ஆரோவில்லிற்காக சுற்றுச்சூழலுக்கேற்ற முறையில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்து தண்ணீர் உற்பத்திசெய்யும் ஒரு விருப்பத்தேர்வு

 

வங்கக் கடலோரம் முழுவதும் அதன் நீர் ஆதாரங்களைப் பொறுத்தவரையில் நேரடியாக சுற்றுச்சூழல் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆரோவில்லைச் சுற்றியுள்ள பகுதியில் மழைப்பொழிவால் இயற்கையாக மீள்நிரப்பு செய்வதைவிட சுமார் 17 மடங்கு நிலத்தடிநீர் இறைக்கப்படுகின்றது. ஆரோவில் பகுதிக்குள் அது 6.5 மடங்காக உள்ளது. ஆரோவில் பகுதியில் பிரஞ்சு நாட்டைச்சேர்ந்த இரண்டு நீரியல் அறிவியலாளர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவே இந்த எச்சரிக்கையாகும். பல இடங்களில் ஏற்கனவே கடல் மட்டம் நிலத்தடிநீர் மட்டத்தைவிட கீழே உள்ளது; கடலூர் நீர்கொள்படுகை சரிந்து கொண்டிருக்கிறது; வானூர் நீர்கொள்படுகை கிட்டத்தட்ட அந்நிலையை அடைந்துள்ளது.

நாம் வெறுமனே பார்த்துக்கொண்டு செயல்படாமல் இருந்தால், மாற்று நீர் ஆதாரம் ஏதுமின்றி விரைவில் உப்புகலந்த நிலத்தடிநீரே நமக்கு கிடைக்கும். பொம்மையார்பாளையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க வருணா முயற்சிசெய்து வருகிறது. அது பசுமை எரிசக்தி மற்றும் மாசுபடுத்தாத இயக்க செயல்முறையைப் பயன்படுத்தும். காலப்போக்கில், இதுமட்டுமே நிலத்தடிநீரில் உப்புத்தன்மையைத் தடுத்துவிட முடியாது, ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியை நிலத்தடிநீரில் இருந்து விடுவிக்கமுடியும், மேலும் அது – சுத்திகரிப்பு நிலையத்தின் அளவைப் பொறுத்து – குறைந்தப்பட்சம் உப்புத்தன்மை ஆக்கிரமிப்பதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்.

நமது முதல் நோக்கம் ஒரு முன்மாதிரி நிலையத்தை அமைப்பதாகும், அது இவற்றை எடுத்துக்காட்டும்:

அ) நம்மிடம் ஏற்கனவே உள்ள ஆதாரங்களில் இருந்து நன்னீரை உற்பத்தி செய்யமுடியும், மேலும் அது பொருளாதாரரீதியாக சாத்தியமானது..
ஆ) மாசுபடுத்தாத முறையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யாமல் கடல்நீரில் இருந்து நன்னீரை உற்பத்தி செய்யமுடியும், மேலும் இது பொருளாதாரரீதியாக சாத்தியம்.
இ) சிறிய குடியிருப்புகள், கிராமங்கள் அல்லது சிறிய நகரங்கள் தம்மிடமுள்ள நிதிநிலைக்கு ஏற்றவாறு சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது நல்லது, அவற்றின் உள்ளுர் நிலத்தடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்புக்கு, அது ஒரு தீர்வை அளிக்கிறது, அல்லது குறைந்தப்பட்சம் மாற்றாக உள்ளது.

நமது இரண்டாவது நோக்கம், முன்மாதிரி நிலையம் அமைக்கப்பட்டு இயங்கியதும், கடலோர குடியிருப்புகள் மற்றும் கிராமங்கள் நமது நிலையம் மாதிரியான ஒன்றை அமைக்க உதவுதல், இவ்வாறு தற்போதைய அச்சுறுத்துலான நிலைமையை தவிர்த்தல், மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த ஒரு நீர் மேலாண்மை தீர்வைக் கண்டறிய முடிதல்.

நமது மூன்றாவது நோக்கம், ஆரோவில்லிற்கும் இப்பகுதி முழுவதற்கும் ஒரு மாற்று நீர் ஆதாரத்தை அளிப்பதாகும். இது ஆரோவில்லை நிலத்தடிநீர் சார்பிலிருந்து இருந்து விடுவித்து அதன் முதல் அகக்காட்சியான 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக ஆக்குவதற்கு உதவும்.

ஒருவர் நினைக்கூடியது போல கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பொருளாதாரம் அளவுக்கு அதிகமானது அல்ல. கடல்நீரைச் சுத்திகரிக்கும் செலவு தாங்கமுடியாதது என்கின்ற காலம் போய் நீண்டகாலம் ஆகிறது. ஒரு கனமீட்டர் கடல்நீரைச் சுத்திகரிக்க சுமார் 2 கிவாம மின்சாரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது, இத்தொழில்நுட்பம் மேன்மேலும் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கனமீட்டர் தண்ணீர் 5 ஆரோவில்வாசிகளின் தினசரி வீட்டுப் பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீர் அளவிற்கு சரிசமமாகும், அல்லது நாம் தோட்டம் வளர்ப்பைச் சேர்த்துக்கொண்டால் பிறகு 3 ஆரோவில்வாசிகளுக்கு தேவையானது ஆகும். மேலும் 2 கிவாம என்பது ஒரு தனிப்பட்ட ஆரோவில்வாசி தினசரி பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைவிட குறைவாகும். இன்று, வெறும் 2,200 ஆரோவில்வாசிகள் 8,800 கிவாம மின்சாரத்தையும் 1,500 கனமீட்டர் தண்ணீரையும் தினசரி பயன்படுத்துகின்றனர். இதில் அனைத்து சேவைகள், தொழிற்கூடங்கள், விவசாயம் ஆகியவை அடங்கும். தற்போது உப்புகற்றப்பட்ட நீரை முழுவதும் ஆரோவில் சார்ந்திருக்க வேண்டும் எனில், ஆரோவில் தற்போது பயன்படுத்தும் 1,500 கனமீட்டர் தண்ணீரை கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும், பிறகு நமது தினசரி மின் நுகர்வு 40% அதாவது 8,800 கிவாம இலிருந்து 11,800 கிவாம ஆக அதிகரிக்கும். ஆகவே ஆரோவில்லிற்கு தேவைப்படுகின்ற, நுகருகின்ற தண்ணீர் முழுவதையும் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விநியோகிக்கும் திறன் ஆரோவில்லிற்குள்ளே நன்கு இருக்கும்

தினசரி ஒரு கனமீட்டர் நன்னீரை உற்பத்தி செய்யும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு தொடக்கச் செலவுகள் தோரயமாக 1,000 யூரோ ஆகும். முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 1,000 கனமீட்டர் நன்னீரை உற்பத்திசெய்யும் ஒரு நிலையத்தை அமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அது ஆரோவில் மொத்த நுகர்வுத் தேவைகளில் 2/3 அளவை பூர்த்திசெய்யும். ஒரு நிலையம் உற்பத்திசெய்ய 1 மில்லியன் யூரோ செலவாகும். ஆரோவில்லில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் வீட்டு உபயோகத்துக்கான தண்ணீரைச் சற்று நோக்கினால், அவருக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவை. இது நமது நிலையத்தின் செலவில் 0.05% அல்லது 500 யூரோ ஆகும். அதன்பொருள் என்னவெனில், ஒவ்வொரு ஆரோவில்வாசியும் 500 யூரோ பங்களிப்பு செய்தால், பிறகு அந்தப் பணத்தை வைத்து நாம் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க முடியும், அது அவரின் வீட்டு உபயோகத்துக்கான தண்ணீர் 100% தேவைகளை கவனித்துக் கொள்ளும். ஆயினும், விவசாயம். தோட்டம் வளர்ப்பு, தொழிற்கூடங்கள், சேவைகளைச் சேர்த்தால், ஒவ்வொரு ஆரோவில்வாசியும் ஒருநாளைக்கு சராசரியாக 680 லிட்டர் தண்ணீரை நுகர்கிறார்

 

வேறு மாற்று இல்லாத நிலையில் ஆரோவில் மற்றும் முழுப் பகுதிக்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அவசியம் என்று நாம் பார்க்கின்றோம். உப்பகற்றப்பட்ட நீருடன் ஒப்பிடுகையில் சேமிக்கப்பட்ட மழைநீரில் பல குறைபாடுகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பருவமழையின்போது மட்டுமே நீங்கள் போதிய அளவு நீரைச் சேமிக்கமுடியும், அதைப் பயன்படுத்தும் வரையில் 10 மாதங்களுக்கு சேமித்து வைக்க வேண்டியுள்ளது. கடல்நீரைச் சுத்திகரிப்பு செய்து உற்பத்தி செய்யும் நன்னீரைவிட 45 மடங்கு செலவு, நீரைச் சேமித்து வைப்பதற்கு ஆகிறது. துரதிருஷ்டவசமாக, ஓராண்டுக்கு மட்டுமே சேமிப்பக கொள்ளளவை நாம் பயன்படுத்த முடியும். அனைத்து சேமிப்பு கொள்ளவையும் முக்கியமாக பருவமழைக் காலத்தின்போது நிரப்ப வேண்டியுள்ளது, பிறகு ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு காலியாக உள்ளது. அடுத்த பருவமழையின்போது மட்டுமே சேமிப்பகத்தினுள் நீர் உள்வரும்.

சேமிப்பகத்திற்கு (நிலத்தடி நீர்த்தொட்டிகள்) ஒரு கனமீட்டருக்கு ரூ.10,000 செலவு ஆவதால், தினசரி 1000 கனமீட்டர் நீரை எடுப்பதற்கு (மொத்தமாக சுமார் 300,000 கனமீட்டர்) நமக்கு ஒரு சேமிப்பகம் தேவை, அதற்கான முதலீடு 10,000 x 300,000 ரூ = 300 கோடி. தினசரி 1000 கனமீட்டர் நீரை உற்பத்தி செய்யும் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஆகும் செலவு ரூ.7 கோடி மட்டுமே.

மழைநீர்ச் சேமிப்பில் மேலும் ஆகின்ற செலவுகள் அல்லது பிரச்சினைகள் என்னவெனில் அதை நேரடியாக குடிநீராகவோ, அல்லது வீட்டுக்கான தண்ணீராகவோ பயன்படுத்த முடியாது. அதை மேற்கொண்டு சுத்திகரிப்பு செய்யவேண்டும், ஆனால் உப்புநீக்கப்பட்ட நீர் மிகத் தூய்மையானது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

மேலும், அத்தகைய பெரிய சேமிப்பக கொள்ளளவை உருவாக்குவது (சராசரியாக ஒரு ஆரோவில்வாசிக்கு 200 கனமீட்டர் சேமிப்பக கொள்ளவு நமக்கு தேவைப்படும்) சாத்தியமல்ல, மேலும் நமது சுற்றுச்சூழலுக்கும் நல்லதல்ல. உதாரணமாக, கான்கிரீட்டினால் 200 கனமீட்டர் கொள்ளளவு நிலத்தடி சேமிப்பக வசதியை உருவாக்குவதால் ஏற்படும் கரிம அடித்தடம் மிகப் பெரியது.

ஆயினும், மிக முக்கியமான அம்சம் என்னவெனில், மழையிலிருந்து சேமிக்கப்பட்ட ஒவ்வொரு கனமீட்டர் நீரும் பிற்பாடு பயன்படுத்த சேமிக்கப்படுகிறது, நீர்கொள்படுகைக்குள் நீரை கசியவிட்டாலன்றி, நாம் அதே அளவு நிலத்தடிநீரை வெளியே எடுப்போம். இதற்கு மாறாக, கடல்நீரை சுத்திகரிப்பு செய்து உற்பத்திசெய்த ஒவ்வொரு கனமீட்டர் நன்னீரும் கடைசியில் நிலத்தில் நீர்கொள்படுகைக்குள் செல்லும் அல்லது ஆவியாகும் மற்றும் சில குறிப்பிட்ட சமயத்திற்கு பின்னர் மழைப்பொழிவாக கீழே வரும்.

ஆகவே, நிதி, சுற்றுச்சூழல், நடைமுறை ஆகிய அனைத்து அம்சங்களிலும், மழைநீர் சேகரிப்பு உப்புநீக்கப்பட்ட நீருடன் போட்டியிடுகின்ற ஒரு சாத்தியமான மாற்று அல்ல.

கடைசியாக, உண்மைநிலை என்னவெனில், ஆரோவில்லிற்கு தேவையான அத்தகைய பெரிய நீர்சேமிப்பக திட்டத்தின் கட்டமைப்புக்கு தேவையான பணம், திறன், இடம் யாரிடமும் இல்லை என்பதால், மழைநீர் சேகரிப்புக்கான அனைத்து பேச்சுகள் மற்றும் திட்டங்கள் நல்ல நோக்கமுள்ள வாய்மொழி பயிற்சிவிட சற்று அதிகமாகவே உள்ளது. 50,000 பேர்கொண்ட மக்கள்தொகைக்கு 7,500 கோடி செலவில் சேமிப்பக இடம் நமக்குத் தேவைப்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.  

கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அதன் வழியில் ஏற்கனவே சென்று கொண்டிருக்கிறது. அதற்கான நிலம் வாங்கப்பட்டுள்ளது (ஆரோவில்லிடம் இருந்து), அரசாங்கத்தின் பல்வேறு துறைகளின் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெறும் கட்டத்தில் இப்போது நாம் இருக்கின்றோம். இப்போது முதல் இன்னும் 1½ முதல் 2 ஆண்டுக்குள் இச்செயல்முறை முடிந்துவிடும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இக்காலகட்டத்தின்போது கடற்கரையில் இருந்து மாத்ரிமந்திர் பகுதி வரை குழாய்களைப் பொருத்த நாம் எண்ணியிருக்கின்றோம். இந்நிலையத்தில் உடனே இயக்கக்கூடிய நிலையில் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்திரங்கள் இரண்டு கொள்கலனில் (கண்டெய்னர்) வருகின்றன. ஆகவே, இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் ஆரோவில்லிற்கான குடிப்பதற்கான /வீட்டு உபயோகத்திற்கான 1,000 கனமீட்டர் நன்னீரை தினசரி நாம் உற்பத்தி செய்யமுடியும்