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் வரைபடத்தையும், இரண்டு மாதங்களின் மின்நுகர்வு அறிக்கையையும் பெறுவார். மிகுதியாக நுகரப்பட்டதை அல்லது மோசடி, மற்றவற்றை காட்டுகின்ற ஒரு கணிப்பொறி நிரல் இருக்கும். ஆனால், பணநெருக்கடியை உண்டாக்கும் அதிகாரத்துவமான விதிமுறைகளும் ஒழுங்குமுறைகளும் உடைய ஒன்றை அமைக்க நாம் விரும்பவில்லை. ஆரோவில்லில் பழைய மின்விசிறிகள், பழைய பம்புகள், பல்புகள், குறைந்த அளவு மின்சாரத்தை நுகரும் மின்சாதனங்களை மாற்றவும் (இலவச கட்டணத்தில்) வருணா எண்ணியுள்ளது. ஆரோவில்லில் மின்சார நுகர்வை மேம்படுத்தும் எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

 

பணமில்லா அணுகுமுறை எப்போதும் உற்பத்தித்திறனைக் குறைத்து விரயத்தை உண்டாக்கும் என்கின்ற வாதம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே சரியாகும். இந்திய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்துள்ள உதாரணத்தைப் பார்ப்பது நல்லது. இங்கே பணம் சார்ந்த சமூகத்தில் பணமில்லா அணுகுமுறையை அமைக்க ஒரு முயற்சி செய்யப்படுகிறது. இது வேலை செய்யாது. பணமில்லா ஆரோவில்லில் இருப்பதைப் போல, அடிப்படை சிந்தனையும் நடத்தை முறையும் பணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் வரை, நீங்கள் உள்ளுணர்வு அல்லது சூட்சம நடத்தைமுறை வருவதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆரோவில்லில் பணமில்லா பொருளாதாரம் என்கின்ற அடிப்படை யோசனை என்னவெனில் வேலை செய்வதற்கு ஊக்கமளிப்பு, பராமரித்தல், ஒரு முயற்சி செய்தல், பணத்திற்கான ஆசையில் இருந்து அது உருவாகாது. பண அடிப்படையான உள்ளுணர்வில் ஒரு பணமில்லா பொருளாதாரத்தை அமைக்க நாம் விரும்பினால், நாம் தோல்வியுறுவோம். உள்ளுணர்வுடன் சேர்த்து பொருளாதாரத்தை மாற்றுவதை நாம் சமாளிக்கவேண்டும், இல்லையெனில் ஆரோவில் மற்ற எந்தவொரு சமூகத்தைப் போலவே இருக்கும்.

 

மானியங்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது என்பது இன்றைக்கு பெரும்பாலும் பொருளாதார அறிவியலாளர்களின் வாதமாகும், அதைச் சற்று பொதுமைப்படுத்தி ஆரோவில் பொருளாதாரத்திற்கும் பயன்படுத்த முடியும். அதற்கு எதிர்மறையாக பற்பல உதாரணங்களும் இருக்கின்றன. மின்சார உலகில் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலி வருகிறது. இவ்விடத்தின் வளர்ச்சிக்கான முதல் காரணம் என்னவெனில், இங்கு மின்சாரக் கட்டணம் குறைவாக இருந்தது. சான் பிரான்சிஸ்கோ அருகே பெரிய நீர்வீழ்ச்சிகளால் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, ஆகவே, மின்சாரக் கட்டணம் அநேகமாக ஒன்றுமில்லை, போதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிய முடியவில்லை. மின்சாரம் மிகவும் மலிவாக இருந்ததால், சான்பிரான்சிஸ்கோ நகராட்சி இரவில் பெரிய அலுவலக கோபுரங்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியது, அவற்றின் விளக்குகளை எரியவிடும்படி கேட்டுக்கொண்டது, ஆகவே, வானுயரத்தில் வெளிச்சம் இருக்கும். மின்சாரக் கட்டணம் மிகக் குறைவாக இருந்த இச்சூழலில், உலகின் 90% சிலிகேட்-படிகமாக்கும் தொழில் இப்பகுதியில் அமைந்தது, அது இன்றைக்கு சிலிகான் வேலி என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, சூரிய மின்கலத்திற்கான மூன்றில் இரண்டு மடங்குக்கு மேற்பட்ட சிலிகேட் செதில்கள் அங்கே தயாரிக்கப்பட்டன. கணினி சில்லு தயாரிப்பாளர்களுக்கு சிலிகேட் தேவையாக இருந்தது, அவற்றுடன் கணினி தொழில், மென்பொருள் தொழில் வளர்ச்சியுற்றது. 30 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரக் கட்டணங்களின் தொடக்க சேமிப்புகளைவிட இன்றைக்கு கணினி மற்றும் மென்பொருள் தொழில் மூலமாக கிடைக்கும் வருமானம் ஒரு மில்லியன் தடவை அதிகமாகும். குறைந்த மின்சாரக் கட்டணம் உற்பத்தியை ஒடுக்காமல் அதை மிக நன்றாக ஊக்குவிக்கும் என்பதையே இது காட்டுகிறது.

 

 

இயந்திரத்தனமாக சமத்துவத்தை நிறுவ முயற்சி செய்தலின் தவறு

 

அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான நிபந்தனைகளை அமைக்கின்ற ஒரு மனப்பான்மை எந்தவொரு சமூகத்திலும் உள்ளது. கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் ஆகிய அரசியல் முறைமைகளுக்கு இடையேயுள்ள அடிப்படை வேறுபாடு என்னவெனில் சமத்துவம் மற்றும் வேற்றுமை ஆகிய இரண்டு கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். சீன கம்யூனிசத்தில் ஆடைகளைக் கூட நாடு முழுவதும் ஒரேமாதிரியாக அணியவேண்டும் எனப்படுகிறது, இச்சமத்துவக் கொள்கையை அவர்கள் மிகக் கடுமையாக சுமத்த முயற்சி செய்கிறார்கள்.

 

எந்த ஒரு சமூகத்திலும் சமத்துவக் கொள்கையை இயந்திரத்தனமாக சுமத்துவதற்கு எதிராக ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகிய இருவரும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

 

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோரின் சில சுவராஸ்யமான மேற்கோள்கள் இங்கே வருமாறு:

 

ஸ்ரீ அரவிந்தர்: சகோதரத்துவத்தில் சமத்துவத்தை அமைப்பதற்குப் பதிலாக, சமத்துவத்தில் சகோதரத்துவத்தை உருவாக்கும் முயற்சியை சமதர்மவாதி தவறாகச் செய்கிறார். சமத்துவம் இன்றி சகோதரத்துவத்தைப் பெறுவது சாத்தியமாகும்; ஆனால், சகோதரத்துவம் இன்றி சமத்துவம் நீடித்திருக்க முடியாது, அது பிளவு, சண்டைகள், மட்டற்ற அதிகாரப் பேராசை ஆகியவற்றால் அழிக்கப்பட்டுவிடும். முதலில் நமக்கு முழுமையான சகோதரத்துவம் இருக்கவேண்டும், அதன்பிறகே முழுமையான சமத்துவம் இருக்கும்.

 

ஸ்ரீ அரவிந்தர்: கம்யூனிசம் பூமியில் வெற்றிகரமாக தன்னை மீண்டும் நிலைநாட்ட, அது சகோதரத்துவத்தின் ஆன்மாவின் அடித்தளம் மற்றும் தன்முனைப்பின் இறப்புமீது இருக்கவேண்டும். ஒரு கட்டாய தொடர்பும் ஒரு இயந்திரத்தனமான தோழமையும் உலக அளவிலான படுதோல்வியுடன் முடிவடையும்.

 

ஸ்ரீ அரவிந்தர்: சுதந்திரம் தோல்வியுற்றதால்,“ “இரண்டும் ஜோடி சேர்வது சற்று கடினம் என்பதால், நாம் சுதந்திரத்துடன் சமத்துவத்தை அல்லது, சுதந்திரத்திற்குப் பதிலாக சமத்துவத்தை முயற்சி செய்வோமாக. சகோதரத்துவத்திற்கு, அது சாத்தியமற்றது ஆகவே நாம் அதை தொழில் தொடர்புடன் மாற்றுவோம். “ஆனால், இந்த நேரத்தில்கூட கடவுளை ஏமாற்ற முடியாது என்று நான் நினைக்கிறேன்.“

 

ஸ்ரீ அன்னை: பரம்பொருளின் சுதந்திரத்தை மனிதர் அனைவரும் அறியும்பொழுது மட்டுமே சுதந்திரம் வெளிப்படும். மனிதர் அனைவரும் பரம்பொருளின் உள்ளுணர்வை பெற்ற பிறகே சமத்துவம் வெளிப்படும். பரம்பொருளுக்கு அவர்கள் சமமாகப் பிறக்கிறார்கள் இறைவனின் ஒருமையில் ஒன்றாக இருக்கிறார்கள் என்று மனிதர்கள் உணரும்பொழுது மட்டுமே சகோதரத்துவம் வெளிப்படும்.

 

ஒரு சமுதாயத்தில் சமத்துவத்தை மிகுந்த மதிப்புமிக்க அம்சமாக உயர்த்தும் கம்யூனிச நிலைப்பாடு கண்டிப்பாக தவறானது மட்டுமின்றி, வக்கிரமானதும் ஆகும், கம்யூனிச சமூகங்கள் தோல்வியுறுவதற்கு அது இறுதி காரணமாகவும் உள்ளது. இது குலாக்கொள்கை ஆகும். சோவியத் யூனியனில் ஒவ்வொரு கிராமத்திலும் மற்றவர்களைவிட அதிக வேலையாகவும் அதிக புத்திசாலித்தனமாகவும் உள்ள ஒருநபர் குலாக்எனப்பட்டார். அவரிடம் ஒன்று அல்லது இரண்டு பன்றிகள் அதிகம் இருந்தன, அவர் சற்று முன்னதாக எழுந்திருந்து, சற்று கடினமாக வேலை செய்தார், அவரது வீட்டைச் சுற்றி அவருக்கு சற்று பெரிதான காய்கறித் தோட்டம் இருந்தது. அதன் விளைவால் மற்றவர்களைவிட அவர் பொருளாதார ரீதியாக சிறந்து இருந்தார். இந்நபர், குலாக், இரஷ்யாவில் சைபீரியாவிற்கு, “ஆர்ச்சிபெலகோ குலாக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் அல்லது அவர் வெறுமனே தூக்கில் இடப்பட்டார். சீன கலாச்சார புரட்சிக் காலத்தில் அந்நபர்கள் எதிர் புரட்சிக்காரர்கள்என அறிவிக்கப்பட்டனர், மொத்தத்தில் அவர்களில் 30 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். கம்போடியாவில் மக்களிடையே சமத்துவக் கொள்கையை வலுக்கட்டாயமாக நிறுவும் பொருட்டு மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு பேர் கொல்லப்பட்டனர்.

 

ஆரோவில்லில் பணமில்லா சமூகத்தை நிறுவ முயற்சி செய்யும்பொழுது, ஒரு சமூகத்தில் சமத்துவம், வேறுபாடு ஆகிய இரண்டு மோதல் கொள்கைகளின் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். இன்றைய ஆரோவில்லில் ஏற்கனவே இந்த மோதல் இயல்பாகவே உள்ளது. ஏறத்தாழ எல்லா ஆரோவில்வாசிகளும் ஒரேமாதிரியான பராமரிப்புத்தொகையைப் பெறுகின்றார்கள். இந்த விதிமுறை சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருப்பினும், ஆரோவில்லில் உள்ள உண்மைநிலை, இக்கொள்கையை பெரிய அளவில் புறக்கணிக்கிறது, ஆரோவில்வாசிகளின் நிதி பலம் எங்கும் உள்ளது போலவே வேறுபாடுடன் உள்ளதைக் காட்டுகிறது. பணமில்லா பொருளாதாரம் ஒரு வழியில் இரண்டு கொள்கைகளையும் ஒருங்கிணைக்கிறது. எங்கு பணமில்லையோ, அங்கு தனிநபர் பண அதிகாரத்தில் வேற்றுமை இல்லை. பணமில்லா பொருளாதாரத்தில் நிறைய கொள்கைகளை இயந்திரத்தனமாக அதிகம் சுமத்துவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

 

பணமில்லா பொருளாதாரத்தின்மீது ஒரு சமத்துவக் கொள்கையை முயற்சிசெய்வதும் சுமத்துவதும் ஆபத்து மட்டுமன்றி, அதன் முன்னேற்ற வேகத்திற்கும் ஆபத்தானது. பணமில்லா பொருளாதாரம் படிப்படியாக வரும். சிலர் அதனால் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் பயன்பெறுவர். சிலர் சற்று முன்னதாகவும், சிலர் பிற்பாடும் பயன்பெறுவர். அனைவரும் பயன்களை சமமாக அனுபவிக்கும் வரை, அணுகூலங்களில் இருந்து எவரும் நன்மை பெற அனுமதிக்கக் கூடாது என்ற ஒரு விதிமுறையை அமலாக்கம் செய்வது, இத்திட்டத்தின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும், சகோதரத்துவத்தின் இலட்சியங்களுடன் பொருந்தாது. நமது சகோதரர்களில் சிலர் பணமில்லா பொருளாதாரத்தின் சில பகுதியை அனுபவிக்கிறார்கள் என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும். அவர்களிடம் பொறாமை கொள்ளுதல், ஒவ்வொருவரும் அதே பயனைப் பெறும் முன்பு, அவர்கள் பயன்பெறுவதைத் தடுக்க விரும்புதல், மலிவானதும் ஆரோவில்லின் உணர்விற்கு எதிரானதும் ஆகும்.

 

ஆரோவில்லின் நோக்கமும் பணமில்லா அணுகுமுறையின் பங்கும்

 

ஆரோவில் மனிதஇனத்தின் பரிணாம வளர்ச்சிப் படிக்கு பொருத்தமான ஒரு கூட்டுவாழ்க்கை வடிவத்தை உருவாக்க வேண்டும். பிறகு, ஒருவர் ஆரோவில்லின் நுண் சமூகத்தின் புதிய அடிப்படைக் கொள்கைகளை எதிர்பார்க்க முடியும், அவை வேறு இடங்களில் உள்ளவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஆனால், ஆரோவில் சமூகத்தை ஒருவர் நோக்கும்பொழுது அது இன்னமும் பண முறைமையைப் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதைக் காண்கிறார். உண்மையில் வெளியுலகில் இருப்பது போலவே ஆரோவில்லிலும் தனிநபர் வாழ்க்கையின்மீது பணத்தின் செல்வாக்கு உள்ளது. தனிநபர் நிதி நிலைமை மக்களின் வாழ்க்கைத்தரம், அவர்களின் வேலை, அவர்கள் குழந்தைகளின் கல்வி, அவர்களின் விடுமுறை வகை போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நுண் சமூகத்தில் அதன் பல குடிமக்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான நிதி நிலைமையை அடையும் சாத்தியக்கூறு கூட அளிக்கப்படவில்லை. தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, அடிக்கடி ஆரோவில்லை விட்டு சிறிதுகாலம் வெளியே சென்று பணத்தைச் சம்பாதிக்கும் கட்டாயத்தில் ஆரோவில்வாசிகள் உள்ளனர். ஆகவே, ஆரோவில்லில் தற்போது நமக்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன:

       ) பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தையே இன்னமும் நாம் கொண்டிருக்கின்றோம்.

       ) பணக் கொள்கை கூட ஆரோவில்லில் வேலை செய்யவில்லை.

ஆரோவில்லின் நுண் சமூகம், மற்ற எந்தவொரு சமூகத்தைப் போலவே அதே தூண்களில் நிற்கின்றது, அதையும் கூட அது நிறைவேற்றவில்லை, அது சுயமாக செயல்படமுடியாது என்பதே அதன் பொருள்.

ஆரோவில் தானே பிரகடனம் செய்த எதிர்கால சமூகத்தின் இலக்கை நோக்கி அது முன்னேற நாம் விரும்பினால், ஆரோவில்லில் பணக் கொள்கைப் பதிலாக ஏதேனும் உயரிய ஒன்றை நாம் கொண்டுவர வேண்டும். சமூகம் இயங்குவதற்கு அடிப்படை இயக்கமுறை பணமாக இருக்க முடியாது.

இன்றைய நவீன சமூகங்களில் பணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது, அதில் செயல்படக்கூடிய முக்கிய இயக்கமைப்புகள் அடிப்படையாக உள்ளன. பணத்தால் இயங்கும் சமூகம், வரலாற்றுரீதியாக, இரண்டாவது தலைமுறை சமூகங்களாகப் பார்க்கப்படுகின்றன. முதல் தலைமுறைக்கு முக்கிய உந்துதலான, கட்டுப்படுத்துகிற கொள்கையாக அதிகாரம் இருந்தது. உடல் வலுவான தனிநபர் அல்லது குழு ஒரு இனத்தை அல்லது நுண் சமூகத்தை ஆட்சி செய்தனர். அதிகார முறைமையால் மேலிருந்து கீழாக சமூகம் அமைக்கப்பட்டது. அப்பொழுது அதிகாரமே சமூகத்தின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது, காலப்போக்கில் கடந்த சில ஆயிரமாயிரம் ஆண்டுகளில், மெதுவாக பணம் அவ்விடத்தைப் பிடித்தது. இன்றைக்கு உடலமைப்பில் வலுவான ஒருவரோ அல்லது அதிகார நிலையில் பிறந்தவரோ ஒரு சமூகத்தை ஆளவில்லை, ஆனால் அதிக அளவு பணத்தை வைத்திருக்கும் மற்றும் அதை உருவாக்கும் திறனுள்ள ஒரு மக்கள் குழுவே ஆளுகிறது.

கடந்த பத்தாண்டுகள் காலத்தில்தான் நவீன சமூகத்தில் அதிகாரக் கொள்கையில் இருந்து பணக் கொள்கைக்கு உலகளாவிய இறுதி மாற்றம் ஏற்பட்டது. கம்யூனிச சமூகம் இன்னமும் அதிகாரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது, பணத்தை அல்ல. சோவியத் யூனியனில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்ற பிறகு, கிழக்கு தொகுதி, சீனா ஆகியவற்றில் அதிகார அடிப்படையிலான சமூகங்கள் மிகவும் அரிதாகின. வட கொரியாவும் கியூபாவும் பழைய அதிகார முறைமையின் கடைசி இரண்டு பிரதிநிதிகள் ஆகும். மேலும் அவ்விரண்டு முறைமைகளும்கூட விரைவில் அதிக நவீன ஒன்றினால், உண்மையில் பணக் கொள்கையை விடச் சிறந்த ஒன்றினால் மாற்றி வைக்கப்படும்.

ஒரு சமூகத்தை ஆளுவதற்காக இவ்விரண்டு முறைமைகளுக்கும் இடையிலான சண்டையை வரலாறு முழுவதும் பார்க்க முடியும். பண்டைய கிரேக்கத்தைப் பார்ப்பது மிகவும் சுவராஸ்யமானது, அது மக்களாட்சியின் பிறப்பிடம் என்பது மட்டுல்லாது, அதிகாரம் அல்லாமல் பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முதல் சமூகத்தின் பிறப்பிடமும் ஆகும்.

பண்டைய ஏதென்ஸ் பணம் அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்கியது. உண்மையில் மக்களாட்சி என்பது ஏதென்ஸில் பணக் கொள்கையில் ஆளும் சமூகத்தின் ஒரு பக்கவிளைவே ஆகும். பணம் ஒரு சமூகத்தை ஆட்சிசெய்ய வேண்டுமானால், ஒரு ஆட்சியாருக்கு பிறந்தவரே அடுத்த அரசவையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற சட்டத்தின் பழைய கொள்கை ஒழிக்கப்பட வேண்டும். பண்டைய ஏதென்ஸில் அது முதன்முதலில் ஒழிக்கப்பட்டது. செல்வந்தர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது, தங்களின் பண அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களின் சமூகத்தின் தலைவிதியை ஆளும் ஒரு வழியை அவர்கள் கண்டறிய வேண்டியிருந்தது. அதற்கு மக்களாட்சியே சிறந்த, ஒரேயொரு முறைமையாக இருந்தது. அரசியல் அதிகாரம் மக்கள் கூட்டத்தின் வாக்குகளில் இருந்தது, பணத்தால் மிகச் சுலபமாக மக்கள் கூட்டத்தின் கருத்தில் செல்வாக்கைச் செலுத்த முடிந்தது.

பண்டைய கிரேக்கத்தில் போட்டியிடும் பெரிய அரசியல் சக்தியாக ஸ்பார்டா இருந்தது. இன்னமும் ஸ்பார்டா சக்தி கொள்கையை தங்களின் சமூகத்தின் முதுகெலும்பாக பெற்றிருந்தது, அதில் உறுதியாக இருக்க விரும்பியது. ஆனால், ஏதென்ஸின் அதிநவீன முறைமை, மிக நன்றாக செயல்பட்டு வந்தது, ஸ்பார்டா அரசியல் முறைமைக்கு அச்சுறுத்தலாக இருந்தது. ஸ்பார்டா சமூகத்திற்குள் பண அதிகாரத்தை எதிர்கொள்வதற்காக, ஸ்பார்ட்டான்ஸ் ஒரு விசித்திரமான முறையை அறிமுகப்படுத்தினர். தங்கம், வெள்ளி நாணய முறைமையில் இருந்து இரும்பு கட்டைகளுக்கு அவர்களுடைய பணத்தை மாற்றினர். கனமான இரும்பு கட்டைகள் ஸ்பார்டாவின் பணமாக இருந்தது. பணத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் இருப்பதை இந்த வழியில் அவர்கள் உறுதிப்படுத்தினர், தனிநபரின் வாழ்க்கை பணத்தால் செல்வாக்கு பெறுவதை கடுமையாக குறைக்கப்பட்டது.

மூன்றாவது தலைமுறை சமூகத்தை வளர்ச்சியடைச் செய்வதற்கும் பணத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களாட்சிக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒன்றை கொண்டுவருவதற்கும் ஆரோவில்லிற்கு வாய்ப்புள்ளது. அது இந்த வேறு ஏதாவதொன்றைசார்ந்துள்ளது, அப்புதிய சமூகம் பணத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தைவிட சிறந்த ஒன்றாக இருக்கும், புதிய முறைமை பரவலாம், அல்லது உலகத்தின் நுண் மற்றும் பெரும் சமூகங்களின் போட்டி வாழ்க்கைக்கு இடையில் புதிய சமூக அமைப்பு பொருந்தாமல் போகலாம்.

இப்போதைய முக்கிய கேள்வி: பணம் ஒழுங்குமுறை மற்றும் ஒழுங்கமைப்பு அதிகாரத்திற்குப் பதிலாக அமைகின்ற அந்த வேறு ஏதோவொன்றுஎன்ன? ஸ்ரீ அன்னை அவர்கள் அதற்கான பதிலை மிகத் தெளிவான வார்த்தைகளில் கொடுத்திருக்கிறார்: ஆரோவில்லில் உள்ள அனைத்து விதிமுறைகளுக்குப் பதிலாக அவற்றை இறுதியில் ஓர் உயர் உள்ளுணர்வினால் நிரப்பப்பட வேண்டும். அது உயர் உள்ளுணர்வுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது, அது அந்த மாற்றத்தைக் கொண்டுவரும். உயர் உள்ளுணர்வு அதை எடுத்துக்கொண்டதும், பண ஒழுங்குமுறையும் ஒழுங்கமைப்பு அதிகாரமும் இனி தேவைப்படாது.

உயர் உள்ளுணர்வுடன் இந்த நேரடித்தொடர்பு இன்னமும் ஏற்படவில்லை என்று ஒருவர் வாதிடலாம், ஆகவே ஒரு முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமாக நாம் ஆரோவில்லில் பணத்தை அகற்ற முயற்சி செய்தால், பிறகு சேதாரமும் குழப்பங்களும் முடிவாக இருக்கும். ஆனால், தன்னை ஒரு புதிய வடிவத்தின் கூட்டுவாழ்க்கையை உருவாக்கும் நோக்கத்திற்காக அற்பணித்துள்ள ஒரு சமூகத்திற்கு அது ஒரு நல்ல வாதம் அல்ல. உயிரற்ற ஐயுறவுக்கொள்கை, முன்னெச்சரிக்கை மற்றும் இழப்பு பயத்துடன் எப்போதும் ஒட்டியிருப்பதைவிட, பின்னடைவுகளையும் தோல்விகளையும் எதிர்கொள்ளத் தயாராகும் ஒரு தைரியமான அணுகுமுறை மிகச் சிறந்ததாகும்.

 

மைக்கேல் பாங்கே