நீங்கள் இருப்பது:முகப்பு\கண்ணாடியில் தங்கம்

கண்ணாடியில் தங்கம்

 

மாத்ரிமந்திருக்கான தங்க ஓட்டுசில்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு முடித்தவுடன், எல்லா வட்டத்தகடுகளும் பொருத்தப்பட்ட பின்னர், கிட்டத்தட்ட 2.5 மில்லியன் தங்கத்தகடுகளை தயாரித்தளித்த மாத்ரிமந்திரின் புறத்தே அமைந்துள்ள தொழிற்சாலையானது தனது வேலைகளை நிறுத்திக்கொண்டு அமைதியானது. அந்த இடமானது, காற்றில்லா வெற்றிட மூடுஉலை அடுப்புகள், ஒலியலை அதிர்வில்லா தூய்மை செய்யும் கருவிகள், காற்றொழிக்கப்பட்ட மின்னணு சிலிக்கான் கலவை இயந்திரம் மற்றும் பலவிதமான கருவிகளின் பாகங்கள் இவற்றால் நிரம்பியுள்ளது. ஆனால் வேலை ஏதும் நடைபெறவில்லை.

 

மாத்ரிமந்திருக்கான சில முக்கிய வேலைகள் இன்னும் செய்து முடிக்கப்பட வேண்டியுள்ளது. வாயில்களுக்கான பெரிய பாதுகாப்புத்தட்டிகள், கதவுகள், நான்கு கதவுகளுக்கு மேலே காணும் பூத்தகடுகள், அத்தகடுகளுக்கு நடுவே அமைக்க வேண்டிய நான்குவித வண்ணங்கள் கொண்ட சின்னங்கள் போன்றவையே அவை. இவற்றுக்கான தங்க ஓட்டுசில்கள் ஒரே மாதிரியானவை அல்ல. விக்டரின் எஃகு வேலை இலாகாவினால் நமக்கு கொடுக்கப்பட்டபடி ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக அளவெடுத்து வேலை செய்ய வேண்டியவையாகும். அதே சமயம், மாத்ரிமந்திரின் கட்டிடகலைஞரான ரோழே விரும்பியபடி, இந்த தொழிற்கூடங்கள் சிறிது சிறிதாக கலைக்கப்பட்டு, மாத்ரிமந்திரின் தோட்டங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இந்த தங்கஓட்டுசில்கள் தயாரிப்பதற்கான பலகடினமான படிமுறைகள் கொண்ட தொழில் நுணுக்கம் ஜெர்மனியில் மூன்றாண்டு கால அளவில் கண்டுபிடிக்கப்பட்டு இறுதியாக உரிமம் செய்யப்பட்டது. மிகச் சரியான துல்லியமான வழிமுறைகளும், விரிவான பயிற்சியும் இல்லாமல் இவற்றைத் தயாரிக்க முடியாது. இப்போது நம்முன் உள்ள பிரச்சனை, இத்தொழில் நுணுக்கம் மறைந்து போய்விடுமானால், பின்னால் ஏதேனும் ஒரு சமயம் இந்தத் தங்க ஓட்டுசில்கள் தேவைப்படுமானால் அதுசமயம் என்ன செய்வது? வேறெங்கும் இது போன்ற தங்கஓட்டுசில்கள் கிடைக்கக் கூடியவையல்ல. அது மட்டுமல்லாது, இவ்வரிய தொழில்அறிவும், தயாரிக்கும் அனுபவமும் தரப் போகும் பலனை ஆரோவில்லுக்குப் பயன்படாமல் போகச் செய்வதில் யாருக்கு என்ன லாபம்? ஆகவே, சிந்தித்துப் பார்த்து எடுத்த முடிவு என்னவென்றால், நாங்கள் இந்த சாதனங்களையும், அனுபவமிக்க தொழிலாளர்களையும் கொண்டு புதிதாகத் தோன்றிய இந்த தனித்துவம் வாய்ந்த கலையை ஒரு வணிக அமைப்பாக உருவாக்கினாலென்ன என்பதே. நாங்கள் மாத்ரிமந்திரில் தங்கஓட்டுசில்கள் தொழிற்சாலையை ஆரம்பித்த போது, நாங்கள் இது போன்றதொரு சூழ்நிலை உருவாகும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த்தனால் எல்லா மிக உயர்ந்த நுணுக்கம் பொருந்திய தொழிற்கருவிகளை மாத்ரிமந்திருக்கு நன்கொடையாக அளித்து விடவில்லை. மாறாக அவற்றை உபயோகித்துக் கொள்வதற்கு கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல், திருப்பிக் கொடுத்து விடும் முறையில் அளித்திருந்தோம். இந்த முறையில் யாருக்கு எது சொந்தம் என்று தெரிந்து கொண்டு எளிதாக அவரவர்க்கு சொந்தமானதை பிரித்து எடுத்துக் கொண்டு போக முடிந்தது. ஆரோவில்லில் தொழிற்சாலைப் பகுதியில் நாங்கள் புதிதாக உற்பத்தியைத் தொடங்க எடுத்த முதல் முயற்சியானது, ஆரோவில்லின் உட்பூசல் காரணமாக தடைபட்டுப் போனது. ஆகவே புதுச்சேரியின் தொழிற்கூட வளாகத்தில் ஒரு தொழிற்சாலை இடத்தை விலைக்கு வாங்கி, அங்கு உற்பத்தியைத் தொடங்கினோம். ஆரம்ப நாடகளில் நாங்கள் மாத்ரிமந்திரை முடிப்பதற்கு மேலும் தேவைப்பட்ட சில்களை உற்பத்தி செய்து, இனாமாக ஆரோவில்லுக்கு அளித்தோம். ஆனால் அதேசமயம் மெதுவாக, உலக அளவிலும் வந்த வியாபாரத்தை எடுக்கத் தொடங்கினோம். முதன்முதலில் இபிஸா நகரில் அமைக்கவிருந்த ஒரு தோட்டம் சூழ்மனையில் 2000 சதுரமீட்டர் உபயோகிக்கும் பரப்பு கொண்ட இடத்தில் மேற்கூரை, சுவர்கள், மற்றும் தரையில் பதிப்பதற்கு தேவைப்படும் ஓட்டுச்சில்களுக்கான மிகப் பெரிய வணிக ஒப்பந்தம் கிடைத்தது. பிறகு ஹைதராபாத் நகரில் ஓர் ஹோட்டலின் வரவேற்பறையில் பதிக்க வேண்டியிருந்தவையும், ஸோலோவேக்கியா நகரில் ஓர் ஹோட்டலின் துருக்கிய பாணியில் அமைந்த குளியறைக்குத் தேவையானதும், கஸக்தானின் ஒரு ஹோட்டலில் அமைக்கவிருந்த அலங்காரக் குளியறையின் பனிக்கட்டி அறைக்கானவையும் என எங்களுக்கு அடுத்தடுத்து வணிகஒப்பந்தங்கள் கிடைத்தன.

இறுதியாக, ஆரோவில்லில் ஒரு நிறுவனம் மலர்ந்தது. அது எங்களுடைய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, வளைக்கப்பட்ட, வர்ணம் பூசப்பட்ட தங்கச்சில்லுகளை ஆபரணங்களை செய்வதற்கென வாங்கிக் கொண்டது. இதுவரை எங்களுக்கு சரியான முறையில் எங்களுடைய உற்பத்திப் பொருளை விற்பனை செய்வதற்கோ, இந்த தொழில்உத்தியைக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கோ நேரம் கிடைக்கவேயில்லை. அப்படி செய்ய முடிந்தால் இந்த நிறுவனத்தை இலாபகரமான முறையில் நடத்துவதில் எந்த சிரம்மும் இருக்காது. எப்படியிருப்பினும், இந்த உற்பத்தித்துறைக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. அது ஆரோவில்லுக்குப் பயன்பட வேண்டும். முடிவாக இந்த தொழிற்சாலையானது ஆரோவில்லின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக அமைந்தது, ஆரோவில்லை வளம் பொருந்தியதாக ஆக்க வேண்டும். வாணிப உலகில் சிறப்புப் பொருந்தியதாகவும், உற்பத்தித் திறன் படைத்ததாகவும் ஆக வேண்டும்.

 

இந்த துணிகரமான செயலில் ஒரு தனிப்பட்ட இடத்தில் நிற்கவும், இறுதியில் ஆரோவில்லின் தொழிற்பகுதியில் ஆராவில்லின் ஒரு உற்பத்தி நிறுவனமாக நிலையாக அமைக்கவும்தான் வருணா குழுவினர் விரும்பி, அதனையே குறிக்கோளாகவும் கொண்டுள்ளனர்.

 

இந்த “கண்ணாடியில் தங்கம்“ என்ற கலையின் படங்களைப் பார்ப்பதற்கு அணுக வேண்டிய வலைத்தளம் www.gold-in-glass.com